புதுவருட நிகழ்வுகளுக்குத் தமிழ்த் தேசிய இளைஞர் கழகத்தால் நிதியுதவி

40ஆம் ஆண்டு நிறைவு- புதுவருட நிகழ்வுகளுக்குத் தமிழ்த் தேசிய இளைஞர் கழகத்தால் நிதியுதவி   வவுனியா கோவில்குளம்  இறொக்கட்டு விளையாட்டுக் கழகத்தின் 40 ஆம்  ஆண்டின் நிறைவு விழாவும், சித்திரைப் புதுவருட விழாவும் எதிர்வரும் 13,14  ஆம்நாள்களில் நடைபெறவுள்ளன. இந் நிகழ்வுகளுக்குத் தமிழ்த் தேசிய இளைஞர் கழகத்தின் சார்பில் பரிசுப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக ஒருதொகைப்பணம் கையளிக்கப்பட்டது.   இந் நிகழ்வு தமிழ்த் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன் தலைமையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான சனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மாவட்ட…

உண்ணாநோன்பைக் கைவிட்ட உதயகலா!

தனிமைச் சிறையில் இருந்து விடுவிப்பு! ஈழத் தமிழப் பெண் உதயகலா உண்ணாநிலையைக் கைவிட்டார்!   தனிமைச் சிறையில் இருந்து தன்னைக் காவல்துறையினர் விடுவித்ததை அடுத்து, ஈழத் தமிழ்ப் பெண் உதயகலா உண்ணாநிலைப் போராட்டத்தைக் கைவிட்டுள்ளார்.   இலங்கை வவுனியா பகுதியிலிருந்து தயாபரராசு என்பவர் கடந்த 2014-ஆம் ஆண்டு தன் குடும்பத்தினருடன் ஏதிலியராக தனுசுக்கோடிக்கு வந்தார். தயாபரராசு, அவர் மனைவி உதயகலா, மூன்று குழந்தைகள் ஆகியோரிடம் உசாவிய (விசாரணை நடத்திய) காவல்துறையினர், தயாபரராசு மீது கடவுச்சீட்டுச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில்…

பட்டினிப்போட்டுக் கொல்வதுதான் நல்லாட்சி அரசின் இலக்கணமா?

விடுதலை ஒன்றே தீர்வு! எங்கள் உறவுகளை எங்களோடு கூடி வாழவிடு!   தமிழ் மக்களின் உன்னத உணர்வான தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழுவும், கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் குடும்பங்களின் வவுனியா சங்கத்தினரும் இணைந்து, பன்னாட்டுப் பெண்கள் நாளாகிய 2016 மார்ச்சு 08 அன்று வவுனியா பொங்குதமிழ் நினைவுத்தூண் முற்றத்தில் காலையிலிருந்து மாலை 4.00 மணிவரை அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை நடத்தினர்.  ‘விடுதலை ஒன்றே தீர்வு! வேண்டாம் இங்கு ஏமாற்றுப்பேச்சு’, ‘பட்டினிப்போட்டு கொல்வதுதான்…

வவுனியா மன்னகுளத்தில் வள்ளுவர் முன்பள்ளி

புலம் பெயர் உறவுகளுக்குப் பாராட்டுகள்!   புலம்பெயர்ந்து வாழும் உறவுகளின் நிதிப் பங்களிப்பில் வவுனியா மன்னகுளம் ஊரில் கட்டப்பட்ட வள்ளுவர் முன்பள்ளி தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து வாழும் உறவுகளின் நிதிப் பங்களிப்பில் வவுனியா மன்னகுளம் ஊரில் கட்டப்பட்ட வள்ளுவர் முன்பள்ளி திறப்பு விழா நடைபெற்றது. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இவ்விழாவல கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது, தொடக்கநிலை கற்றல் தான் ஒரு மனிதனுக்கு எழுத்தறிவிக்கிறது. வாழ்வதற்கு மிகவும் தேவையான எழுத்தறிவையும், வாசிப்பறிவையும் கற்பிக்கும் முன்பள்ளி ஒன்று…