தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார் , 1. தமிழ்க்கலை
(தமிழ்க்கலை (சொற்பொழிவுகள்): முன்னுரை – க. அன்பழகன் – தொடர்ச்சி) 1. தமிழ்க்கலை (சென்னை ஒய்.எம்.சி.ஏ. பட்டி மன்ற முதல் ஆண்டு நிறைவிழாவில் பேசியது) தமிழ் நாட்டில் சில காலமாகப் புத்துணர்ச்சி தோன்றியுள்ளது. அவ்வுணர்ச்சி ஆக்கத்திற்குப் பயன்படுமாக! இத்தகைய பட்டிமன்றங்கள் பல இந்நாட்டில் காணப்படல் வேண்டும். இயற்கைக்கு மாறான கொள்கைகளை அழித்துவிடுங்கள். ஆனால், இயற்கை நெறிப்பட்ட கொள்கைகள் இன்று அழிக்கப்பட்டு வருதலைக்காண வருந்துகிறேன். அது கூடாது. இத்துறையில் சிறப்பாக மகளிர் முயற்சி செய்தல் வேண்டும். ஆடல், பாடல், நகைச்சுவை இவை பெரிய கலைகளாம். என்…
தமிழ்க்கலை (சொற்பொழிவுகள்): முன்னுரை – க. அன்பழகன் + பதிப்புரை
தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார் முன்னுரை – க. அன்பழகன் தண்டமிழ்ப் பெரியார், சாந்தசீலர், ஒழுக்க ஒளி திரு. வி. க. அவர்களின், உயர்வெண்ணும் உள்ளத்தினின்றும் வெளிப்பட்ட ஒப்பற்ற கருத்தோடைகளிற் சில ஈண்டு தொகுக்கப்பெற்றுள்ளன. தமிழ் நாட்டின் மேடைகள் அனைத்தும், கட்சிகள் யாவும், சமயக் குழுக்கள் எல்லாம், அவரது பொன்னுரையால் பொலிவு பெற்றதை மறக்கவியலாது. தமிழும் தமிழரும் அவரது கருத்தோடையில் திளைத்து மறுமலர்ச்சி எய்தியுள்ளதையும் நாமறிவோம். அத்தகு பெரியாரின் உரை ஒவ்வொன்றும். நிகழ்ந்தபின் – தொகுக்கப்பட்டு அச்சியற்றப் பெற்றிருத்தல் வேண்டும். அதனால்,…
பூங்கொடி 3 – கவிஞர் முடியரசன்: பதிப்புரையும் முன்னுரையும்
(பூங்கொடி 2 – கவிஞர் முடியரசன்: புகழ்மாலை – தொடர்ச்சி) பூங்கொடி 3 : பதிப்புரை உலகில் பிறந்தவருட் சிலர், அவர் தம் நாட்டை, மொழியைக் காக்க உடல், பொருள், ஆவியை ஈந்துள்ளனர் என்பதை உலக வரலாறுகள் எடுத்துக் காட்டுகின்றன. அவ்வகையில் தமிழ்நாடும் குறைந்ததன்று என்று பெருமிதத்துடன் தலைநிமிர்ந்து நின்று எத்தனையோ நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறலாம். அந் நிகழ்ச்சிகளில் நினைவூட்டுவன சில; உணர்ச்சி யூட்டுவன சில; மறைந்தன பல. ஆனால், மறக்க முடியாதன சில வுள. அவ்வரலாற்று நிகழ்ச்சிகளை உள்ளத்திற் கொண்டு உணர்ச்சி குன்றா…
‘புதிய புரட்சிக்கவி’: முன்னுரை
(‘புதியபுரட்சிக்கவி’தமிழர்நெஞ்சில்எழுச்சியாய்உலவட்டும்! தொடர்ச்சி) பட்டுக்கோட்டை பன்னீர் செல்வத்தின் ‘புதிய புரட்சிக்கவி’: முன்னுரை வாழையடி வாழையென வருகின்ற தமிழ்ப் புலவர் திருக்கூட்ட மரபில், கடவுள் என்பதை முற்றாக மறுதலித்த முதற்கவிஞரான பாவேந்தர் பாரதிதாசனின் கவிதைகள் முதல் தொகுதியை நடுநிலைப் பள்ளி மாணவப் பருவத்திலே கிடைகப் பெற்று அதனில் மூழ்கித் திளைத்தவன் நான். 1956இல் இருமுறை ‘தூக்குமேடை’ நாடகத்தை மேடையேற்றிய போது கதைத்தலைவன் பாண்டியனாகத் தூக்கு மேடையில் “பேரன்பு கொண்டோரோ பெரியோரே என் – பெற்ற தாய்மாரே நல்லிளஞ்சிங்கங்காள் – எனத் தொடங்கும் பாவேந்தரின் பாடல் வரிகளை முழங்கியவன்….
