பூங்கொடி 13 – கவிஞர் முடியரசன்: அடிகளார் அறிவுரை
(பூங்கொடி 12 – கவிஞர் முடியரசன்: வடிவேல் படுகொலை- தொடர்ச்சி) பூங்கொடி அடிகளார் அறிவுரை மாதே! பிறப்பும் மாய்வும் இயற்கை 80யாதே முயலினும் தடுத்திடல் அரிதே’ பெறலருங் கொழுநன் பிணியால் மாண்டிலன் பிறரெவ ரும்பெறாப் பெருநிலை பெறவே ஆருயிர் ஈங்கனன் அவனேர் வீரன்; வீரப் பெருமகன் விடுபணி தொடர்ந்து 90 புரிந்தனி ராயின் பொருந்திய துயரம் முறிந்திடும்; அவனுளம் நிறைந்திடும் ஆதலின் முயன்றுறு செல்வம் முத்தமிழ்க் கல்வி உயர்ந்திட உதவுக, உழைப்பும் நல்குக, உழைப்பினை உதவுக கோவிலில் தமிழொலி குடிபுக வேண்டி 95 மேவிய…
பூங்கொடி 12 – கவிஞர் முடியரசன்: வடிவேல் படுகொலை
(பூங்கொடி 11 – கவிஞர் முடியரசன்: வள்ளி குறிக்கோள் வாழ்வினள்- தொடர்ச்சி) பூங்கொடி பழியுரை காதை வடிவேல் படுகொலை ஆங்ஙனம் அன்றியும் அரும்பெறற் காதலர், நிலத்தினில் மடமை நிறைந்திடல் கண்டு பகுத்தறி வூட்டும் பகலவன் ஆவர் ; 70 சொல்லின் செல்வர், சோர்விலர், தொண்டர், அல்லும் பகலும் ஆருயிர்த் தமிழே வெல்லும் வகையால் வீரம் விளைத்தவர்; நல்லவர் இவரை நரிக்குணம் விஞ்சிய கொல்லும் பகைக்குணம் கொண்டோர் ஒருசிலர் 75 தூண்டுதல் செய்யத் துணிவுடன் கூடி நீண்ட புளிமரக் கிளைதனில் நேயரை அந்தோ தூக்கி ஆருயிர்…