முனைவர் வை.பழனிச்சாமி இ.ஆ.ப. வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீடு
அகதாபட்டியிலிருந்து ஓர் ஐ.ஏ.எசு. நூல் வெளியீட்டு விழா ஆனி 25, 2053 சனி 09.07.2022 மாலை 5.00 உருசியக் கலாச்சார மையம் 74, கத்தூரிரங்கன் சாலை, தேனாம்பேட்டை சென்னை மாலை 5.00 தேநீர் விருந்து நூல் வெளியீடு: திரு வைகோ, நா.உ. தலைமை: தாமரைத்திரு நல்லி குப்புசாமி வாழ்த்துரை: திரு பார்த்தசாரதி, நிறுவனர், வலைத்தமிழ் முனைவர் வி.பொன்ராசு, நூலாசிரியர் உரை: எழுத்தாளர் இராணிமைந்தன் வரவேற்புரை :செல்வி ப.இரா.நிகரிகா நன்றியுரை: மரு.ப.இராசுகுமார் இன்னிசை ஏந்தல் ஆத்மநாதன் இன்னிசையுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது.
பிரதிபா இலெனின் நினைவேந்தல் – நூல் வெளியீடு, சென்னை
மார்கழி 09, 2048 ஞாயிறு திசம்பர் 24, 2017 மாலை 6.00 முத்தமிழ்ப்பேரவை, சென்னை 600 020 பிரதிபா இலெனின் நினைவேந்தல் படத்திறப்பு : மு.க.தாலின் பிரதிபா நூல் வெளியீடு : ஆசிரியர் கி.வீரமணி நூல் பெறுநர் : புரட்சிப்புயல் வைகோ நினைவுரை : நக்கீரன் கோபால் கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் நினைவில் அழைக்குநர் : கோவி.இலெனின்
தமிழ்நாட்டு அரசுப்பணிகளில் பிற மாநிலத்தவரா? – வைகோ கண்டனம்
தமிழ்நாட்டு அரசுப்பணிகளில் பிற மாநிலத்தவரா? தமிழ்நாடு அரசுப் பணிக்கான போட்டித் தேர்வில் பிற மாநிலத்தவருக்கு ஒப்புதலளித்துத் தமிழக இளைஞர்களை வஞ்சிக்கும் தமிழ்நாடு மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) – வைகோ கண்டன அறிக்கை தமிழ்நாடு அரசுக்குப் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் உள்ள தமிழ்நாடு மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் அடுத்து வரும் தேர்வுகளில் இனி வெளி மாநிலத்தவரும் பங்கேற்கலாம் என அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ளவர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகும் நிலைமை ஏற்படும் எனப் பல்வேறு தரப்பினரும் பதறுகின்றனர்….
இந்தித் திணிப்புக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் அரசேற்பு அளிப்பதா?- வைகோ கண்டனம்
இந்தித் திணிப்புக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் அரசேற்பு அளிப்பதா? வைகோ கண்டனம் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் மத்திய அரசு எங்கும் எதிலும் இந்தி மொழி கட்டாயம் என்பதைச் செயல்படுத்தி வருகின்றது. பா.ச.க. அரசின் இந்தித் திணிப்பு முயற்சிகளுக்கு அரசேற்பு அளிக்கும் வகையில், மத்திய அமைச்சர்கள் இனி இந்தி மொழியில்தான் பேசவும், எழுதவும் மற்றும் அறிக்கை வெளியிடவும் வேண்டும் என்று குடியரசுத் தலைவர் உத்தரவிட்டு இருக்கின்றார். முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான நாடாளுமன்றக் குழு கடந்த 2011 ஆம் ஆண்டு அளித்த…
காசி ஆனந்தன் எழுதிய ‘தம்பி செயத்துக்கு…. ( கடிதம் – 2 )’ நூல் வெளியீடு
உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய ‘தம்பி செயத்துக்கு…. ( கடிதம் – 2 )’ நூல் வெளியீடு மார்கழி 20, 2047 புதன்கிழமை 04/01/2017 மாலை 5 மணி சந்திரசேகர் திருமண மண்டபம், மேற்கு மாம்பலம், சென்னை தலைமை : பழ.நெடுமாறன் ( தலைவர்- தமிழர் தேசிய முன்னணி ) நூல் வெளியீடு : வைகோ ( பொதுச்செயலாளர் – ம.தி.மு.க) நூல் பெறுபவர் : ம.நடராசன் ( ஆசிரியர் – புதிய பார்வை ) நிகழ்வு நெறியாளர்: இலக்கியர் செயபாசுகரன்…
அதிமுக நன்றி கூற வேண்டியது திமுகவிற்கே! – இலக்குவனார் திருவள்ளுவன்
அதிமுக நன்றி கூற வேண்டியது திமுகவிற்கே! அதிமுக வெற்றி பெற்றதற்கு “வைகோவிற்கு நன்றி கூற வேண்டும்”, “விசயகாந்திற்கு நன்றி கூற வேண்டும்”, “இராமதாசிற்கு நன்றி கூற வேண்டும்” என்றெல்லாம் வஞ்சப்புகழ்ச்சியாகத் திமுக அன்பர்கள் கூறி வருகின்றனர். உண்மையில், ‘அதிமுகவின் ஆ அணி’ என மக்கள் நலக்கூட்டணியைக் கூறிவந்த திமுகதான் அதிமுக துணை அணியாகச் செயல்பட்டு அதனை வெற்றி பெறச் செய்துள்ளது என்பது வெள்ளிடை மலை. அதிமுக, திமுக நேரடியாக மோதிய தொகுதிகள் 172இல் அதிமுக 83 தொகுதிகளில்தான் வெற்றி பெற்றுள்ளது. திமுக…
மனங்கலங்க வேண்டா மாற்றணியினர்! – இலக்குவனார் திருவள்ளுவன்
மனங்கலங்க வேண்டா மாற்றணியினர்! கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது. (திருவள்ளுவர், திருக்குறள் 772) தமிழகச் சட்டமன்றங்களில் தொடர்ந்து இரு கட்சிகளின் முதன்மைகளுக்கு மாறாக அவ்வப்பொழுது 3 ஆம் அணி உருவாக்கம்பற்றிய பேச்சும் முயற்சியும் வந்துபோகும். என்றாலும், இந்தமுறை சீர்குலைப்பு முயற்சிகளையும் மீறி மக்கள்நலக்கூட்டணி உருவானது. முன்பு இருந்த சூழலைவிட இம்முறை மக்கள் பெரிதும் மாற்றத்தை விரும்பியது உண்மை. இருப்பினும் மக்களின் நேர்மை உணர்வு அதற்கு எதிராக அமைந்துவிட்டது. முதலில் பணம் கொடுத்தவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஒரு…
திமுகவின் கைகளில் கடிவாளம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
திமுகவின் கைகளில் கடிவாளம்! நம்நாட்டு மக்களாட்சி முறைக்கேற்ப ஆட்சியை அமைப்பதற்கான வெற்றி வாய்ப்பை திமுக இழந்து உள்ளது. 9 தொகுதிகளில் ஆயிரத்திற்கும் குறைவான வாக்கு வேறுபாட்டிலும் மேற்கொண்டு 9 தொகுதிகளில் ஆயிரத்திலிருந்து 2615 இற்குக் குறைவாகவும் மேற்கொண்டு 14 தொகுதிகளில் இதிலிருந்து 5000த்திற்குக் குறைவாகவும் வாக்குகள் பெற்று வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர். இவர்களுள் மிகுதியானவர் தி.மு.க.வினர். இதனால் திமுக அணி வெற்றிவாய்ப்பை இழந்துள்ளது. எனினும் மிகுதியான (98) ச.ம.உ.உடைய எதிர்க்கட்சியாக மாறி உள்ளது. இனப்படுகொலை நேரத்தில் கலைஞர் கருணாநிதியின் செயல்பாட்டால் …
யார் வந்தாலும் வரவேற்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
