தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் அறிவிப்பு

தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள்  தமிழுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடும் தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அந்த வகையில், 2021ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளை முதல்வர் மு.க.தாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்துத் தமிழக அரசு செய்திக்குறிப்பில் பின்வருமாறு தெரிவித்துள்ளது. தமிழ் மொழி – இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்மன்பதை உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள், தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை ஏற்படுத்தி வழங்கிவருகிறது. பேரறிஞர் அண்ணா விருது – நாஞ்சில் சம்பத்துமகாகவி…

அகரமுதலி விருதுகள், கடைசி நாள் 31.08.2021

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் சார்பில் பின்வரும் விருதுகள் வழங்கப்பெறுகின்றன. விருதிற்கு விண்ணப்பம் பெறக் கடைசி நாள்: ஆவணி 15, 2052 / 31.08.2021 தூய தமிழ்ப் பற்றாளர் விருது நற்றமிழ்ப் பாவலர் விருது தூய தமிழ் ஊடக விருது தேவநேயப் பாவாணர் விருது வீரமாமுனிவர் விருது விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி அந்தந்த விண்ணப்பங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. நேரில் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: இயக்குநர், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்ககம், நகர் நிருவாக அலுவலக வளாகம் முதல் தளம், எண்:…

சிங்கார வேலர் விருது : நோக்கத்தைத் தெளிவு படுத்துக! -இலக்குவனார் திருவள்ளுவன்

சிங்கார வேலர் விருது : நோக்கத்தைத் தெளிவு படுத்துக! அறிஞர்களையும் ஆன்றோர்களையும் அரசு மதிக்க வேண்டும். அதன் அடையாளமாகத்தான் தமிழக அரசு விருதுகள் பலவற்றை வழங்கி வருகிறது; திருவள்ளுவர் திருநாள் விருதுகள் எனவும் சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருதுகள் எனவும் இரு நிலைகளில் வழங்குகிறது. அவ்வப்பொழுது புதிய விருதுகளை அறிவிப்பதுபோல் இவ்வாண்டு புதியதாகவும் சில விருதுகளை அறிமுகப்படுத்துகிறது. திருவள்ளுவர் விருது (1986 முதல்) மகாகவி பாரதியார் விருது (1997 முதல்) பாவேந்தர் பாரதிதாசன் விருது (1978 முதல்) தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது (1979 முதல்) கி.ஆ.பெ….

சிங்கப்பூரின் தந்தை (இ)லீ-குவான்-இயு வின் பிறந்த நாள் விழா, சென்னை

தமிழ்நாடு – சிங்கப்பூர் நட்புறவுக் கழகத்தின் சார்பில், செந்தமிழ் மொழியை சிங்கப்பூர் அரசாங்கத்தின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக்கிய சிங்கப்பூரின் தந்தை நினைவில் வாழும் (இ)லீ-குவான்-இயு வின் பிறந்த நாள் விழா, புரட்டாசி 01, தி.பி. 2049  திங்கட்கிழமை 17.9.2018 மாலை 5.30 மணியளவில், சென்னை மயிலாப்பூர் “பாரதீய வித்யாபவன்” குளிரி முதன்மை அரங்கில் நடைபெறுகிறது. இக்கழகத்தின் அமைப்பாளர் தஞ்சை கூத்தரசன் வரவேற்றுப் பேசுகின்றார். நா.சந்திரபாபு விழாவிற்குத் தலைமை ஏற்கிறார். சிங்கப்பூர் நாகை தங்கராசு (இ)லீ-குவான்-இயுவின் படத்தினைத் திறந்து வைக்கிறார். பேராசிரியர் மறைமலை இலக்குவனார் சிறப்புரையாற்…

கவிதை உறவு 45 ஆம் ஆண்டுவிழா

கவிதை உறவு 45 ஆம் ஆண்டுவிழா   கவிதைஉறவு 45 ஆம் ஆண்டு விழாவும்  ஏர்வாடியாரின் நூல்களின் வெளியீடும் கவிதை உறவுப் பரிசுகள், விருதுகள் வழங்குதலும் சென்னை வாணி மகாலில் மிகச்சிறப்பாக நடந்தது.  முனைவர் நல்லி குப்புசாமி(செட்டி) தலைமையில் இல கணேசன் பரிசுகள் விருதுகள் வழங்கினார். கவிப்பேரருவி தமிழன்பன் சிறப்புரையாற்றினார்.  ஏர்வாடியார் முதல் நூல் 1976 இல் கவியரசர் கண்ணதாசன் வெளியிட்டார். இவ்விழாவில் 100ஆவது நூலைத் தமிழன்பன் வெளியிட  பபாசி தலைவர் காந்தி கண்ணதாசன் பெற்றுக்கொண்டார்.   முனைவர் உலகநாயகி, பேராசிரியர்  இரா.மோகன், கவிஞர்…

ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவை 26 ஆம்ஆண்டு இலக்கியப் போட்டிகள்

ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவை 26 ஆம்ஆண்டு இலக்கிய விழா அறிவிப்பு   வருகிற மார்கழி 21, 2046 / 27.12. 2015 ஞாயிறு காலை 09 மணிமுதல் மாலை 06 மணிவரை ஈரோடு தமிழ்ச்சங்கப்பேரவையின் 26ஆம் ஆண்டுவிழா ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப் பள்ளி யில் நடைபெறும்.   விழாவில் தமிழிசைஅரங்கம், படத்திறப்பு, வாழ்த்தரங்கம், பட்டிமன்றம், சிறந்த நூலுக்குப் பரிசு, விருதுகள், பட்டங்கள், பரிசுகள் வழங்கல் நடைபெறும். விருதுகள் :   திருவள்ளுவர் விருது : திருக்குறள் தொடர்பான நூல்கள் எழுதி, திருக்குறள் பரப்பும் பணியைப்…

அறிஞர்கள், அமைப்பினருக்கான தமிழக அரசின் விருதுகள் – முதல்வர் வழங்கினார்

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி செ.செயலலிதா அவர்கள் புரட்டாசி 25, 2046 / 12.10.2015 அன்று தலைமைச் செயலகத்தில், 2014, 2015-ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்த்தாய் விருது, கபிலர் விருது, உ.வே.சா. விருது, கம்பர் விருது, சொல்லின் செல்வர் விருது, அறிஞர் போப்(பு) விருது, உமறுப்புலவர் விருது ஆகிய விருதுகளையும், 2013, 2014-ஆம் ஆண்டுகளுக்கான முதலமைச்சர் கணிணித் தமிழ் விருதுகளையும், 2015-ஆம் ஆண்டிற்கான இளங்கோவடிகள் விருதினையும், விருதாளர்களுக்கு வழங்கிச் சிறப்பித்தார்கள்.   தமிழுக்குத் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள்…

மணவை முசுதபா 80 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா

  அறிவியல்தமிழறிஞர் திரு. மணவை முசுதபா அவர்களின் 80 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா வருகிற ஞாயிற்றுக்கிழமை வைகாசி 31, 2046 / சூன் 14, 2015 மாலை சென்னையில் இராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள இந்திய அலுவலர் சங்ககக்கட்டடத்தில் மாலை 5.00 மணிமுதல் இரவு 8.30 மணி வரை நடைபெறவுள்ளது.    தேநீர் விருந்துடன் தொடங்கும் விழா, இரவு விருந்துடன் நிறைவடைகிறது.   அந்நிகழ்வின் பொழுது அறிவியல் தமிழ் அறக்கட்டளை அமைப்பினை அதிகாரப்பூர்வமாக திறந்துவைக்க விண்ணியல் அறிவியல் துறையில் அருந்திறல் ஆற்றியுள்ள மதிற்பிற்குரிய முனைவர்…

யாருக்கும் வெட்கமில்லை! – இலக்குவனார் திருவள்ளுவன்

யாருக்கும் வெட்கமில்லை! (இளந்தமிழறிஞர்களுக்கான  குடியரசுத் தலைவரின் செம்மொழி விருது வழங்கப்படாமை குறித்த வினாக் கணைகள்)     தன்மானமும் தன்மதிப்பும் மிக்க  வீரப் பரம்பரை என நாம் நம்மைச்  சொல்லிக் கொள்வதற்கு வெட்கப்பட வேண்டும். மொழி காக்கவும் இனம் காக்கவும் உயிர் நீத்த வீர வணக்கத்திற்குரியோர் பிறந்த குலத்தில்தான் நாமும் பிறந்துள்ளோம் என்பதைத் தவிர நமக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை முதலான பண்புகள் இல்லை என்பதே உண்மை. ஈழத்தில் இனப்படுகொலை புரிந்தவர்களை அரியணையில் ஏற்றியதில் நமக்கும் பங்கு உள்ளது என்பதே நம் இழிந்த நிலையை…

தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா

அன்புடையீர், வணக்கம். தி.இரா.நி.பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா ஆவணி 9. 2045 /ஆக.25-ஆம் நாள், திங்கள் கிழமை காலை 10 மணியளவில் சென்னை, காட்டாங்குளத்தூர் வளாகத்தில் உள்ள முனைவர் தி.பொ. கணேசன் அரங்கத்தில் நடைபெற உள்ளது. தமிழ்ப் படைப்பாளிகளையும், தமிழறிஞர்களையும் விருதளித்துச் சிறப்பிக்கும்  இவ் விழாவில் கலந்துகொண்டு, சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம். நன்றி.. முனைவர் இல. சுந்தரம் : +91-98423 74750