இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 29 : ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 28: தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு : 29 1.4.  தலைவர் வாழ்த்து பண்டை நாளில் அரசன் பிறந்த நாளில் அவனைப் போற்றிப் புகழ்வது வழக்கம். இதனை, நாள் மங்கலம் என்று சொல்வர். அறந்தரு செங்கோல் அருள்வெய்யோன் பிறந்தநாட் சிறப்புரைத்தன்று (பு.வெ. 212) அறத்தை உண்டாக்கும் செங்கான்மையையும் அருளையும் விரும்பும் அரசன் பிறந்த நாளினது நன்மையைச் சொல்லியது.  இதனைச்,  ‘சிறந்த நாளினிற் செற்றம் நீக்கிப்   பிறந்த நாள்வயிற் பெருமங் கலமும்’ என்று தொல்காப்பியர்…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 28: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 27 தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 28  1.3 பொங்கல் வாழ்த்து   பொங்கல் வாழ்த்துக் கவிதைகள் மூலம் பாடியுள்ளார். ‘மங்கலம் விளங்கும் பொங்கல் வாழ்த்து’ என்னும் கவிதை முப்பது அடிகளைத் கொண்டது. 1964 ஆம் ஆண்டு பாடிய பொங்கல் வாழ்த்து என்னும் கவிதை பதினோரு அடிகளையும், 1965 ஆம் ஆண்டு பாடிய பொங்கல் வாழ்த்துக் கவிதை ஏழு அடிகளையும் கொண்டுள்ளது. ‘மங்கலம் விளங்கும் பொங்கல் வாழ்த்து’ புலப்படுத்தும் கருத்துகள் போற்றத்தக்கன. உழவையும் தொழிலையும்…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 27: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 26 தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 27 1.2 புலவர் வாழ்த்து   தெய்வப் புலவர் திருவள்ளுவரின் இரண்டாயிரம் ஆண்டுவிழாச்சிறப்பாகப் பாடிய கவிதை ‘வள்ளுவரின் வான்புகழ்’ என்ற கவிதையாகும். அறுபத்து மூன்று அடிகளையுடையது. நிலைமண்டில ஆசிரியப் பாவால் அமைந்தது.   திருவள்ளுவர், ஏசுகிறித்து இவ்வுலகில் பிறப்பதற்கு முன் தோன்றியவர். தமிழ்த்தாயின் இனிய புதல்வர். அவர் பிறப்பு வளர்ப்புப்பற்றி கூறப்படுவன எல்லாம் வெறும் கட்டுக் கதைகளே. நாயனார், தேவர் முதலாகப் பல பெயர் அவருக்கு வழங்கப்படுகின்றன….

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 26: ம. இராமச்சந்திரன்

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 26 3.1 திருமண வாழ்த்து  ஆய்வாளர்க்குக் கிடைத்துள்ள கவிதைகளுள் காலத்தால் முற்பட்டது. திரு. அ. கிருட்டிணமூர்த்தி திருமண வாழ்த்துக் கவிதையாகும்.62 தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியில் நடைபெற்ற தருமணத்தின்போது பாடியது. பாடிய ஆண்டு ஒன்று ஒன்பது ஆயிரத்துக்தொள்ளாயிரத் முப்பத்தைந்து. இக்கவிதை நேரிசை ஆசிரியப்பா வகையைச் சார்ந்தது. முப்பத்திரண்டு அடிகளையுடைது. இக்கவிதை. திரு. அ. கிருட்டிணமுர்த்தி தஞ்சை மாவட்டம் ஐயம்பேட்டை என்னும் ஊரைச் சார்ந்தவர். அருணாசலம் என்பவருக்கு மகனாகத் தோன்றினார். இளவயது முதலே தமிழை நன்கு கற்றவர். பிறமொழிகள்,…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 25: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 24 இன் தொடர்ச்சி) 25   இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு    வாழ்த்துக் கவிதைகள் வாழ்த்துக் கவிதைகள் என்ற பொருளில் இருபத்து மூன்று கவிதைகள் இடம் பெறுகின்றன. இக் கவிதையை திருமண வாழ்த்து புலவர் வாழ்த்து பொங்கல் வாழ்த்து தலைவர் வாழ்த்து அன்பர் வாழ்த்து படையல் வாழ்த்து என்று ஆறு பிரிவாகப் பகுக்கலாம். திருமண வாழ்த்துக் கவிதை வரிசையில் மூன்று கவிதைகள் இடம் பெறுகின்றன. அவை அ. கிருட்டிணமூர்த்தி திருமண வாழ்த்து முத்தையா செட்டியார்…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 24: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 23 இன் தொடர்ச்சி) 24 இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 24 தமிழகக் குடியரசு   அமெரிக்க நாட்டின் ஆட்சித் தலைவராக விளங்கும் குடியரசுத் தலைவர் நம் அண்ணாவைக் காண வரவில்லை. அவர்தம் அன்புச் செயல்களில் கலந்து கொள்ளவில்லை. காரணம் தமிழகம் தனிக்குடியரசாய் விளங்கி தனது அறிவு நிரம்பிய தலைவரை அனுப்பி வைக்கவில்லையே. அந்நாள் விரைவில் தேடிவருமாக என்கிறார் கவிஞர். சப்பானியச் செலவு   உழைப்பால் உயர்ந்த நாடு சப்பான், ஓங்கிய பெருமை உடைய நாடு…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 23: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 22 தொடர்ச்சி) 23 இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 23   அண்ணாவின் சிறப்பு   அறிவுடைய ஒருவரை அயல்நாட்டவரும் மதித்துப் போற்றுவர் என் பதற்கு இந்நிகழ்ச்சி ஒரு சான்றாகும். கற்போர்க்குச் சென்ற இடமொல்லாம் சிறப்பு என்னும் முதுமொழி உண்மையான்றோ? ஞாயிற்றின் ஒளியை மறைப்பவர் இஞ்ஞாலத்தில் எவரும் உண்டோ? இலர் என்று கூறலாம். ‘           அறிவுடை ஒருவரை அயலரும் போற்றுவர்             ஞாயிறு தன்னை நற்குடை மறைக்குமோ’ 58 ஐந்து நாட்கள் அன்புமிக்க தோழராய் விளங்கினார்…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 22: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 21 தொடர்ச்சி) 22 அமெரிக்காவின் அழைப்பு   இன்றைய உலகில் எங்கு நோக்கினும் போட்டியும் பூசலுமே நிலவுகின்றன. இவை நாட்டைத் துன்புறுத்தும் கேடான செய்திகளாம். அறிஞர் அண்ணா அவர்களின் ஆட்சித் திறத்தால் நம்முடைய இனிய தமிழ்நாட்டில் அமைதியும் ஒழுங்கும் குடிகொண்டு விளங்குகின்றது. இந்நிலவுலகத்தின் இதனை அறிந்த மக்கள் ஒவ்வொருவரும் தம்முடைய நாட்டில் தலைவர் அண்ணா அவர்கள் காட்சி தர வேண்டும். களிப்பினை நல்க வேண்டும் என்றே விரும்பினர். அனைவரும் அழைக்க எண்ணுகையில் எதிலும் முன்றிற்கும் செல்வச் சிறப்புடைய…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 21: ம. இராமச்சந்திரன்

