கல்வெட்டுகள் வரலாறு உணர்த்துகின்றன – தி.வை.சதாசிவம்
கல்வெட்டுகள் வரலாறு உணர்த்துகின்றன கல்வெட்டுகள் என்பன கோயில் சுவர்கள், கற்பாறைகள் மலைக்குகைகள், வெற்றித் தூண்கள், மண்டபங்கள், படிமங்கள், நடுகற்கள் முதலானவற்றில் வரையப் பெற்றிருக்கும் கல்லெழுத்துகளேயாகும். செப்பேடுகளையும் கல்வெட்டுகள் என்ற தலைப்பின்கீழ் அடக்கிக்கொள்வது பொருந்தும். … கல்வெட்டுகளில் காணப்படும் செய்திகள் எல்லாம் கற்பனைச் செய்திகள் அல்ல. அவையனைத்தும் நம் முன்னோர்களுடைய உண்மை வரலாறுகளை யுணர்த்தும் பழைய வெளியீடுகளே. கல்வெட்டறிஞர் தி.வை.சதாசிவ பண்டாரத்தார்
அழித்தவர்களைப் பழி தீர்க்க வரலாறு காத்திருக்கிறது! – பாவா சமத்துவன்
அழித்தவர்களைப் பழி தீர்க்க வரலாறு காத்திருக்கிறது! தமிழைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன் என்றான் பாரதிதாசன். தமிழனையே அழித்தவர்கள் மீண்டும் மீண்டும் கூட்டு சேர்ந்து வாக்கு கேட்டு நம் வாசலுக்கே வருகிறார்கள்.. என்ன செய்யலாம் தமிழர்களே..? உன் விரலசைவிற்கு வரலாறு காத்திருக்கிறது..! பாவா சமத்துவன்
ஈழத்தமிழரைப் படுத்தும் பாடு! வருங்காலம் நம்மைப் பழிதூற்றும்!
ஈழத்தமிழரைப் படுத்தும் பாடு! வருங்காலம் நம்மைப் பழிதூற்றும்! செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு (திருக்குறள் 86) என்னும் திருவள்ளுவர் நெறி தமிழர்க்கே உரிய பண்பு என்கிறோம். தவத்தோர் அடைக்கலம் தான்சிறி தாயினும் மிகப்பே ரின்பம் தருமது கேளாய் (சிலப்பதிகாரம், அடைக்கலக்காதை) என இளங்கோஅடிகள் கூறும் அடைக்கலப்பண்பில் சிறந்தவர்கள் நாம் என்கிறோம். ஆனால், இவையெல்லாம் யாருக்காக? நம்மவர் – தமிழினத்தவர் – எனில் விருந்தினராகக் கருதுவதும் கிடையாது; அடைக்கலம் தருவதும் கிடையாது. ஒருவேளை அடைக்கல நாடகம் ஆடினாலும் அவர்களை உள்ளத்தாலும்…
கி.சிரீதரன் சொற்பொழிவு : இந்தியத் தொல்லியல் ஆய்வின் வரலாறு
தமிழ் மரபு அறக்கட்டளை சொற்பொழிவு : கி.சிரீதரன் தலைப்பு : இந்தியத் தொல்லியல் ஆய்வின் வரலாறு தை 23, 2047 / பிப். 06, 2016 ஆர்.கே. மரபு மையம்Arkay Convention Center), 146/3, இராயப்பேட்டை நெடுஞ்சாலை, மயிலாப்பூர், சென்னை 600 004 தலைப்பு பற்றி: ஒரு நாட்டின் தொன்மைச் சிறப்புமிக்க வரலாற்றை அறிய உதவும் சான்றுகளில் முதன்மையானவை தொல்லியல் ஆய்வுகள். தொல்லியல் என்னும் பெரும் பிரிவில் கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச் சுவடிகள், பண்டைய காசுகள், அகழாய்வு, சிற்பம்/ஓவியம்/திருமேனி அடங்கிய நுண்கலைகள், கட்டடக்கலை போன்றவை…
