மறைமலையடிகள் 5/5 – கி.ஆ.பெ.

(மறைமலையடிகள் 4/5 – கி.ஆ.பெ . : தொடர்ச்சி)   மறைமலையடிகள் 5/5  ‘நூறாண்டு வாழ்வது எப்படி?’ என்று ஒரு நூலை எழுதி வெளியிட்ட அடிகளார் அவர்கள் 75 ஆண்டுகளில் இயற்கை எய்தினார்கள். அவர்களது உடலை எரியூட்ட ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. அவரது உடலை எரியூட்டாமல் அடக்கம் செய்து ஒரு நினைவுச் சின்னத்தை அங்கு எழுப்ப வேண்டும் என்று அவருடைய மக்கள் மாணிக்கவாசகத்திடமும், திருநாவுக்கரசிடமும் தெரிவித்தேன். அதைக் கேட்டு அவர்கள் வருந்தி “‘அடிகளாரே தமது உடலைப் புதைக்காமல் எரியூட்ட வேண்டுமென்று கட்டளையிட்டிருக் கிறார்கள் அண்ணா” என்று…

மறைமலையடிகள் 4/5 – கி.ஆ.பெ.

(மறைமலையடிகள் 3/5 – கி.ஆ.பெ . : தொடர்ச்சி) மறைமலையடிகள் 4/5   45 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை இராயப்பேட்டை பாலசுப்பிரமணிய பக்த சன சபையில் மறைமலையடிகளார் பேசுகின்றபொழுது “கடவுள் நம்பிக்கை வர வரக் குறைந்து வருகிறது. கடவுள் இல்லை என்பவரும் உயிரோடுதான் இருந்து கொண்டிருக்கிறார்கள். நீங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்று கூறினார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த சிதம்பரம் என். தண்டபாணி(ப் பிள்ளை)யும், ச.ச.(J.S.) கண்ணப்பரும் “பெரியாரைக் கொலை செய்யச் சொல்லி மறைமலையடிகள் மக்களைத் தூண்டுகிறார்” என நீதிமன்றத்தில் ஒரு வழக்கைப் போட்டுவிட்டார்கள்.  நான் அதுசமயம்…

மறைமலையடிகள் 3/5 – கி.ஆ.பெ.

(மறைமலையடிகள் 2/5 – கி.ஆ.பெ . : தொடர்ச்சி) மறைமலையடிகள் 3/5   குறித்த நாளில் திருச்சி மலைக்கோட்டை நூற்றுக் கால் மண்டபத்தில் சைவ சித்தாந்த சபையின் ஆண்டு விழா தொடங்குகின்ற நேரம். எல்லோரும் வந்துவிட்டார்கள். 9.15 ஆகியும் தலைவர் வரவில்லை. கூட்டத்தில் ஒரு பெரிய சலசலப்பு. எல்லோர் கையிலும் துண்டு அறிக்கைகள். அதில் ‘மறைமலையடிகள் ஒரு சைவரா?’ என்ற தலைப்பில் சில கேள்விகள் அச்சிடப் பெற்றிருந்தன. இது வந்திருந்தோர் உள்ளத்தில் ஒரு குழப்பத்தையும், தலைவர் உள்ளத்தில் ஒரு வருத்தத்தையும் உண்டாக்கிவிட்டது. தலைவர் வராமைக்குக் காரணம் அது…

மறைமலையடிகள் 2/5 – கி.ஆ.பெ.

(மறைமலையடிகள் 1/5 – கி.ஆ.பெ . : தொடர்ச்சி) மறைமலையடிகள் 2/5    அவரது நூல்களிற் பல தமிழ்ப்பற்றையும் சமயப் பற்றையும் வளர்க்கக் கூடியவை. சில ஆராய்ச்சி அறிவை வளர்க்கக் கூடியவை. அவரது ஆழ்ந்த, அகன்ற நுண்ணறிவைப் பல நூல்களிலும் கண்டு மகிழலாம். அவற்றுள் சில அவரது அச்சகத்திலேயே அச்சிடப் பெற்றவை. சிலரது நூல்களிற் காணப்படுவதுபோன்ற அச்சுப்பிழைகள் எதையும் அவரது நூல்களிற் காணமுடியாது. அவர் தலைமை வகிக்காத, சொற்பொழிவு நிகழ்த்தாத, தமிழ்க் கழகங்களோ, சைவ சபைகளோ தமிழகத்தில் ஒன்றுகூட இல்லை.   1914-இல் வடநாடுகளுக்கும், 1915-இல்…

மறைமலையடிகள் 1/5 – கி.ஆ.பெ.

