அகல் விளக்கு – மு.வரதராசனார். 5.

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 4. தொடர்ச்சி) அத்தியாயம் 2   சந்திரனுடைய தந்தையார் சாமண்ணா, பரம்பரை நிலக்கிழார் குடும்பத்தைச் சார்ந்தவர். சந்திரனுடைய பாட்டனார், இருந்த நிலங்களோடு இன்னும் பலகாணி நிலங்களைச் சேர்த்துக் குடும்பத்திற்குப் பெருஞ்செல்வம் வைத்துச் சென்றார். சாமண்ணா குடும்பத்தில் பெரியபிள்ளை; அவருடைய தம்பி – சந்திரனுடைய சிற்றப்பா – தமக்கு வந்த சொத்தை வைத்துக் காக்கும் ஆற்றல் இல்லாதவர்; நில புலங்களைக் கவனிப்பதை விட்டுவிட்டு, நகரங்களைச் சுற்றி அங்குள்ள ஆடம்பர வாழ்வில் பற்றுக் கொண்டார். வாரத்தில் மூன்று நாட்களாவது நகரத்தில் கழித்துவிட்டு…

அகல் விளக்கு – மு.வரதராசனார். 4.

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 3 . தொடர்ச்சி) அகல் விளக்கு 4.      நெல்லிக்காய் விற்றவளும் பாக்கியமும் மற்றப் பெண்களும் இவ்வாறு அன்பு செலுத்தியது பற்றி மனம் வருந்தியது ஒரு பக்கம் இருக்க, ஆண்களிலும் பலர் அவனிடம் அன்பு காட்டியதும் எனக்கு வருத்தமாக இருந்தது. சிற்றுண்டிக் கடையில் பரிமாறுபவன் முதல் பேருந்பது விடுபவன் வரையில், பள்ளிக்கூட ஆசிரியர் முதல் கல்வி அதிகாரி வரையில் சந்திரனிடமே மிக்க அன்பு செலுத்தியதைக் கண்டேன். வந்த சில நாட்களுக்கெல்லாம் சிற்றுண்டிக் கடைக்காரன் அவனுக்கு நண்பன் போல் ஆகிவிட்டான்….

அகல் விளக்கு – மு.வரதராசனார். 3 .

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 2 .  தொடர்ச்சி)   அகல் விளக்கு.  3 .     மூன்றாம் வீட்டில் பாக்கியம் என்று ஓர் அம்மா இருந்தார். அவருடைய தம்பி கன்னெய்(பெட்ரோல்) கடையில் கணக்கு எழுதுபவர். அந்த அம்மா இளமையிலேயே கணவனை இழந்தவர். குழந்தையும் இல்லை. அதனால் அவர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார். குழந்தையாக இருந்த என்னோடும் என் தங்கையோடும் அன்பாகக் கொஞ்சுவார். ஆட்டங்களில் கலந்து கொள்வார். வீட்டில் ஏதாவது அடம் பிடித்து அழுதுகொண்டிருந்தால், எங்கள் அழுகுரல் கேட்டு விரைந்து வருவார்….

அகல் விளக்கு – மு.வரதராசனார். 2 .  

(அகல் விளக்கு – மு.வரதராசனார் 1 – தொடர்ச்சி) அகல் விளக்கு – 2 அத்தியாயம் 1 பாலாற்றங்கரையில் நானும் சந்திரனும் கைகோத்து உலாவிய நாட்கள் எங்கள் வாழ்க்கையிலேயே பொன்னான நாட்கள். நானும் அவனும் ஒரே வயது உள்ளவர்கள்; ஒரே உயரம் உள்ளவர்கள். அந்த வயதில் எடுத்த நிழற் படத்தைப் பார்த்தால் நான் கொஞ்சம் தசைப்பற்று உள்ளவனாக இருந்தது தெரிகிறது. சந்திரன் அப்படி இல்லை, இளங்கன்று போல் இருந்தான். கொழு கொழு என்றும் இல்லாமல் எலும்பும் தோலுமாக இல்லாமல், அளவான வளர்ச்சியோடு இருந்தான். அப்படி…

இலக்கிய ஆராய்ச்சி தொன்று தொட்டே சிறப்பாக உள்ளது. – மு.வ.

இலக்கிய ஆராய்ச்சி தொன்று தொட்டே சிறப்பாக உள்ளது.   இலக்கியம் தோன்றியவுடனே ஆராய்ச்சியும் தோன்றியது. தமிழ் இலக்கிய ஆராய்ச்சி பழமையானது. இலக்கிய விருந்தை நம் முன்னோர்கள் வாரி வழங்கியுள்ளனார். தலைதலைமுறையாக வழிவழியாக அதை நாம் பார்த்து நுகர்ந்து வருகிறோம். எழுத்தினால் எழுதி வைக்கும் பழக்கம் பிற்காலத்தில் ஏற்பட்டதே என்றாலும், ஆராய்ச்சி தொன்றுதொட்டு இருந்துவருகிறது. பாட்டை, ஆராய்ச்சியாளர் புகழ்ந்தனர். உரையாசிரியர்கள் ஒருபடி முன்னே போய் இது தங்கள் கருத்து, இது இதரர் கருத்து என்று காட்டினர். அறிஞர் மு.வரதராசனார்: தமிழ்த்தாத்தா: பக்கம்.6

‘திராவிடம்’ அந்தக் காலத்துத் தமிழ் இலக்கியத்தில் ஆளப்படவில்லை – மு.வ.

‘திராவிடம்’ அந்தக் காலத்துத் தமிழ் இலக்கியத்தில் ஆளப்படவில்லை – மு.வ. தமிழ் இலக்கியம் ஏறக்குறைய 25 நூற்றாண்டு் வரலாறு உடையது.# தென்னிந்தியாவின் மற்றத் திராவிட மொழிகளின் இலக்கியங்கள் கி.பி. 8 – ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தோன்றியவை. ஆகையால், அதற்கு முந்திய 12 நூற்றாண்டுக் காலத் தமிழ் இலக்கியம் ஒரு கூட்டுக் குடும்பத்தின் முதல் குழந்தை போல் தனியே வளர்ந்து வந்தது. சங்கக் காலத்துக்கும் கி.பி. 7 – நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சமற்கிருதம் கற்ற அறிஞர்களின் உறவு தமிழ் நாட்டில் இருந்திருக்கிறது. சைன…

வட இந்திய மொழிகளின் தொடர் அமைப்பு, தமிழோடுதான் ஒத்துள்ளது! – மு.வ.

வட இந்திய மொழிகளின் தொடர் அமைப்பு, சமற்கிருதத்தோடு அல்லாமல் தமிழோடுதான் ஒத்துள்ளது! இந்திய நாடு முழுதும் மிகப் பழங்காலத்தில் ஒரு மொழி பேசப்பட்டு வந்தது. அதைப் பழந்திராவிட மொழி என்று (Proto -Dravidian) என்று கூறுவர். வட இந்திய மொழிகள் பலவற்றிற்கும் தென்னிந்திய திராவிட மொழிகளுக்கும் வாக்கிய அமைப்பு முறையில் (Syntax) இன்று வரையில் ஒற்றுமை இருந்து வருவதற்குக் காரணம், மிகப் பழங்காலத்தில் இருந்து வந்த ஒருமைப்பாடே ஆகும். வட இந்தியாவில் பிராகிருதம், பாலி முதலிய மொழிகள் செல்வாக்குப் பெற்ற பிறகு, பழந்திராவிட மொழி…