  (இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 20 தொடர்ச்சி)  21    குற்றமற்ற அறநெறியாம் மக்களாட்சி நெறி முறையைப் பின்பற்றிக் மிகப்பெரிய இயக்கமாகத் திராவிட முனனேற்ற கழகத்தை அமைத்து மக்களைக் கவர்ந்தார். மக்களின் மிகப்பெரிய ஆதரவுடன் 6.3.1967 ஆம் நாளன்று தமிழகத்தின் முதலமைச்சராய் அரியணையில் அமர்ந்தார். பேச்சுத் திறன் கொண்டு மக்கள் உள்ளம் கவர்ந்து தலைவரானார். இத் தரணியில் இவர் போல் வேறு எவரேனும் உண்டோ? சொல்வீர்.  இதனை, சொல்லுந்திறன் கொண்டே தோமில் நெறியில் மக்களைக் கவர்ந்த மாபே ரியக்கம் அமைத்து முதல்வராய்…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 20: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 19 தொடர்ச்சி) இக்கவிதையின் பயன்   எளியோர்க்கு உதவ வேண்டும், ஏழைக்குக் கல்வி அறிவிக்க வேண்டும். ஏற்றத் தாழ்வை அகற்ற வேண்டும். பொய்மையை மாய்க்க வேண்டும். உண்மையை நிலைநிறுத்த வேண்டும். உயர்கணம் கொள்ளல் வேண்டும். ஏழ்மைக்கு அஞ்சாது இருத்தல் வேண்டும். இனிய சொல் பேச வேண்டும். இன்னாச் சொல் எள்ளல் வேண்டும். புகழ்மிகு செயல்கள் புரிதல் வேண்டும். புவியில் அனைவரும் போற்ற வாழ வேண்டும். நன்றே செய்தல் வேண்டும். அதுவும் இன்றே செய்தல் வேண்டும் எனும் கொள்கைகளே…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 19: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 18 தொடர்ச்சி) 19   தெய்வப் புலவர் திருவள்ளுவர் கூறிய மருத்துவர்க்கு அமைய வேண்டிய குணங்கள் (இலக்கணங்கள்) பலவும் வாய்க்கப் பெற்றவர் மருந்துவ அறிஞர் இராமச்சந்திரன். ‘           நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும்             வாய்நாடி வாய்ப்பச் செயல்’ 39 ‘           உற்றான் அளவும் பிணியளவும் காலமும்             கற்றான் கருதிச் சொல்’ 40 ‘           உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வானென்று             அப்பாலநாற் கூற்றே மருந்து’ 41 மருத்துவ முறைகளைக் கற்ற மருத்துவன், நோயாளியின்…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 18: ம. இராமச்சந்திரன்

 (இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 17: தொடர்ச்சி)  18   தேர்தல் என்றால் தேடி ஓடுவர். அனைவரும் மயங்கும்படி வாக்குறுதிகளை அள்ளி வீசுவர். இடிந்த கோயிலை எழுப்புவேன் என்று சொல்வர். காலில் விழுந்து வணங்குவர். இரவு பகல் பாராது ஓயாமல் உழைப்பர். உள்ள பொருளை எல்லாம் இழப்பர். உழைப்போர் மகிழ ஒன்றும் ஈயார். தம்முடைய பெயர் விளம்பரம் ஆக வேண்டும் என்பதற்காக வேண்டுவன எல்லாம் செய்வர். வசதியற்றுத் துன்புறும் ஏழை மாணவர்க்கு வேண்டும் உதவியைச் செய்ய விழையார். இதனை, ‘           தேர்தல் என்றால்…