  மறைமலையடிகள் 1/5 – கி.ஆ.பெ. மறைமலையடிகள் சுவாமி வேதாசலம் என்கிற பல்லாவரம் உயர்திரு மறைமலையடிகள் தமிழ்த்தாயின் தவமகன். பிறப்பு : 1876இல் பிறந்த நாள் : சூலை 15 பிறந்த ஊர் :  காடம்பாடி வட்டம் : நாகப்பட்டினம் தந்தையார் பெயர் : சொக்கநாதப்பிள்ளை இளமைப் பெயர் : வேதாசலம்  படித்த கல்லூரி : நாகை வெசுலி மிசன்  சைவ ஆசிரியர் :  சோமசுந்தர(நாயக்க)ர் பொதுத் தொண்டு : 16ஆம் ஆண்டில் முதல் தோற்றம் : இந்து மதாபிமான சங்கம் திருமணம் : 17ஆம் ஆண்டில்…

“நாட்டுக்கோட்டைத் தியாகராச(ச் செட்டியா)ர் பழங்களுடன் என்னைக் காண வந்தார்’’ – மறைமலையடிகள்

தனித்தமிழ் இலக்கியத்தின் தந்தை மறைமலையடிகளின்  25.10.1937 ஆம் நாள், குறிப்பு .  : ‘‘நாட்டுக்கோட்டைத் தியாகராசச் செட்டியார் பழங்களுடன் என்னைக் காண வந்தார்’’ இதற்கு மறைமலையடிகளாரின் மகனார் மறை திருநாவுக்கரசு தரும் விளக்கம் :  இவரைத் (தியாகராசச் செட்டியாரை) தமிழ்ப் புலவர் என்றே கூறிவிடலாம். புலவர்கள் பால் அன்பும் உதவியுமுடையவர். இன்று தமிழ்நாட்டின் தனிப் பெருஞ்செல்வர் அடிகள் நூல்களை இன்றும் நாடோறுங்கற்கின்றார். மதுரையில், தியாகராசர் கல்லூரியைத் தம் உரிமைப் பொருள் கொண்டு நடத்தி வருபவர். நூல் ஆலைகள் பலவற்றின் உரிமையாளர். சிவநெறியின் பற்றாளர். அறங்கள்…

பாட்டின் இயல்பு என்ன? 3/3 – மறைமலையடிகள்

(பாட்டின் இயல்பு என்ன? 2/3 தொடர்ச்சி)   பாட்டின் இயல்பு என்ன? 3/3   இனி, இங்ஙனம் இயற்றப்படுகின்ற பாட்டு உலக இயற்கையழகுடன் பெரிதும் பொருந்தி நடத்தல் வேண்டும். இன்னும் இதனை நுணுகி நோக்குமிடத்துப் பாட்டுப் பாடுதலில் வல்லவனான நல்லிசைப் புலவனுக்கும் உலக இயற்கையினைப் பலவகை வண்ணங்களாற் குழைத்து வரைந்து காட்டுகின்ற ஓவியக்காரனுக்கும் ஒற்றுமை மிக உண்டென்பது தெள்ளிதிற் புலப்படும். ஆயினும், ஓவியக்காரன் வரைகின்ற ஓவியங் கட்புலனுக்கு மட்டுமே தோன்றுவதாகும்; நல்லிசைப் புலவன் அமைக்கின்ற பாட்டோ கண் முதலான புலன்களின் அகத்தே விளங்கும் உள்ளத்திலே…