யார் வந்தாலும் வரவேற்போம்! வைகாசி 06, 2047 / மே 19, 2016 : வாக்குகள் எண்ணப்பட்டுச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும்; யார் ஆட்சி அமைக்கப் போவது என்று தெரிந்திருக்கும். அதன்படி யார் ஆட்சி அமைப்பதாக இருந்தாலும் வரவேற்போம்! தேர்தலுக்கு முன்னர் யார், எந்தக் கட்சிக்கு ஆதரவாக இருந்தாலும், அல்லது யார் வரக்கூடாது என்ற எண்ணத்தில் இருந்தாலும், விரும்பியவர் ஆட்சி அமைத்தாலும் விரும்பாதவர் ஆட்சி அமைத்தாலும் வரவேற்போம்! அஇஅதிமுக வின் மீது மக்கள் காணும் குறைகள் வேறுகட்சி மீது இருந்தது என்றால்,…
மக்கள் நலக்கூட்டணி, 150 தொகுதிகளில் வெற்றி பெறும். – வைகோ
”மக்கள் நலக்கூட்டணி, 150 தொகுதிகளில் வெற்றி பெறும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும்” – வைகோ திருச்சி பஞ்சப்பூரில் தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா., கூட்டணியின் மாற்று அரசியல் வெற்றிக்கூட்டணி மாநாடு நேற்று இரவு நடந்தது. மாநாட்டுக்கு தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தலைமை வகித்தார். மாநாட்டில் த.மா.கா., தலைவர் வாசன் பேசியதாவது: தமிழகத்தில், 50 ஆண்டுகளாக மாறிமாறி தி.மு.க., அ.தி.மு.க., ஆட்சி செய்து விட்டு, அவர்களுக்குள் ஒருவரையொருவர் குற்றஞ் சொல்லி வருகின்றனர். இரு கட்சிகளின் அரசியலை மக்கள் நன்கு புரிந்துள்ளனர். இதற்கு முற்றுப்புள்ளி…
திருச்சியில் 11.5. அன்று மாற்று அரசியல் வெற்றி மாநாடு! – வைகோ அழைப்பு
திருச்சியில் 11.5. அன்று மாற்று அரசியல் வெற்றி மாநாடு திருச்சிக்கு அலைகடலெனத் திரண்டு வாரீர்! வைகோ அழைப்பு தே.மு.தி.க. – மக்கள்நலக் கூட்டணி – த.மா.கா. சார்பில் திருச்சிராப்பள்ளியில் சித்திரை 28, 2047 / மே 11, புதன்கிழமை யன்று மாற்று அரசியல் வெற்றி மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொள்ள வைகோ அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக, தே.மு.தி.க. – மக்கள்நலக் கூட்டணி – த.மா.கா. ஒருங்கிணைப்பாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாற்று அரசியல் வெற்றி…
முன்னேற்றப்பாதையில் மக்கள்நலக்கூட்டணி – இலக்குவனார் திருவள்ளுவன்
முன்னேற்றப்பாதையில் மக்கள்நலக்கூட்டணி வழக்கமாக இரு கட்சிகளுக்கு வாக்களிப்போரில் பலரிடம் மாற்று எண்ணம் தோன்றியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. இதற்கு முன்பும் இத்தகைய எண்ணம் தோன்றி, ஆனால், நம்பிக்கையின்றி முதன்மைக்கட்சிகளில் ஒன்றிற்கே வாக்களித்தனர். இந்த முறை, வெற்றி பெறுவார்களா என எண்ணாமல் மக்கள் மன மாற்றத்தை முதலிரு கட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவாவது மாற்றி வாக்களிக்க எண்ணியுள்ளார்கள். இந்த மாற்று எண்ணத்தை அறுவடை செய்வதில் முதலிடம் மக்கள் நலக்கூட்டணிக்கு உள்ளது. எல்லாக் கட்சிகளும் மாறிமாறி, முதலிரு கட்சிகளுடன் கூட்டணி வைத்துவிட்டு இப்பொழுது…