மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  36

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  35 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் இயல் 13 தொடர்ச்சி “விட்டுத் தள்ளுங்கள். கழிசடையாகத் தலையெடுத்திருக்கிறது. எனக்கு இனிமேல் இது புதுக்கவலை” என்று ஏக்கத்தோடு சொன்னாள் அவள். அப்போது முருகானந்தம் மட்டும் தனியாகத் திரும்பி வந்தான். “காசு வைத்துச் சீட்டு ஆடியதற்காகப் பையன்களைப் போலீசு இலாரியில் ஏற்றிக் கொண்டு போய்விட்டார்கள். நான் போவதற்குள் பையன் கும்பலோடு இலாரியில் ஏறிவிட்டான்” என்று முருகானந்தம் கூறியதும் “அது இருக்கட்டும். காலையில் பையனைக் கவனிக்கலாம். இப்போது வேறு ஒரு காரியத்துக்கு உன் யோசனை தேவை. இந்த அம்மாள் வந்திருக்கிறார்கள் பார்?” என்று…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  35

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 34 தொடர்ச்சி)   குறிஞ்சி மலர் இயல் 13 தொடர்ச்சி அச்சகத்தில் வலது பக்கம் ஓர் உணவுவிடுதி, இரண்டுக்கும் நடுவில் ஒரு சிறு சந்து உண்டு. கொல்லைப்பக்கத்தில் உணவுவிடுதிக்கும் அச்சகத்துக்கும் பொதுவாக ஏழெட்டுத் தென்னை மரங்களோடு கூடிய ஒரு காலிமனை இருந்தது. உணவுவிடுதியின் கழிவு நீரும், அச்சகத்துக் கிழிசல் காகிதக் குப்பைகளுமாக அந்தப் பகுதி கால் வைத்து நடக்க முடியாத இடமாக இருக்கும். தினசரி காலையில் சந்து வழியாக வந்து குப்பை வாரிக்கொண்டு போகிற தோட்டியைத் தவிர அந்த…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  34

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 33 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அதிகாரம் 13 தொடர்ச்சி “கொஞ்சம் இரு அப்பா முருகானந்தம். தொல்காப்பியர் மேல் நம்முடைய அச்சுக் கோப்பாளருக்கு ஏதோ கோபம் போலிருக்கிறது. கடுஞ்சினத்தோடும் அந்தப் பேர் வருகிற இடங்களில் எல்லாம் தொல்காப்பியருடைய காலை முடமாக்கியிருக்கிறார். தெல்காப்பியர், தெல்கப்பியர் என்று கால் இல்லாமல் திணறும்படி தொல்காப்பியர் வேதனைப்படுத்தப்பட்டிருக்கிறார்.” சரி செய்து தொல்காப்பியர் கால் இல்லாமல் நின்று திண்டாடிக் கொண்டிருந்த இடங்களில் எல்லாம் கால் போட்டுத் திருத்தினான் அரவிந்தன். முருகானந்தத்துக்கு இதைக்கேட்டுச் சிரிப்புப் பொங்கியது. “காலி புரூஃபில்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  33

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 32 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 13 பாளையாந் தன்மை செத்தும் பாலனாந் தன்மை செத்தும்காளையாந் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்மீளும் இவ்வியல்புமின்னே மேல்வரும் மூப்பும் ஆகிநாளும் நாம் சாகின்றோமால் நமக்கு நாம் அழாததென்னோ?      — குண்டலகேசி வாழ்க்கையின் பொருளடக்கம் போல் வகையாக வனப்பாக அமைந்த வீதி அது. மேலக் கோபுரத்திலிருந்து மதுரை நகரத்து இரயில் நிலையம் வரையிலுள்ள வீதிக்குப் பகலும் இல்லை இரவும் இல்லை. எப்போதும் ஒரு கலகலப்பு. எப்போதும் ஒரு பரபரப்பு. கையில்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 15

