கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 42 : தாமரைக் கண்ணி நிகழ்ந்தன கூறல்
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 41 : 8. கடல்நகரில் தங்கிய காதை-தொடர்ச்சி) பூங்கொடி தாமரைக் கண்ணி நிகழ்ந்தன கூறல் தகவுரை கேட்டோர் அகமிக வுருகிஇன்னுஞ் சின்னாள் இருந்திடல் வேண்டும்என்ன நயந்தனர்; எழிற்பூங் கொடியும்ஆண்டுளார் பண்பொடு அவர்தம் அரசியல் 30காண்டகு நெஞ்சினள் கனிவோ டிசைந்தனள்;சின்னாள் இருந்து செந்தமிழ் பரப்பிப்பின்னர் மீளுவள் பேதுறல் தவிர்நீ’இன்னணம் தாமரைக் கண்ணி இசைத்தலும் அருண்மொழி மனநிலை கலங்கினள் ஆயினும் `கன்னித் தமிழின்விலங்குபடை படஅவ் வீரங் காட்டினள்;வாழ்கஎன் மகளே! வாழ்கஎன் மகளே!வாழ்கஎன் தமிழே! வாழ்கஎன் தமிழே!’ 40எனுமுரை கூறி இறுமாந் திருந்தனள்மனமொழி…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 41 : 8. கடல்நகரில் தங்கிய காதை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 40 : சொற்போர் புரிக-தொடர்ச்சி) அத்தியாயம் 8. கடல்நகரில் தங்கிய காதைநகரத்தார் வேண்டுதல் தாமரைக் கண்ணி தன்னொடு வந்ததோமறு பூங்கொடி தூயநல் லுரையால்திருந்திய மனத்தினர் திரள்கொடு வந்தே,`இருந்திடல் வேண்டும் இன்னும் சின்னாள்நின்னுரை கேட்டோர் நேரிய ராகிப் 5புன்முறை நீங்கிப் புந்தி தெளிந்துமல்கிருள் அகல மதியொளி பெற்றுநல்லுணர் வெய்தி நலம்பெறல் திண்ணம்ஆதலின் நங்காய்! அருளுதி, நின்னகர்ப்போதல் ஒழிமதி!’ எனுமுரை புகன்றனா 10 அக்கொடி தன்னுளம் அறிந்தவ ளாதலின்தோமறு பணிசெயத் தூயவ ளாகியதாமரைக் கண்ணி தந்தனள் இசைவே;ஆண்டிருந் தேகி அணிமலர்க் கண்ணி…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 40 : சொற்போர் புரிக
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 39 : சிறியர் செய்கை- தொடர்ச்சி) பூங்கொடிசொற்போர் புரிக பிழைஎனப் படுமேல் பேசுக அரங்கில்கழைஇனி தென்றேன் கசக்குமென் பீரேல்சான்றுடன் நிறுவுக, சால்பது வாகும்; 120நான்தரு கருத்தினை மறுத்துறை நவிலுதல்அறிவோர் கொள்கை; அதனை விடுத்துச்சிறியோர் செயல்செய முனைதல் நன்றோ?திறமிலார் செயலெதும் திருந்திய கொள்கைஉரமுளார் போக்கினை ஒதுக்குதல் இல்லை; 125 பூங்கொடி துணிபு சாதல் உறுதி, சதைபடு இவ்வுடல் 135கழுகு பருந்துகட் குணவாய்க் காட்டில்அழுகிக் கிடக்கும், அத்தகு நிலையுடல்என்னின மக்கள் எறிகல் பட்டுச்செந்நீர் சிந்திச் செந்தமிழ் காக்கமாய்தல் பெறின்நான் மனங்கொள ஏற்பேன்;…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 39 : சிறியர் செய்கை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 38 : அரங்கின் தோற்றம்- தொடர்ச்சி) பூங்கொடிசிறியர் செய்கை றற்பச் செயலென அறியார்; அறிஞர்நெஞ்சிற் பதிந்த கருத்துரை நிலமிசைவிஞ்சிப் படர்வதை