(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 33 தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 34 கையறு நிலைக் கவிதைகள்   கையறு நிலை என்பது புறப்பொருள் பாடல்களில் அமைந்துள்ள ஒரு துறையாகும். அரசன் இறப்ப அவனைச் சார்ந்தோர் அவ்விறந்து பாட்டைச் சொல்லி ஒழுக்கம் தளர்தல் என்பது பொருளாம்.  ‘செய்கழல் மன்னன் மாய்ந்தெனச் சேர்ந்தோர்  கையற வுரைத்துக் கைசேர்ந் தன்று’ 90 இறந்தனுடைய புகழை எடுத்துக்கூறி இரங்கினும் கையறுநிலை என்னு ம்  துறையாம். ‘கழிந்தோன் தன்புகழ் காதலித் துரைப்பினும்  மொழிந்தனர் புலவர் அத்துறை…