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 14. தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம்  6 நிலவைப் பிடித்துச் – சிறுகறைகள் துடைத்துக் – குறுமுறுவல் பதிந்த முகம்,நினைவைப் பதித்து – மனஅலைகள் நிறைத்துச் – சிறுநளினம் தெளித்த விழி பசித்த வயிறும் கொதித்த மனமுமாகப் பூரணி என்னும் பெண் மதுரை நகரத்து நாற்சந்தியில் மயங்கி விழுந்தபோது மங்களேசுவரியம்மாளும், இந்தக் கதையின் வாசகர்களும் தான் அனுதாபப்பட்டு உள்ளம் துடித்தார்கள் என்று நினைத்திருந்தோம். ஆனால் அன்று அங்கே அந்தச் சம்பவம் நடந்த இடத்துக்கு மிக அருகில் ஓர் இளம் கவியுள்ளமும்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 14

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 13. தொடர்ச்சி)   குறிஞ்சி மலர் அத்தியாயம் 5 தொடர்ச்சி “நேற்றுவரை எனக்கு இரண்டு பெண்கள்தான். இன்றைக்கு நீ மூன்றாவது பெண் மாதிரி வந்து சேர்ந்திருக்கிறாய்; வா, என்னோடு உட்கார்ந்து ஒருவாய் சாப்பிட்டுவிட்டுப் போகலாம்” என்று அகமும் முகமும் மலர அந்த அம்மாள் அழைத்தபோது அவள் பேசாமல் எழுந்து உடன் சென்றாள். சாப்பாட்டு அறையில் மேசையின் எதிரெதிரே இலைகள் போடப்பட்டிருந்தன. சமையற்காரப் பெண் பரிமாறினாள். கை வழுக்கினாற்போல் கண்ணாடித் தகடு பரப்பிய நீண்ட மேசை அது. பூரணி தடுமாறினாள்….

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 13

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 12. தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 5 சோதியென்னும் கரையற்ற வெள்ளம்தோன்றி எங்கும் திரைகொண்டு பாய,சோதியென்னும் நிறைவு இஃதுலகைச்சூழ்ந்து நிற்ப ஒருதனி நெஞ்சம்சோதியென்றதோர் சிற்றிருள் சேரக்குமைந்து சோரும் கொடுமையிதென்னே!      — பாரதி மயக்கம் தெளிந்து கண் விழித்தபோது ஒருகணம் தான் எங்கே இருக்கிறோமென்றே பூரணிக்கு விளங்கவில்லை. ஏதோ ஒரு பெரிய வீட்டில், புதிய சூழ்நிலையில் காற்றைக் சுழற்றும் மின்விசிறிக்குக் கீழே கட்டிலில் படுத்திருப்பதை உணர்ந்தாள். பரக்கப் பரக்க விழித்தவாறே தன்னைச் சுற்றிலும் பார்த்தாள். அப்படி அவள் ஒன்றும் புரியாமல் விழித்துப் பார்த்தபோது தான் சற்றுத்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 10

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 9. தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 3 தொடர்ச்சி கமலா – அவள் தாயார், இன்னொரு பாட்டியம்மாள் – மூன்று பேராக வீட்டு வாயிலில் திண்ணையிலேயே உட்கார்ந்து ஏதோ வம்புப் பேச்சு பேசிக் கொண்டிருந்தார்கள். போகலாமா வேண்டாமா என்ற தயக்கத்துடனேயே நடந்துபோய் அந்த வீட்டு வாசலில் நின்றாள் பூரணி. பேச்சில் ஈடுபட்டிருந்த கமலாவின் கவனத்தைத் தன் பக்கம் திருப்புவதற்காக ‘கமலா’ என்று பூரணி மெல்லக் கூப்பிட்டாள். எத்தனை குரலின் ஒலிகளுக்கு நடுவே ஒலித்தாலும் தனியே ஒரு தனித்தன்மை பூரணியின் குரலுக்கு உண்டு. அந்தக் குரலிலேயே அவளை அடையாளம் கண்டு…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 9