விரும்பாச் சிறியர் 95புன்மைச் செயல்செயப் புறப்படல் படரிருள்புன்மைக் கணத்தைப் புறங்காட் டச்செயும்கதிரோன் தன்னைக் கையால் மறைக்கும்மதியோர் செயலினை மானும்; அந்தோ! பூங்கொடியின் கனன்றுரை நுவன்றனள் ஒருகல் நுதற்படச் செந்நீர்சிந்திச் சிவந்தன மேடையும் ஆடையும்;கனன்றனள் சொல்லினைக் கனலெனச் சிந்தினள்;பெண்மையில் ஆண்மை பிறத்தலுங் கூடும் 105உண்மை உணர்த்தினள் ஊரினர்க் கவ்விடை;`சான்றீர் பெரியீர் சாற்றுவென் கேண்மின்!ஆன்ற பெரும்புகழ்த் தமிழின் அருமைகேடுறல் நன்றோ?…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி 26 : அல்லியின் வரலாறு
(பூங்கொடி 25 : அல்லியின் மறுமொழி – தொடர்ச்சி) பூங்கொடி அல்லியின் வரலாறு `வளர்பெரு நிதியோய்! வாழ்கநீ பெரும! தளர்வுறும் நின்மனம் தகாநெறி ஒரீஇ நல்வழிப் படர்க! நானிவண் உற்றது செல்வக் கோவே செப்புவென் கேண்மோ! மகப்புனல் ஆட மயில்நகர் விடுத்துத் தகப்பன் தடையைப் பொருட்படுத் தேனாய் 45 வருமெனை மறித்து வஞ்சகஞ் செய்தனன்; வெருகன் தன்னுரை முழுதும் மெய்யென நம்பிய என்பால் நலம்நுகர்ந் ததற்பின் வெம்பி அழிந்திட வீதியில் விடுத்துக் காணா தேகினன்; கலங்கஞர் எய்தி நாணி என்னூர்…
பூங்கொடி 25 : அல்லியின் மறுமொழி
(பூங்கொடி 24 : தாமரைக்கண்ணி தோன்றிய காதை – தொடர்ச்சி) பூங்கொடி அல்லியின் மறுமொழி ‘எத்தனை முறைநினக் கியம்புவென் பெரும! வித்தக! விண்மீன் வலையினிற் சிக்குமோ? தத்தை கொடுஞ்சிறைக் கூண்டுள் தங்கிட விழைதல் உண்டோ? விடுவிடு காமம்! மழைமுகில் தொடுதர வானுயர் கோவில் அழுக்கும் இழுக்கும் பெருகி ஆங்குப் புழுக்கள் நெளிதரல் போலச் செல்வர் நெஞ்சில் தீக்குணம் நெறிந்தன போலும்; வெஞ்சினங் கொள்வாள் நின்முகம் நோக்காள் 25 வஞ்சி குறிக்கோள் வாழ்வினள் ஆதலின் விஞ்சுங் காமம் விடுவிடு’ என்றனள்; 30 அல்லியின் வரலாறு வினவல்…
பூங்கொடி 24 : தாமரைக்கண்ணி தோன்றிய காதை
(பூங்கொடி 23 : காமங் கடந்தவள் – தொடர்ச்சி) பூங்கொடி கோமகன் கலக்கம் கோமகன் விழியிற் குலமகள் படுதலும் காமங் கதுவிய கருத்தின னாகிப் படிப்பகம் புகுதப் பார்த்தனன்; `அடஓ! சித்தமும் விழியும் சேர்ந்து பதிந்திடப் புத்தகம் பயில்வோர் பொருந்திடன் அன்றோ! புத்தகம் புரட்டும் புல்லென் ஓசையும் உரவோர் உயிர்க்கும் ஓசையும் அன்றி அரவம் சிறிதும் அறியா இடமாம்; அறிவை வளர்க்கும் ஆய்வுரை நூல்பல 5 நிறைதரும் அவ்வகம் தூய்மை நிலையம்; கொள்கைச் சான்றோர் குழுமும் நூலகம்; உள்ளிற் செல்லுதல்…
பூங்கொடி 23 : காமங் கடந்தவள்
(பூங்கொடி 22 : கொழுநன் ஆவேன் – தொடர்ச்சி) பூங்கொடி காமங் கடந்தவள் நல்லியல் மாதர் நலம்பெறு வாழ்வைச் செல்வச் செருக்கால் சேர்வுறு பிறப்பால் வெல்லக் கருதின் விளைவது வேறு; 115 சொல்லக் கூசேன் மெல்லியல் மாத ரார் பிள்ளைப் பூச்சிகள் அல்லர் பெரியோய்! காமங் கதுவக் கருத்தினை விடுப்பின் நாமங் கேடுறும் நல்லறங் தீயும் தீமை பற்பல சேர்வது திண்ணம் 120 மாதரார் உளப்பாங் கியாதென உணர்ந்து காதல் மேற்கொளல் கடமை யாகும்; காமங் கடந்தவள் காமம் என்னும் கள்வன் றனக்கே புகஇடம்…
