நட்சத்திரப் பொறியாளர் விருது பெற்றார் வித்தியாசாகர்!

  குவைத்து எண்ணெய்வள நாட்டில் அமைந்துள்ள நமது தமிழர்களின் அமைப்புகளில் தொழில்சார்ந்த அமைப்பான ‘தமிழ்நாடு பொறியியல் குழுமம்‘ சால்மியா எனும் நகரிலுள்ள “தி இரேடிசன் ப்ளு” உயர்தர நட்சத்திர விடுதியில் 02.11.2016 அன்று   நட்சத்திரப் பொறியாளர் விருது வழங்கும் விழாவினை எடுத்து நடத்தியது. ‘குவைத்து எண்ணெய் நிறுவனத்தின் முதன்மைத் தலைமை அதிகாரி (CEO of KPC) முன்னிலை வகித்தார்.    உலகத்தர வரிசையில் பல முன்னிலை நிறுவனங்கள் விருதிற்கு விண்ணப்பித்திருந்தனர். ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கியது த.பொ. குழுமம்.  …

பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை 1/3 – வித்தியாசாகர்

பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை   – கவிமாமணி வித்தியாசாகர் செவ்வி  கண்டவர் : இலக்கியவேல் சந்தர் சுப்பிரமணியன் 1/3   இணையத்திலும், இலக்கிய உலகிலும் பல்வேறு அன்பர்களைத் தன்  சுவைஞர்களாகக் கொண்டு, தமிழ் மண்ணை விட்டுக் குவைத்தில் பணிசெய்யும் பொழுதும், தமிழிலக்கிய வானில் நட்சத்திரமாய் மின்னும் எழுத்தாளர், கவிஞர் திரு வித்யாசாகர் அவர்களுடன் இலக்கியவேல் ஆசிரியர் சந்தர் சுப்பிரமணியன் மேற்கொண்ட  செவ்வி. ?. வணக்கம். குவைத்தில் இருந்து பணியாற்றும் நீங்கள்,  தமிழ்மொழியின் மீது அளவற்ற காதல் கொண்டுள்ளதற்கான  பின்புலம் என்ன?  …

காற்றுவீசும் திசையெல்லாம் நின்று நீயும் வாழ்வாய் தமிழினமே! – வித்யாசாகர்

 காற்றுவீசும் திசையெல்லாம் நின்று நீயும் வாழ்வாய் தமிழினமே! தமிழினமே! தமிழினமே! என் தமிழினமே! விண்ணை விரல்நுனியில் சுமக்கவும் உயரே பறந்து வான்முட்டி நிற்கவும் என்றோ கற்ற தமிழினமே1 காலத்தைக் காற்று போல கடந்துவந்துள்ளாய், உலகின் நாகரிகத்தில் உயிரெனக் கலந்துள்ளாய், ஊரின் பேரின் வாழ்தலின் இடுக்களில் மொழியாய் நிறைந்திருக்கிறாய் தமிழினமே! தமிழினமே! தமிழினமே! என் தமிழினமே! எங்கிருக்கிறாய் இன்று தமிழினமே! யாருக்கு கீழ்நின்று உன் மூச்சை விடுகிறாய் யாரை நம்பிக் கொண்டு இன்னும் உனை யிழக்கிறாய்! கடல் தின்றதில் கலங்காத நீ காற்று, புயலென வீசியதில்…

தொட்டால் உயிர் சுடுமெனில் தொடாதே சாதியை! – வித்யாசாகர்

தொட்டால் உயிர் சுடுமெனில் தொடாதே சாதியை – வித்யாசாகர்   துருப்பிடித்த சாதி – அது திருத்திடாத நீதி, துண்டுத் துண்டாகி – இன்று உயிர்களைக் குடிக்கிறது சாதி.. தலைமுறையில் பாதி – அது கொன்று கொன்று விழுவதேது நீதி ? காதல்சருகுகளை – பிஞ்சுகளைக் கொன்று கடும் நஞ்சாய்ப் பரவுகிறது சாதி.. கருப்பு வெள்ளையில்லா ஒரே சிவப்பு இரத்தம், அது சிந்திச் சிந்தி நனைகிறது பூமி, செத்துமடிபவர் கீழெனில் சாகடிப்பவரை மேலென்னுமா சாதி ? “ச்சீ”.. கேட்கவே வெட்கம் செங்கல் வேகலாம், சாதியில்…

செங்கை நிலவனுக்கு வளைகுடா வானம்பாடியினர் பாராட்டு!

வானம்பாடிக் கவிஞர்கள் சங்கத்தின் திங்கள் விழா! படஉருவாக்குநர்க்குப் பாராட்டு!   குவைத்து வளைகுடா வானம்பாடிக் கவிஞர்கள் சங்கத்தின் திங்கள் விழா, ஆடி 23, 2045 / ஆக.8, 2014 வெள்ளி மாலை 5.30 மணிக்கு மங்காப்பு விழா அரங்கில் மிகச்சிறப்பாக   நடைபெற்றது. இவ்விழா,குவைத்து தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த “இருக்கு ஆன இல்ல” படஉருவாக்குநர்களைப் போற்றும் வகையிலும், அவர்களுள் ஒருவரான திரு செல்லத்துரை, பாடலாசிரியராக அறிமுகமான செங்கை நிலவன் ஆகியோரைப் பாராட்டும் வகையிலும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி நடந்தது.   விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் நிறுவனர்…