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 8. தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 3 தொடர்ச்சி   “அக்கா! இனிமேல் அண்ணனுக்குக் கை நேரே வராம போயிடுமா?” அழுகையின் விசும்பலோடு சிறிய ஆரஞ்சு சுளைகளைப் போன்ற உதடுகள் துடிக்க பூரணிக்குப் பக்கத்தில் வந்து நின்றுகொண்டு இப்படிக் கேட்டாள் குழந்தை. அப்போது அகன்று மலர்ந்த அவள் குழந்தைமை தவழும் கண்களில் பயமும் கவலையும் தெரிந்தன. “இல்லை கண்ணே! அண்ணனுக்குக் கை சீக்கிரமே நல்லாப் போயிடும்” என்று சொல்லி குழந்தையை வாரி அணைத்துக் கொண்டாள் பூரணி. பூக்களின் மென்மைகளையும் பன்னீரின் குளிர்ந்த…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 8

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 7. தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 3   “ஓடுகின்றனன் கதிரவன் அவன்பின்ஓடுகின்றன ஒவ்வொரு நாளாய்வீடுகின்றன என்செய்வோம் இனி அவ்வெய்ய கூற்றுவன் வெகுண்டிடில் என்றே”      -நற்றிணை விளக்கம் துன்பங்களையும் தொல்லைகளையும் சந்திக்கும்போதெல்லாம், பூரணியின் உள்ளத்தில் ஆற்றல் வாய்ந்த தெளிவான குரல் ஒன்று ஒலித்தது. “தோற்று விடாதே? வாழ்க்கையை வென்று வாகை சூடப் பிறந்தவள் நீ. துன்பங்கள் உன் சக்தியை அதிகமாக்கப் போகின்றன. மனிதர்களின் சிறுமைகளையும் தொல்லைகளையும் பார்த்துப் பார்த்து உன் ஞானக் கண்கள் மலரப் போகின்றன….

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 7.

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 6. தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 2 தொடர்ச்சி   அதுவரை அவள் வீட்டில் காத்திருக்க முடியாது. மூன்று மணி சுமாருக்காவது புறப்பட்டுப் போனால்தான் மதுரையில் ஆகவேண்டிய காரியங்களைப் பார்த்துக் கொண்டு திரும்பலாம். ‘பிராவிடண்டு பண்டு’ பற்றி நினைவுறுத்தி விரைவாகக் கிடைக்கச் செய்வதற்கு அப்பா வேலை பார்த்த கல்லூரி முதல்வரைப் பார்க்க வேண்டும். வீட்டுக்காரரைச் சந்தித்து வாடகை பாக்கியைக் கொடுத்துவிட்டு ‘வீட்டை விரைவில் காலி செய்துவிடுவதாக’த் தெரிவிக்க வேண்டும். அப்பாவின் புத்தகங்களை வெளியிட்ட பதிப்பாளர் ஒருவர் புதுமண்டபத்தில் இருக்கிறார்….

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 6

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 5. தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 2 “தீயினுள் தென்றல்நீ பூவினுள் நாற்றம்நீகல்லினுள் மணிநீ சொல்லினுள் வாய்மைநீஅறத்தினுள் அன்புநீ மறத்தினுள் மைந்துநீஅனைத்தும் நீ அனைத்தின் உட்பொருளும் நீ”      -பரிபாடல் குழந்தை மங்கையர்க்கரசி புத்தகம் பார்த்துக் கொண்டிருந்த இடத்திலேயே படுத்துத் தூங்கிப் போயிருந்தாள். வீட்டுச் சொந்தக்காரர் எழுதியிருந்த கடிதத்தோடு மலைத்துப் போய் உட்கார்ந்திருந்தாள் பூரணி. மங்கையர்க்கரசியைப் போல் நானும் குழந்தையாகவே இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணிய போது மனமெல்லாம் ஏக்கம் நிறைந்து தளும்பியது அவளுக்கு….