பூங்கொடி 21 – கவிஞர் முடியரசன்: கோமகன் ஆவல்
(பூங்கொடி 20 – கவிஞர் முடியரசன்: புற்றரைக் காட்சி – தொடர்ச்சி) பூங்கொடி கோமகன் ஆவல் மானிகர் விழியாள் மலர்வனம் புகுசொல் தேனெனப் பாய்ந்தது திருமகன் செவியில்; ‘ஒண்டொடி அவள்மன ஒப்புதல் பெற்றுத் தண்டமிழ் நிகர்க்கும் தையல் கொழுநன் ஆவேன் யான்’ என ஆவல் துரப்பக் காவிற் புகுந்துள பாவையைக் காண்பான் வில்விடு அம்பென விரைந்தனன் கோமகன்; பூங்கொடி வெருவுதல் புகுவோன் றன்னைப் பூங்கொடி நோக்கி ‘இகுளை! இம்மகன் என்மேற் காதல் 60 மிகுமனத் தானென மேலொரு நாளில் தேன்மொழி அனையிடம் செப்பக் கேட்டுளேன்…
பூங்கொடி 20 – கவிஞர் முடியரசன்: புற்றரைக் காட்சி
(பூங்கொடி 19 – கவிஞர் முடியரசன்: படிப்பகம் புக்க காதை – தொடர்ச்சி) பூங்கொடி புற்றரைக் காட்சி பைம்புற் பரப்புப் பசும்படாம் விரிக்கெனத் தோன்றும், இடையிடைத் துளிர்விடு செடிகள் ஈன்ற மலர்வகை எழில்பெற வரைந்த சித்திர வகையை ஒத்திடல் காணாய் ! பொய்கைக் காட்சி இந்நாள் விடுமுறை எனுஞ்சொற் செவியுறத் 30 துள்ளிக் குதிக்கும் பள்ளிச் சிறாரென வெள்ளைக் கயல்கள் விடுபுனற் பொய்கையில் தாவிக் குதிக்கும், தவஞ்செய் கொக்கு மேவிப் பற்ற முயன்றும் மீன்பெறாது ஏங்கிநின் றிரங்குதல் காண்’ என அல்லி 35 பூங்கா…
இனிதே இலக்கியம் – 11 : தமிழே இன்பம்! – முடியரசன் – இலக்குவனார் திருவள்ளுவன்
11 : தமிழே இன்பம்! – முடியரசன் தாயே உயிரே தமிழே நினைவணங்கும் சேயேன் பெறற்கரிய செல்வமே – நீயே தலை நின்றாய் இவ்வுலகில் தாள்பணிந்தேன் நீ இங்கு இலை என்றால் இன்பம் எனக்கு ஏது? பாவேந்தர் மரபுக்கவிஞரான முடியரசன் அவர்களின் ‘முடியரசன் கவிதைகள்’ தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்ட பாடல். “பிறவிகளுக்கெல்லாம் காரணமாகும் தாயைப்போன்று எங்களின் தாயாய் விளங்கும் மொழிகளின் தாயே! எங்களை இயக்கும் உயிரே! உன்னை வழங்கும் குழந்தையாகிய நான் பெறுதவற்கு அரிய பேறாய் எனக்குக் கிடைத்த செல்வமே!…
தமிழகச் சிறப்பு – கவிஞர் முடியரசன்
அலையெழு நெடுங்கடல் ஆடை உடீஇய நிலமகள் தனக்கு நிறைமதி முகமெனும் நாவலந் தீவின் நாடியாய் விளங்கும் பாவலர் புகழ்தரு பண்டைத் தமிழகம் மேவலர் அணுகா வீரங் கெழுமிய 5 காவலர் மூவர் கயல்புலி வில்லெனும் கொடிமூன் றுயர்த்திக் கோலோச் சியது; சங்கம் நிறீஇத் தமிழ்மொழி ஓம்பிப் பொங்கும் புகழ்வரப் பொலிந்தநன் னாடு; `யாதும் ஊரே யாவரும் கேளிர்’என் 10 றோதி ஓதி உயர்ந்ததோ டன்றி வருபவர் தமக்கெலாம் வணங்கி வரவுரை தருவது தொழிலாத் தான்கொண்…