வரலாறு எழுதுவோர் தெல்காப்பியம் கற்க வேண்டும் – சி. இலக்குவனார்
வரலாற்று நூலாசிரியர்களில் பெரும்பான்மைபினர் தொல்காப்பியத்தைக் கற்றறியும் பேறு பெற்றிலர். ஆகவே தமிழர்களைப் பற்றித் தவறான செய்திகளை எழுதி விட்டனர். தமிழக வரலாறு எழுதுவோர் தொல்காப்பியத்தைக் கற்று அறிதல் வேண்டும். அப்பொழுதுதான் தமிழர்களைப் பற்றிய உண்மையான வரலாற்றினை எழுதுதல் கூடும். செம்மொழிச் செம்மல் முனைவர் சி. இலக்குவனார் : தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 127
தொல்காப்பியமே கிறித்து காலத்திற்கு முற்பட்ட வரலாற்று வாயில் – சி.இலக்குவனார்
கிறித்து காலத்திற்கு முற்பட்ட தமிழ்நாட்டின் நிலையையும், தமிழ் மொழி இலக்கிய நிலையையும் அறிவதற்குத் தொல்காப்பியமே வாயிலாய் அமைகின்றது. எல்லா வகையிலும் தமிழ்நாட்டின் வரலாற்றில் தொல்காப்பியமே ஒரு எல்லைக் கல்லாக விளங்குகிறது. தொல்காப்பியர் இலக்கண ஆசிரியராக மட்டுமல்லாமல் புலவராக, மொழியியலாளராக, மெய்யியலாளராக, வரலாற்றறிஞராக மன்பதையியல் அறிஞராகத் திகழ்கிறார். தொல்காப்பியர் தமிழிலும், சமசுகிருதத்திலும் சிறந்த புலமையாளராக விளங்குகிறார். தொல்காப்பியம் அவரது அறிவுக்குச் சான்றாய்த் திகழ்கின்றது. – பேராசிரியர் சி.இலக்குவனார், தொல்காப்பிய ஆங்கிலமொழிபெயர்ப்பும் திறனாய்வும்: (Tholkāppiyam in English with critical studies) பக்கம் 20
மாந்தர்குல வரலாறு – சுமதிசுடர்
கடற்கோளால் சிதறுண்டு கடல்கடந்து சென்றோம்; கற்றறிவின் துணைகொண்டு சூழலுக்குள் வாழ்ந்தோம்; அடக்குமுறை கொள்கையாளர் ஆட்சியினைப் பற்றி அழித்துவிட்டார் பண்பாட்டுக் கூறுகளை மெல்ல; கடந்துவந்த பயணத்தை ஓரளவே பதிந்தோம்; காணாமல் விட்டவற்றை கண்டறிந்து பதிவோம்; அடங்காத உணர்ச்சிநிலை ஆய்வுகளால் பயன்என் ஆய்வுசெய்யும் சித்தனாகி அறம்செழிக்கச் செய்வோம். – சுமதிசுடர், பூனா
தேனி மாவட்டம் – வரலாற்றுப்பார்வை : வைகை அனீசு
தேனி மாவட்டத்தில் கற்புக்கரசி கண்ணகி கால் பதித்து நடந்து வந்த பகுதி கம்பம் பள்ளத்தாக்கு ஆகும். சேர மன்னன் எழுப்பிய மங்கள தேவி கண்ணகி கோயில், முல்லைப்பெரியாறு அணை கட்டிய பென்னிகுக்கு கால்பதித்த இடம், மாவீரர் கான்சாஃகிப்பு சாலை அமைத்த கம்பம் சாலை, கான்சாஃகிப்பு இறப்பிற்குப் பின்னர் பெரியகுளம் பகுதியில் அவரது ஒரு கால் அடக்கம் செய்யப்பட்ட நவாபு பள்ளிவாசல் எனப் பல உண்டு.(கான்சாஃகிப்பு உடல் எட்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டு எட்டு இடங்களில் அடக்கம் செய்யப்பட்டது.) சோழ மன்னர்கள், பாண்டிய மன்னர்கள், மதுரை சுல்தான்கள்,…