முற்காலத்தில் – சுருதி (இளையவள்)

மக்கள் ஆடிப்பாடி வாழ்ந்த ஊர் நேற்று அழுகுரல் எழுந்து ஊழித் தாண்டவமாடி இன்று சுடுகாட்டுச் சாம்பலாய்க்கிடக்கிறது தொடர் வேவுவிமான இரைச்சலில் மழையாயிற்று எறிகணை இழந்த உறவுகள் போக எஞ்சியவர் சித்தம் இழந்தனர் எல்லாம் சூனியமாயிற்று அழுகுரல் நிரம்பிய மண் அதிர்விலிருந்து மீளவில்லை முள்ளிவாய்க்கால் முள்ளாய் தொண்டையில் சிக்கிற்று தரவு : (இ)லியோ நன்றி : leomalar.blogspot.com http://www.yarl.com/forum3/?showtopic=103383

முள்ளிவாய்க்கால் உனக்கே சொந்தம் – கவிதை

  தமிழன் செந்நீரும் கண்ணீரும் சிந்திய முள்ளிவாய்க்கால் நினைவுகளை மறக்கமுடியுமா? அந்த நினைவுகளை வெறும் வார்த்தைகளால் கூறிவிட முடியாது அனுபவித்தவர்கள் இப்போதும் அநாதைகளாய்த்தான் அந்தரிக்கிறார்கள்!!! முள்ளிவாய்க்கால் கடற்கரை ஓரங்களில் ஐயோ.. அம்மா.. ஆ… என்ர பிள்ளை.. என்ர அம்மா.. என்ர அப்பா.. என்ர அண்ணா…….ஐயோ………. நான் என்ன செய்வேன்………………………….. என்ற அவலக்குரல்கள்தான் அதிகரித்தன அந்த நாட்களில் அப்போது கந்தகக் குண்டுகள் அப்பாவித் தமிழர் உடல்களை துளைத்துத் துவம்சம் செய்து சிதைத்து மமதை கொண்டன. காரணம் அங்கே ஏவப்பட்ட குண்டுகள் அனைத்தும் இனவாதக் குண்டுகளே அதனால்தான்…

வடக்குத்திசை – நமக்கு எமன் திசை

1. சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்று சொன்ன மகாகவியே எப்படி? கற்களினாலா? கபால ஓடுகளாலா?   2. கவசஊர்திகள் கிளறிப் போட்ட சேற்றில் கண்களைத் திறந்தபடி செத்துக் கிடந்த குழந்தையின் விழியில் நீலவானம் சிறுத்துச் சிறுத்து போர் விமானமாய்… இரத்தம் உறைந்த உதடுகளின் நெளிவில் ஏளனம்   3. சிட்னியில் சிறுவர் பள்ளியில் ‘இலங்கையின் தலை நகரம் எது?’ வினாவுக்கு விடை எழுதியது புலம் பெயர் தமிழ்க்குழந்தை ‘கொழுப்பு’   4. முகம் சிவந்தார் இட்லர் மகிந்த இராசபட்சேவைப் பார்த்து “ஆசுட்விட்சு புக்கன்…

முற்றாய் எழுக முள்ளிவாய்க்கால் நாற்றாய்- பரணிப்பாவலன்

    உற்றார் உறவுகள் உணவுக்காய் உடல்களை விற்றிட பசியுடன் விழிகள் இரண்டும் வற்றாக் கண்ணீர் வைகை ததும்பிட கற்ற கரும்புலி காடையர் பிடியில் சுற்றிய ஆடைகள் சுருங்கிச் செத்திட புற்றாய் வீழ்ந்ததே புலிப்படை கோட்டை கற்றை இனமாய் கதிர்கை இயக்கமாய் வெற்றியை மட்டுமே விளித்த தமிழராய் சாற்றியப் புகழுடன் சுற்றும் புவிக்குள்   மாற்றம் விதைத்த மறவர் கூட்டமாய் சீற்றம் கொண்டு சிங்கள நாpகளைத் தூற்றி யடித்தநம் தூயோர் எங்கே தோற்ற மறியா தொல்குடி வேந்தரே! கொற்றம் பிடிக்கவும் கொடுந்துயர் முடிக்கவும் முற்றாய்…

வன்னி மண் தின்ற பேய்கள்.. – செந்தமிழினி பிரபாகரன்

ஒன்றல்ல இரண்டல்ல நூறாயிரம்.. எம் இனம் அழிந்த சோகம் கொடும் துயரம்.. நினைந்து நினைந்து நாளுமிங்கு நாம் அழுகின்றோம்.. சிதைந்து சிதைந்து எம் இனமும் இன்னும் அழிகிறதே.. வன்னி மண் தின்ற பேய்கள்.. முப்பொழுதும் ஆட்டமிட கண்ணீரில் எம் மண்ணோ நித்தமும் குளிக்கிறதே.. ஆற்றுவார் யாருமில்லை.. யார் காப்பார் தெரியவில்லை.. நாடாண்ட இனம் இன்று நடைப்பிணமாய் வீதியிலே.. -தரவு :முகநூல்