கமலைகள் உறுபயனிழந்து கோழிகள் அடைக்கப் பயன்படல்
தேனிப் பகுதியில் நீர்இறைக்கப் பயன்பட்ட கமலைகள் தற்பொழுது கோழிகள் அடைத்து வைக்கப் பயன்பட்டு வருகிறது. தேவதானப்பட்டி பகுதி வேளாண்மை சார்ந்த பகுதியாகும். இப்பகுதியில் தோட்டங்கள், வயல்கள், தோப்புகள் என ஏராளமாக இருந்தன. இவைதவிர தேவதானப்பட்டி பகுதியை வளம் சேர்க்க மஞ்சள் ஆறு, வைகை ஆறு, பச்சிலைநாச்சியம்மன், ஆறு எனப் பல ஆறுகளும், நூற்றுக்கும் மேற்பட்ட குளங்கள், கண்மாய்கள், நூறாயிரத்திற்கும் மேற்பட்ட கிணறுகள் என இருந்தன. இதன் மூலம் இப்பகுதியில் வேளாண்மை செழித்து வந்தது. கடந்த பத்தாண்டுகளாக மும்மாரி மழை பொழிந்த இப்பகுதி தற்பொழுது…
பால்சாமி (நாடார்) கல்வி அறக்கட்டளை: ஊக்கத்தொகை வழங்கும் விழா
பால்சாமி (நாடார்) கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா சீர்காழியில் பால்சாமி (நாடார்) கல்வி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் காமராசரின் பிறந்த நாள் விழாவைக் கல்வி விழாவாகக் கொண்டாடுவது வழக்கம். அதில் மாநில அளவில் 12 ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்புத் தேர்வுகளில் முதல் மதிப்பெண் எடுத்து அருவினை படைத்தவர்களையும் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்றவர்களையும் அழைத்து வந்து பரிசுத்தொகை கொடுத்தும் சான்றிதழ் கொடுத்தும் மாணவ, மாணவிகளைப் பாராட்டுவது வழக்கம். மேலும் பால்சாமி (நாடார்)…
‘கல்லும் வெல்லும்’ – இலக்கிய மாத இதழ் வெளியீட்டு விழா
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு நகரில் ‘கல்லும் வெல்லும்’ என்ற இலக்கிய மாத இதழ் தனியார் திருமண மண்டபத்தில் வெளியிடப்பட்டது. முதல் படியைக் கவிஞர் கி.சாந்தகுமார் வெளியிட்டார்; தொழில் அதிபர் மை.வீரர் அப்துல்லா பெற்றுக்கொண்டார். இவ்விழாவில் பேசிய கவிஞர் கி.சாந்தகுமர் மக்கள்நாயகத்தின் நான்காவது தூண்களில் ஒன்று இதழ்த்துறை. இதழ்த் துறையில் நாளிதழ், இலக்கியம், குற்றம் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தமிழ் வளர்ச்சிக்குச் செயல்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் நமது பரம்பரை,. பண்பாடு, கலை, இலக்கியம் போன்றவற்றில் ஒன்றான கல்வெட்டு தொடர்பான நூல்கள்…
நீர்நிரம்பி வரும் மஞ்சளாறு அணை! நீரைச் சேமிக்குமா மாவட்ட நிருவாகம்?
மேற்குதொடர்ச்சிமலைப் பகுதியில் கனமழையால் நிரம்பி வரும் மஞ்சளாறு அணை தேவதானப்பட்டி அருகே உள்ள மேற்குமலைத்தொடர்ச்சியில் கடந்த ஒரு வாரகாலமாக மழை பொழிந்து வருவதால் மஞ்சளாறு அணை நிரம்பி வருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலையில் கடந்த ஒரு வாரகாலமாக மழை பொழிந்து வருவதால் மஞ்சளாறு அணை நிரம்பி வருகிறது. கொடைக்கானல் பகுதியிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் மழை பொழிவதால் மஞ்சளாறு அணை, மருதாநதி அணை, பேரிசம் ஏரி, சண்முகா அணை முதலான பல்வேறு அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. கொடைக்கானல்…
அ.வாடிப்பட்டியில் பரிசுகள் வழங்கும் விழா
விடுதலை நாளை முன்னிட்டு மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கும் விழா தேவதானப்பட்டி அருகே உள்ள அ.வாடிப்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் விடுதலை நாளை முன்னிட்டுப் பேச்சுப்போட்டி, எழுத்துப்போட்டி, நடனப்போட்டி முதலான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சிமன்றத் தலைவர் மஞ்சமாலா பிச்சைமணி தலைமை தாங்கினார். ஒன்றியப்பெருந்தலைவர் செல்லமுத்து சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசுகளும் சுழற்கேடயங்களும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர், முன்னாள் கெங்குவார்பட்டிப் பெருந்தலைவர் காட்டுராசா, தேவதானப்பட்டிமன்ற…
