ஈழத்திற்கு எப்போது நீதி கிடைக்கும்? வைகோ வேதனை!

 சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற  தேர்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீசை ஆதரித்து வைகோ பேசியது வருமாறு: தமிழகத்தைச் சுற்றியும் இப்போது ஏராளமான ஆபத்துகள் காத்திருக்கின்றன. மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறி, கர்நாடகம் காவிரியில் தடுப்பணைகள் கட்டுகிறது. முல்லைப் பெரியாறு அணையை உடைக்க கேரள அரசு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி, முயற்சித்து வருகிறது. கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழர்கள் சுடப்படுகின்றனர், அவர்களது படகுகள் சேதப்படுத்தப்படுகின்றன. வெகு அருகில் ஏழரைக் கோடி உறவுகள் இருந்தபோதும், ஈழத்தில் கொல்லப்பட்ட உறவுகளைக் காப்பாற்ற…

தமிழக மக்களுக்காக நான் 27 முறை சிறைக்குச் சென்றுள்ளேன் : வைகோ உருக்கம்

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் வைகோ அருப்புக்கோட்டை நெசவாளர்  குடியிருப்பு, புதிய பேருந்து நிலையம், அண்ணாசிலை, இராமசாமிபுரம், காமராசர் சிலை, நேரு  திடல், பாவடி தோப்பு  முதலான பல இடங்களில் பம்பரம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு  பரப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியபோது,   ‘’தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க., கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து தமிழக மக்களை ஏமாற்றி வந்துள்ளனர். இந்த  நாடாளுமன்றத் தேர்தலில் மாற்றுக் கூட்டணியாக தேசிய சனநாயகக் கூட்டணி வந்துள்ளது. தமிழக மக்களுக்காக நான் 27 முறை போராடிச் சிறைக்குச்…

வாக்கு யாருக்கு?

  யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை விட யாருக்கு வாக்களிக்கக்கூடாது என்பதன் அடிப்படையில்தான் தேர்தல் வெற்றிகள் அமைகின்றன. மக்கள் மனம் கொள்ளும் வகையில் எக்கட்சியின் பணியும் அமையாததால், விருப்பமின்றி, எதிர்நிலை அணுகுமுறையில் மக்கள் வாக்களிக்கின்றனர். சிலக் கட்சிகள் மீது நாட்டம் இருப்பினும் வாக்கு சிதறக்கூடாது என்று எண்ணியும் வெற்றிபெறும் என எதிர்நோக்கும் கட்சியில் வாக்களிக்க விரும்பியும், மக்கள் அளிக்கும் வாக்குகளே ஆட்சியை முடிவு செய்கின்றன.   இப்பொழுது நடைபெற்று வரும் பொதுத்தேர்தலில் – தமிழ்நாட்டில்  வரும் ஏப்பிரல் 24,2014 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ள…

அமெரிக்கத் தீர்மானம் அமுது தடவிய நஞ்சு – வைகோ குற்றச்சாட்டு

     ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் அமெரிக்கத் தீர்மானத்தை அமுது தடவிய நஞ்சு எனக் கடிந்துரைத்துள்ளார். அமெரிக்கா, பிரித்தானியம், மாண்டிநிரோ, மாசிடோனியா, மொரீசியசு ஆகிய ஐந்து நாடுகள் மனித உரிமைக் குழுவில் மார்ச்சு 3 அன்று ஒரு தீர்மானத்தை அளித்துள்ளன. அமெரிக்க அரசு முன்நின்று தயாரித்துள்ள இத்தீர்மானம் மிகவும் வஞ்சகமானது. வரிக்கு வரி திரும்பத் திரும்பப் படித்து அதிர்ச்சியுற்றேன். சிங்கள அரசுக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்து விட்டதாகவும், ஆனாலும் அதை அலட்சியப்படுத்துகிறோம் என்று சிங்கள அரசு கூறுவது, தமிழர்களுக்கான நீதியை…

செய்திக் குறிப்புகள் சில

  அமெரிக்காவின் இலாங்வுட்டு பல்கலையில் நடந்த அறிவியல் உச்சி மாநாட்டில், தமிழகத்தை சேர்ந்த மாணவர் டெனித் ஆதித்யாவின்  வாழையிலையைப் பதப்படுத்திக் குவளை, கிண்ணம் உருவாக்கிச் சுற்றுச் சூழலை மாசின்றி அமைக்கும் கண்டுபிடிப்பு குறித்துக் கலந்துரையாடல் நடந்தது.   பிரிட்டனைச் சேர்ந்த ஃபெயித்து என்ற 9  அகவைச் சிறுமி புத்தகங்கள் படிப்பதில் உள்ள   கழிமிகு விருப்பத்தின் காரணமாக 7 மாதங்களில் 364 புத்தகங்களைப் படித்து முடித்துள்ளார். மது ஒழிப்புக்கு ஆதரவாகப் போராட மாணவர்கள் முன்வர வேண்டும் –  தமிழருவி மணியன் மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்களின் செலவு …

