மதுவிலக்கு நாடகங்கள் மக்களை மயக்கா!

மதுவிலக்கு நாடகங்கள் மக்களை மயக்கா!     துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்     நஞ்சுண்பார் கள்ளுண் பவர். (திருக்குறள் 926)  என்று மது அருந்துநருக்கும் நஞ்சு அருந்துநருக்கும் வேறுபாடில்லை என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.   அரசே குடிமக்களைக் குடிகார மக்களாக்கி நாளும் நஞ்சுஊட்டுவது கொடுமையினும் கொடுமையன்றோ! இக்கொடுமையை ஒழிக்க மன்பதை ஆர்வலர்களும் மக்களும் சில கட்சிகளும் பல அமைப்பினரும் போராடி வருகின்றனர். ஆனால், மது ஒழிப்புப் போராளிகளை மடியச் செய்யும் அரசு நாடகமாடுகிறது.   மதுவிலக்கு என்ற சிந்தனை இந்தியத் துணைக்கண்டத்தில் முதன்முதலில் தமிழ்நாட்டிற்குத்தான்…

சொற்குற்றம் வராமல் காத்திடுக! – இலக்குவனார் திருவள்ளுவன்

சொற்குற்றம் வராமல் காத்திடுக!   அரசியலில்  இந்நாள் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், தலைவர்கள், நட்சத்திரப் பேச்சாளர்கள், பெண்கள், தொண்டர்கள் என்ற வேறுபாடின்றித் தரங்குறைந்து பேசுவதும் அதற்கெனவே கேட்கும் கூட்டம் ஒன்று இருப்பதும் தரக்குறைவாகப் பேசுவதற்கென்றே சிறப்புப் பேச்சாளர்களை வைத்திருப்பதும் இயல்பான  ஒன்றாகப் போய்விட்டது.   ம.தி.மு.க.தலைவர் வைகோ கடந்தவாரம் (24.03.2047 / 06.04.2016) செய்தியாளர் கூட்டம் ஒன்றில் சந்திரகுமார் என்பவர் தே.தி.மு.க.விற்கு இழைக்கும் வஞ்சகம் குறித்தும் துணைநிற்போர் குறித்தும் கூறும் பொழுது ‘இதற்கு அதைச்செய்யலாம் என்பதுபோல்’ தவறாகப் பேசிவிட்டார். இதற்கு அவர் வருந்தி மன்னிப்பு…

மக்கள் நலக்கூட்டணியின் வலு கூடுகிறது

மக்கள் நலக்கூட்டணியின் வலு கூடுகிறது தே.தி.மு.க.-மக்கள் நலக்கூட்டணியில்  வாசனின் தலைமையில் இயங்கும் தமிழ் மாநிலக் காங்கிரசு இணைந்துள்ளது.  தனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் 20 தொகுதிகளைத் தே.மு.தி.க.வும் 3 தொகுதிகளை ம.தி.மு.க.வும் ஒவ்வொரு தொகுதியைப் பிற 3 கட்சிகளும் என 3 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. இதனால் போட்டியிடும் கட்சிகளின் தொகுதி எண்ணிக்கை பின்வருமாறு உடன்பாட்டிற்கு வந்துள்ளது : தே.மு.தி.க. – 104 தொகுதிகள் ம.தி.மு.க. – 29 தொகுதிகள் விடுதலைச் சிறுத்தைகள் – 25 தொகுதிகள் மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சி – 25 தொகுதிகள் இந்தியப…

