(கவிஞர் முடியரசனின் பூங்கொடி 27 :  குறளகம் புகுதல் – தொடர்ச்சி) அடிகள் அடைக்கலம் அருளல்      நல்லறம் எவைஅவை நயந்திடும் அவர்எம் அல்லல் கண்டதும் அரும்பினர் கண்ணீர்        துடைப்பேன் துயர்எனத் துடைத்தனர் அந்நீர்; 110 உடைப்பெருஞ் செல்வம் உற்றேன் போலக் களித்தேன் தாயின் கருணையைக் கண்டேன்; உளத்தே நிறையும் உவப்புடன் குறளகத் தொண்டுகள் புரியும் தோகை இவளிடம்         விண்டுளம் நண்பு கொண்டுளேன் யான்’ என;     115 கோமகன் அகலுதல்      `அல்லி! நின்வர லாறு தெரிந்தேன் மெல்லியல் இவளை வஞ்சியின்…