பாட்டின் இயல்பு என்ன? 2 /3 – மறைமலையடிகள்

(பாட்டின் இயல்பு என்ன? 1/3 தொடர்ச்சி) பாட்டின் இயல்பு என்ன? 2/3    சுருங்கச் சொல்லுங்கால் எங்கெல்லாம் நமதுணர்வைக் கவர்கின்ற பேரழகு உலக இயற்கையிற் காணப்படுமோ அங்கெல்லாம் பாட்டு உண்டென்பது தெளியப்படும். ஆயினும், ஒரு நல்லிசைப் புலவனால் இயற்றப்படுகின்ற பாட்டுப்போல அது நூலினிடத்தே காணப்படுவதில்லையே யெனின்; நன்கு வினாயினாய், ஒரு நூலின்கண் எழுதப்பட்டு, உலக இயற்கையின் அழகை நமதுள்ளத்திற் தோன்றக் காட்டி நமக்கு உவப்புணர்வு பயக்குஞ் சொல்லின் தொகுதியான பாட்டு நூலின்கண் எழுதப்படுகின்ற வடிவுடைய பருப்பொருளாகும்; உலக இயற்கையின் அழகோடு ஒருங்கொத்து நின்று, கண்…

பாட்டின் இயல்பு என்ன? 1/3 – மறைமலையடிகள்

பாட்டின் இயல்பு என்ன? 1/3   முல்லைப்பாட்டு என்பதைப் பற்றித் தெரிய வேண்டுவன எல்லாம் ஆராயும்முன், பாட்டு என்பது எத்தகையது? என்று ஆராய்ந்து அறிந்து கொள்ளல் வேண்டும். பின்றைக் காலத்துத் தமிழ்ப் புலவர் பாட்டென்பது இன்னதென்றே அறியாராய்ப் புதுப்புது முறையாற் சொற்களைக் கோத்துப் பொருள் ஆழமின்றிச் செய்யுள் இயற்றுகின்றார். பண்டைக் காலத்துத் தண்டமிழ்ப் புலவரோ பாட்டு என்பதன் இயல்பை நன்கறிந்து நலமுடைய செய்யுட்கள் பலப்பல இயற்றினார். இங்ஙனம் முற்காலத்தாராற் செய்யப்பட்ட பாட்டின் இயல்பொடு மாறுபட்டுப் பிற்காலத்தார் உண்மை பிறழ்ந்து பாடிய செய்யுட்களைக் கண்டு மாணாக்கர்…

பிறமொழி எழுத்தொலிகள் தமிழில் இன்மை அதன் சிறப்பே! –

பிறமொழி எழுத்தொலிகள் தமிழில் இன்மை அதன் சிறப்பே!   முதலில் பிறந்த மொழி தமிழ்.  அதனால் தமிழ் அழிந்து  போகாமல் இருக்கிறது. தமிழ் மரபியல் கண்ட மொழி. தமிழ் வழிவழியாக  இளமையோடு வழங்கிவருகிறது. மலையாளம் 700 ஆண்டுகளுககு முன்னர்த் தமிழாக இருந்தது. கன்னடமும் துளுவும் கூட தமிழாகத்தான் இருந்தன. 1000 ஆண்டுகளுக்கு முன் கன்னடம் தமிழாக இருந்தது. மக்கள் பழகிப் பழகி வேறு மொழியாகிவிட்டது. ஆனால் தமிழ் மட்டும் இன்றும் தனித்து இயங்குகிறது. தமிழ் எந்தக் காலத்துக்கும் அழியாது. தமிழை அழிப்பதற்குக் கங்கணம் கட்டுவர்கள்…

இலக்கிய வளர்ச்சிக் கழகம், திருவாரூர் : தொடர் 79

வ.உ.சிதம்பரனார், மறைமலையடிகள், சி.இலக்குவனார் புகழ் போற்றும் விழா: புரட்டாசி 04, 2047 / செட்டம்பர் 20, 2016 மாலை 6.00 – இரவு 9.00 இலக்கிய-இலக்கணத் தொடர் கருத்தரங்கம் ஆடற்கலையரங்கம் பேச்சுக்கலைப் பயிற்சி யரங்கம் பரிசுவழங்கிப் பாராட்டரங்கம் எண்கண்மணி