பிற கட்சிகளுக்கு அச்சம் ஏற்படுத்தியுள்ள ம.ந.கூட்டணி விரிவு

பிற கட்சிகளுக்கு அச்சம் ஏற்படுத்தியுள்ள ம.ந.கூட்டணி விரிவு    விசயகாந்தைத் தங்கள் பக்கம் இழுக்க முயன்ற ஒவ்வொரு கட்சியும் அவர் மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்ததும்   அவரையும்  வைகோவையும் தாழ்த்தியும் பேசியும் எழுதியும் வருகின்றனர்.   அப்படியானால்  இவர்கள் ஏன்,  விசயகாந்தைத் தங்கள் பக்கம் இழுக்கப் பலவாறாக முயன்றனர். விசயகாந்துடன் இணைந்ததால் ம.ந.கூட்டணியைத் தாழ்வாகக் கூறுகின்றனரே, அப்படியானால், தங்களைவிட இக்கூட்டணி உயர்வானது, அத்தகைய உயர்வான கூட்டணி ஏன் விசயகாந்துடன் இணைந்தது என்கின்றனரா?  தேர்தலில் கூட்டணி என்பது வெற்றிக்கான தொகுதி உடன்பாடேயன்றிக் கொள்கைக் கூட்டணியன்று. எனவே, வேறுவகையில்…

மத்திய அரசின் பாறை எரிவளித் திட்டம் : போராட்டம் வெடிக்கும்! – வைகோ எச்சரிக்கை

மத்திய அரசின் பாறை எரிவளித் திட்டத்துக்குத் தமிழக அரசு துணைபோனால் போராட்டம் வெடிக்கும்! – வைகோ எச்சரிக்கை   “பாறை எரிவளித் திட்டத்தைச் செயல்படுத்த முனைப்பு காட்டும் மத்திய அரசுக்குத் தமிழக அரசு துணைபோனால், சோழ மண்டல உழவர்களும், பொதுமக்களும் பெரும் சீற்றத்துக்கு ஆளாகி, கிளர்ந்து எழுந்து பெரும் போராட்டத்தை நடத்துவதற்குத் தள்ளப்படுவார்கள்” என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:   தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரிப் பாசனப் பகுதிகளை முற்றாக அழிப்பதற்கு மத்திய…

திராவிடக்கட்சிகள் எனப் பொதுவாகக் குறை கூற வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்

திராவிடக்கட்சிகள் எனப் பொதுவாகக் குறை கூற வேண்டா!  தேர்தல் அரசியலுக்காகப் பெரும்பான்மைக் கட்சிகள் திராவிடக் கட்சிகளை ஒழிப்போம் என்றெல்லாம் பேசி வருகிறார்கள். இப்போக்கு வரலாற்றை மறைப்பதாகும். குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் (திருக்குறள் 504) எனத்   தெய்வப்புவலர் திருவள்ளுவர் நமக்கு வழிகாட்டியுள்ளார்.   எதிர்க்கும் கட்சிகளின் நிறைகளைக் கூறுவதற்கு மனம் வராதுதான். அதற்காக ஆற்றிய யாவும் தீமை என்பதுபோல் பேசக்கூடாதல்லவா? குறைந்தது குறைகளைப் பட்டியலிட்டு இத்தகைய குறைகளுக்காக இவற்றை ஆட்சிக்கு மீண்டும் வரச்செய்யக்கூடாது என்று சொல்லாம் அல்லவா?  …

தேர்தலில் ஆள்பவர்களையும் ஆண்டவர்களையும் புறக்கணிப்பீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தேர்தலில் ஆள்பவர்களையும் ஆண்டவர்களையும் புறக்கணிப்பீர்!     நிகழ இருக்கின்ற சட்டமன்றத்தேர்தலில்(2016)  பன்முனைப் போட்டிகள் உள்ளன. ஒவ்வோர் அணியும் நம்பிக்கையுடன் உள்ளதாகத்தான்  கருத்துகளை வெளிப்படுத்துகின்றன. இருப்பினும் தேர்தல்  நெருங்க நெருங்க இப்போதைய சூழலில் மாற்றம் ஏற்படும். எனவே, சிலர் நம்பிக்கைகள் பொய்த்துப்போகும். சிலர் எதிர்பார்த்ததைவிட வாக்குகள் கூடுதலாக வாங்கலாம். கூட்டணியாகப் போட்டியிடாத கட்சிகளும் தேர்தலுக்குப்பின் புதிய கூட்டணி அமைக்கலாம். எனினும் இன்றைய நம் கடமை, யாருக்கு நம் மதிப்பார்நத வாக்குகளை அளிக்க வேண்டும்  என ஆராய்ந்து வாக்குரிமையைப் பயன்படுத்துவதுதான். யார் வெற்றி பெற்றால் என்ன…

