தனித் தமிழீழம் வேண்டும்!
தமிழீழம் எனது ஈழக் கனவு தனித் தமிழீழம் வேண்டும் – அதில் தமிழினம் மட்டுமே வாழ வேண்டும். புரட்சி வெடிக்கும் முகத்தில் – துளிப் புன்னகை மலர வேண்டும். வெறியாட்டம் கண்ட கண்கள் – இனி வாண வேடிக்கைகள் காண வேண்டும். சயனைடு எடுத்தக் கைகள் – இனிச் சாகுபடி செய்ய வேண்டுமே தவிரச் சாகும்படிச் செய்யக்கூடாது. சாவுகளைக் கண்ட மனிதர்கள் – மனச் சாந்தத்தோடு வாழ வேண்டும். ஆயுதம் ஏந்தி நடந்த கால்கள் – கடவுள் ஆலயம் நோக்கி நடக்க வேண்டும். வெடிகுண்டு…
ஈழத்தின் கண்ணீர்தானோ !
அலைகள் தழுவும் தேசத்தில் கொலைகள் தொடர்வதும் ஏனோ? விடுதலை வேண்டி வாழும் மாந்தர்க்கு உரிமை மறுப்பது தருமம்தானோ? நாற்புறம் சூழ்ந்த கடல் நீரினிலே உவர்ப்பை நிறைத்தது எங்கள் கண்ணீர்தானோ? – விக்கி http://eelamkavithaigal.blogspot.in/2009/12/blog-post_5528.html
விதைத்துப்போயிருக்கிறர்கள்
தமிழ்த்தாயே மரம் தாங்கும் மண்ணாய் இலை தாங்கும் மரமாய் காய் தாங்கும் கொடியாய் சேய் தாங்கும் தாயாய் நீயே தாய் நாங்கள் சேய் ஈழத்தின் முடிவிலா கொலைகள் கண்டு முடியாமலே போகிறது உன் இரங்கற்பா.. ! ஈழத்திற்காக இறந்தவர்கள் எல்லாரும் சிதை சிதைந்து போகவில்லை விதை விதைத்துப் போயிருக்கிறார்கள்…! – விக்கி நன்றி: ஈழம்கவிதைகள் வலைத்தளம் http://eelamkavithaigal.blogspot.in/