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ நூல், ஆசிரியர் முன்னுரை
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ நூல் பதிப்புரை 2/2 தொடர்ச்சி) பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ நூல் ஆசிரியர் முன்னுரை உலகில் வழங்கும் மொழிகட்கெல்லாம் முற்பட்ட தொன்மை யுடையது நம் செந்தமிழ். ஆகவே அதனைப் பழந்தமிழ் என்று அழைத்துள்ளோம். இன்னும் பல அடைமொழிகளும் தமிழுக்கு உள. அடைமொழிகளைச் சேர்த்தே தமிழை அழைப்பது புலவர்களின் பெருவழக்காகும். பைந்தமிழ், நற்றமிழ், ஒண் தமிழ், வண் தமிழ், தண் தமிழ், இன்றமிழ் என்பனவற்றை நோக்குக. அதன் பண்பும் பயனும் கருதியே இவ்வாறு அழைக்கப்பட்டு வருகின்றது. மொழியே நம் விழி;…
பேரறிஞர் அண்ணாவின் குமரிக்கோட்டம் – முன்னுரை
குமரிக்கோட்டம் முன்னுரை காலம் மாறுகிறது என்பதை அறிய மறுக்கும் வைதீகர்களில் சிலருக்குத் தமது சொந்த வாழ்க்கை யிலேயே, நேரிடும் சிலபல சம்பவங்கள், மனமாற்றத்தை ஆச்சரியகரமான விதத்திலும் வேகத்துடனும் தந்து விடுகின்றன. ‘குமரிக்கோட்டம் ‘ இக் கருத்தை விளக்கும் ஓர் கற்பனை ஓவியம். இதிலே காணப்படும் சீறும் தந்தை, வாதிடும் மகன், வசீகர மங்கை, உரோசம் நிரம்பிய அண்ணன், இவர்களை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் காணலாம். பெயர்கள், குழந்தைவேலர் என்றிராது; குமரி என்று இருக்காது. ஆனால், இவ்விதமான நிலைமையிலுள்ளவர்களை, நாட்டிலே காண முடியும். மகன் தலைகால்…
புலவர் குழந்தையின் இராவண காவியம் – பேரறிஞர் அண்ணாவின் முன்னுரை
இராவண காவியம் திராவிடத் தளபதி, திரு, சி. என். அண்ணாத்துரை எம்.ஏ.அவர்களின் முன்னுரை இராவண காவியம்- திடுக்கிடுகிறீர்களா? அப்படித்தான் இருக்கும், பன்னெடுங் காலமாக இராமாயணம் படித்தும், படிக்கப் பக்க நின்று கேட்டும் வந்த மக்களல்லவா! அவர்களின் செவிக்கு. இராவணகாவியம் என்ற ஒலியே சற்றுக் கிலி தருவதாகத்தான் இருக்கும், எனினும், இந்நூல், எதிர் பாராததல்ல. காலத்தின் விளைவு, ஆராய்ச்சியின் அறிகுறி, புரட்சிப்பொறி, என்று பல கூறலாம் இதற்குக் காரணமாக, இது போல் ஒரு நூல் வெளி வந்தே தீரும் என்பதை, நாட்டு மக்களின் உள்ளத்தின்…
கைலாசத்தின் சிந்து இளவரசி – முன்னுரை
கைலாசத்தின் சிந்து இளவரசி – முன்னுரை முனைவர் கைலாசம் ‘சிந்து இளவரசி’ என்ற அதிஅற்புதமான சிறிய வரலாற்றுப் புதினத்தில் பாண்டிய நாட்டையும். சிந்துப் பேரரசையும் இணைத்துஅவற்றிலிருக்கும் ஒற்றுமைகளை அருமையாக குறிப்பிட்டுள்ளார். இந்தப் புதினத்தில் குறிப்பிட்டவை ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு எழுதப்பட்டிருக்கிறது என்பதிலும், அவை தொல்பொருள் ஆராய்ச்சிக்கு உதவும்என்பதிலும் எந்த ஐயமும் இல்லை. ‘திராவிட மரபு தோன்றிய இடம் குமரி நாடே’ என்ற கருத்தினைத் தெரிவித்தவர்கள் தேவநேயப் பாவாணரும் மற்ற மதிப்புக்குரிய தமிழறிஞர்களும். அவர்கள் சொன்னது உண்மையாகவே இருக்க வேண்டும். இந்தக் கருத்தினை மனத்தில்…
மறுமலர்ச்சித் தமிழறிஞர்கள் – முன்னுரை
மறுமலர்ச்சித் தமிழறிஞர்கள் முன்னுரை பக்தி இலக்கியக் காலக் கட்டத்தைத் தமிழின் மறுமலர்ச்சிக் காலம் என்பர். அதன் பின்னர் ஏற்பட்ட அயலவர் படையெடுப்பாலும், ஆரியப்பண்பாட்டு மொழியான சமசுகிருதக் கலப்பாலும் தமிழின்நிலை தாழ்வுற்றது. மீண்டும் இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் தமிழை மீட்டுருவாக்கும் பணியினைப் புலிப்பாய்ச்சலோடு தொடங்கியவர்கள் தமிழறிஞர்களே ஆவர். பிரித்தானியர் ஆட்சியில் நான்கு தேசிய இனத்தவரின் நிலமாக சென்னை மாகாணம் இருந்தது. அதில் ஒன்றான தமிழ்த் தேசிய இனம் மட்டுந்தான் ஆரியப் பண்பாட்டு மொழியான சமசுகிருதத்தையும், இந்தியையும் எதிர்த்துப் போரிட்டது. இதை முன் நின்று தொடங்கி வைத்த…
நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 2.