ஈழ ஏதிலியர் இரவீந்திரன் தற்கொலையால் தமிழகத்திற்குக் கெட்ட பெயர்! – வைகோ வேதனை!

[பொதுக்குறிப்பு : செய்தியைமுந்தித்தரும் ஆவலில் வெவ்வேறு வகையான செய்திகள் ஊடகங்களில் வருகின்றன. இறந்தவர் பெயர் இரவிச்சந்திரன், இரவீந்திரன் என்ற முரண்பாடு;  இறந்தவர் தன் மகன்  பிரவன் இல்லாமைக்கான காணரத்தை விளக்கியதாகவும், அவரே காலத்தாழ்ச்சியாக வந்ததாகவும இருவேறு தகவல்;  முகாம் உள்ள ஊரின் பெயரிலும் முரண்பாடு;  வருவாய்ஆய்வர் பெயர் இராசேந்திரன், துரைப்பாண்டி என்ற முரண்பாடு;   நேரடியான செய்தி எதுவும் வராததால்,ஊடகங்கள் செய்திகளை நன்றியுடன் பகிர்கிறோம்.  – ஆசிரியர்] ஈழ ஏதிலியர் இரவிச்சந்திரன் தற்கொலையால் உலக அளவில் தமிழகத்திற்குக் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது வேதனை அளிப்பதாக ம.தி.மு.க…

ஆதித்தமிழர்களின் அரசியல் எழுச்சி மாநாடு, மதுரை

பங்குனி 01, 2047 / மார்ச்சு 14, 2016 தலைமை: கு.சக்கையன் தொடக்கவுரை:  சி.வெண்மணி சிறப்புரை: வைகோ இராமகிருட்டிணன் இரா.முத்தரசன் தொல்.திருமாவளவன்   ஆதித்தமிழர் கட்சி , நெல்லை

எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத நிதிநிலை அறிக்கை – வைகோ

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத நிதிநிலை அறிக்கை (Budget) ! – வைகோ  “நடுவண் அரசின் பொது நிதிநிலை அறிக்கை மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை” என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நடுவண் நிதி அமைச்சர் அருண் செத்லி அளித்துள்ள 2016-17ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையில் கடந்த இரண்டு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருந்தவைதாம் இடம் பெற்றுள்ளன. புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. பொருளியல் (economical) வளர்ச்சி 8.6 விழுக்காடு(%) இருக்கும் என்று போன ஆண்டு கணித்தது…

கண்ணகிக் கோவிலில் வழிபாட்டுரிமை – கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு வைகோ மடல்

கண்ணகிக் கோவிலில் வழிபட 3 நாள் இசைவு தருக! –  வைகோ மடல்   மங்கலதேவிக் கண்ணகிக் கோவில் வழிபாடு செய்யத் தமிழ்நாட்டு மக்கள் வரும் சித்திரைப் முழுநிலா(பௌர்ணமி) அன்று ஒரு நாளுக்கு மாறாக மூன்று நாட்கள் வழிபட இசைவளித்து (அனுமதித்து) உதவிட வேண்டுகிறேன் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு மடல் எழுதியுள்ளார்.   தமிழ்நாட்டு எல்லையோரம் கம்பம், கூடலூர் கடந்து பளியங்குடி வனப்பகுதியில் ஏறத்தாழ 6.6 புதுக்கல் (கி.மீ). தொலைவிலும், குமுளியிலிருந்து ஏறத்தாழ 14 புதுக்கல்…