உ.வே.சா.வின் என் சரித்திரம் 75 : அன்னபூரணி
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 74 : புலமையும் அன்பும் – தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம்-45 தொடர்ச்சி அன்னபூரணி ஆசிரியரது அன்பைப் பற்றி நினைத்துக் கொண்டே இராமையருடன்அவர் அழைத்துச் சென்ற வீட்டுக்குள் நுழைந்தேன். “அன்னபூரணி” என்றுஇராமையர் தம் தமக்கையை அழைத்தார். பலசமயங்களில் சாதாரணமாகத் தோற்றும் சில நிகழ்ச்சிகள் முக்கியமான சில சமயங்களில் மனத்தில் நன்றாகப் பதிந்து விடுகின்றன. என் நிலையையும் என் பசியறிந்து உணவுக்கு ஏற்பாடு செய்யும் என் ஆசிரியர் அன்பையும் நினைத்தபடியே மற்ற விசயங்களை மறந்திருந்த எனக்கு “அன்னபூரணி” என்ற அப்பெயர் ஏதோ நல்ல…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 74 : புலமையும் அன்பும்
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 73 : திருவாவடுதுறைக் காட்சிகள் 2- தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம்-45 புலமையும் அன்பும் குருபூசைத் தினத்தன்று இரவு ஆகாரம் ஆனபிறகு அங்கே நடைபெறும் விசேடங்களைப் பார்க்கச் சென்றேன்.சிரீ சுப்பிரமணிய தேசிகர் ஓர் அழகிய சிவிகையில் அமர்ந்து பட்டணப் பிரவேசம் வந்தார். உடன் வந்த அடியார்களின் கூட்டமும் வாண வேடிக்கைகளும் வாத்திய முழக்கமும் அந்த ஊர்வலத்தைச் சிறப்பித்தன. பல சிறந்த நாதசுவரக்காரர்கள் தங்கள் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தினர். சிவிகையின் அலங்காரம் கண்ணைப் பறித்தது. பட்டணப் பிரவேச காலத்தில் சிசியர்கள் வீடுகளில் தீபாராதனை…