(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் : இராகவ(ஐயங்கா)ர் – 1. தொடர்ச்சி) நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் 2 முன்னுரை ஒல்காப்பெருமைத் தொல்காப்பியனார், மரபியலில், ‘மாவு மாக்களு மையறி வினவே.’ ‘மக்கள் தாமே யாற்றி வுயிரே.’ என்பனவற்றால், மானிடரை மாக்கள், மக்கள் என இருதிறத்தினராகப் பகுத்தோதினார். மாக்கள் எனப்படுவார், ஐம்பொறியுணர்வுமட்டிற் பெற்று மனவுணர்ச்சி யிலராயினாரெனவும், மக்கள் எனப்படுவார், ஐம்பொறி யுணர்வேயன்றி மனமென்பதோ ரறிவும் உடையரயினர் எனவுங் கூறுவர். இது மானிடரை அறிவுவேற்றுமைபற்றிப் பகுத்த பகுப்பாகும். இனி, அவயவவெற்றுமைபற்றி, மானிடர், ஆண் பெண் என இருதிறத்தின ராவர். ஆணியல்பு…
தமிழ்ப்புலவர் சரிதம் – பரிதிமாற்கலைஞர் : 1. முகவுரையும் முன்னுரையும்
தமிழ்ப்புலவர் சரிதம் முகவுரையும் முன்னுரையும் ஆசிரியர் ஒரோவோர் காலத்தில் மாதாந்த பத்திரிகைகளிலும், தாம் பதிப்பித்த சில நூல்களின் முகவுரைகளிலும் எழுதியுள்ள ஒரு சில தமிழ்ப் புலவர்களின் சரிதைகளை யொரு சேரத் தொகுத்துத் தனிப் புத்தகமாக வெளியிட்டால் தமிழ் பயிலும் இளைஞர்க்குப் பயன்படுமென்று கருதி, ஆசிரியர்தம் குமாரராகிய நீ.வி.கு. சுவாமிநாதன் அவர்கள் அவற்றைத் திரட்டித் ‘தமிழ்ப் புலவர் சரித்திரம்‘ எனப் பெயர் தந்து இந்நூலைப் பிரசுரித் துள்ளார். பல வாண்டுகளுக்கு முன்னர்த் தமக்குக் கிடைத்த சில ஆதாரங்களைக் கொண்டு ஆசிரியர் வரைந்த இவ்வரலாறுகளிற் கண்ட காலவரையறை…
சொல் விளக்கம்: முன்னுரையும் முற்காட்சியும் (preface & preview) – இலக்குவனார் திருவள்ளுவன்
சொல் விளக்கம்: முன்னுரையும் முற்காட்சியும் (preface & preview) நண்பர் வேந்தன் அரசு, மடலாடல் குழு ஒன்றில், “preface, preview இவ்விரண்டுக்குமே முகவுரை எனச் சொல்லலாமா?” கேட்டிருந்தார். அவ்வாறு ஒரே சொல்லைக் குறிப்பிட்டால் தவறில்லை. பொதுவாக எந்தச் சொல்லும் அச்சொல் பயன்படும் இடத்திற்கு ஏற்பவே பொருள் கொள்ளும். ஒரே பொருள் தரக்கூடிய சொற்களையும் நாம் விரும்புவதற்கேற்பப் பயன்படுத்தும் வழக்கமும் உள்ளது. preface என்பதற்கு, அணிந்துரை சிறப்புப் பாயிரம் தந்துரை தலைவாசகம் நூன்முகம் பதிகம் பாயிரம் பீடிகை புறவுரை புனைந்துரை பெய்துரை பொதுப்பாயிரம் முகவணை முகவுரை…