பெற்றோர்களிடம் சொல்லி 100% வாக்களிக்கச் செய்யுங்கள்!
பெற்றோர்களிடம் சொல்லி 100% வாக்களிக்கச் செய்யுங்கள் வட்டாட்சியர் பேச்சு தேவகோட்டை: – தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் 100 விழுக்காடு வாக்களிப்பதற்கான விழிப்புணர்வு வண்ணக்கோலப் போட்டி நடை பெற்றது. விழாவிற்கு வந்திருந்தவர்களைப் பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் வரவேற்றார். தேவகோட்டை தேர்தல் துணை வட்டாட்சியர் சேது நம்பு, வருவாய் ஆய்வாளர் மயில்வாகணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேவகோட்டை வட்டாட்சியர் மங்களேசுவரி தலைமை தாங்கிப் பேசுகையில், நீங்கள் அனைவரும் உங்கள் பெற்றோரிடமும், உங்கள் வீட்டருகே உள்ள அனைவரிடமும் சொல்லி வாக்களிக்கச் …