சிங்கள அரசு செய்தது போர்க்குற்றமல்ல, அப்பட்டமான இனப்படுகொலையே: வைகோ

  இலங்கைத் தீவில் சிங்கள அரசு நடத்தியது போர்க்குற்றமல்ல, அப்பட்டமான இனப்படுகொலை என்ற உண்மையை உலக நாடுகள் உணர வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 2009 இல் போரின் உச்ச கட்டத்தின் போது, சிங்கள இராணுவத்தினர் ஈழத் தமிழ்ப் பெண்களை வதைத்துக் கொன்ற காட்சி புதிய ஆதாரமாகக் கிடைத்துள்ளது. அந்தக் கொடுமையை எழுத்தில் பதிய என் மனம் மறுக்கிறது. ஐயோ! இப்படியும் ஒரு கொடுமையா? என்று புலம்பி தவிக்கிறது….

தூக்குத் தண்டனை நீக்கம்; உலகெங்கும் நீதியின் ஒளி: வைகோ

  இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நீதிமான்கள் சதாசிவம், இரஞ்சன் கோகோய், சிவ் கீர்த்தி(சிங்) ஆகிய மூவர் அமர்வு, 15 பேர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த தூக்குத் தண்டனையை  நீக்கி,  வாணாள் தண்டனையாக அறிவித்து இருக்கின்ற தீர்ப்பு, இந்திய நீதிமன்ற வரலாற்றில் பொன்னேடு ஆகும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.   அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீரப்பன் கூட்டாளிகள் எனக் குற்றம் சாட்டப்பட்ட பிலவேந்திரன், சைமன், ஞானப்பிரகாசம், மீசை மாதையன் ஆகியோருக்கு, 2004 இல், உச்சநீதிமன்றம் தூக்குத்தண்டனையை உறுதி செய்தது. குடியரசுத் தலைவருக்கு…

தமிழ் பிரபாகரனை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வைகோ வேண்டுகோள்

இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழகச் செய்தியாளர் மகா.தமிழ் பிரபாகரனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தித் தலைமையாளர் மன்மோகன் சிங்குக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாகத் தலைமையாளருக்கு வெள்ளிக்கிழமை தொலைநகலி(ஃபேக்சு) மூலம் அனுப்பிய  மடலில் அவர் கூறியிருப்பதாவது: “சுற்றுலா நுழைவு உரிமை பெற்று இலங்கைக்குச் சென்ற, தமிழகச் செய்தியாளர் மகா தமிழ் பிரபாகரன், இலங்கைப் படையினரால்  தளையிடப்பட்டுள்ள செய்தியை, உடனடியாகத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிரீதரன், வடக்கு மாகாண  அவை உறுப்பினர்…

இனக்கொலைக் குற்றவாளிகள் தப்பவே முடியாது : வைகோ அறிக்கை

“நடந்தது இனப் படுகொலைதான் என செருமனி மக்கள் தீர்ப்பாயம் (Permanent People’s Tribunal) அறிவித்துள்ளது. எனவே இனக்கொலை குற்றவாளிகள் தப்பவே முடியாது” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :-    “இரவுக்குப் பின் வைகறை மலர்வதுபோல், துன்ப இருளில் தவித்த ஈழத் தமிழர்களுக்கு விடியலின் வெளிச்சம் தோன்றுகிறது. இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொடூரமாகப் படுகொலை செய்த சிங்கள பேரினவாத அரசு நடத்தியது ‘இனப்படுகொலைதான் (Genocide)’ என்று ஜெர்மன் நாட்டில்…

நீந்திக் கடந்த நெருப்பாறு – நூல் : வைகோ வெளியிட்டார்

சென்னையில் நீந்திக் கடந்த நெருப்பாறு – நூல் ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ அவர்களினால் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை – எழும்பூரில் உள்ள தூய அந்தோணியார் அரங்கத்தில் நடைபெற்ற அரவிந்த குமாரனின் “நீந்திக் கடந்த நெருப்பாறு” எனும் நூலை கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் வெளியிட,