திருவள்ளுவமாலையின் சொல்நுட்ப மேலாண்மைத்திறன்கள் – பகுதி 3

 (மார்கழி 6, 2045 /  திசம்பர் 21,2014 தொடர்ச்சி) 10.0. திருவள்ளுவமாலை அகச்சான்றுகள்            திருவள்ளுவமாலையில் சொல்நுட்பங்கள் நிறைந்து உறையினும், விரிவுஅஞ்சி முன்குறிப்பிட்டவாறு அறுவர்பாடல் சான்றுகளை மட்டுமே இங்கு நுண்ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறேன். எஞ்சியவற்றை நுண்ஆய்வு மேற்கொள்ளப் பிறரை இவ்ஆய்வுக்கட்டுரை தூண்டுமாயின், அத்தூண்டுதல் என்னை மேலும் ஆய்வுக்கட்டுரை எழுதத்தூண்டுமென நம்புகின்றேன்., 10.1. அருவப்பாடல்— 01 [அசரீரிப்பாடல்]      [உருவம்இல்லாததெய்வஒலி]  சொல்தொடர்: தெய்வத்திருவள்ளுவர் திருவள்ளுவமாலையின் முதற்பாடலில் வரும் தெய்வத்திருவள்ளுவர் என்னும் சொல்தொடர், நுட்பம்நிறைந்தது. தெய்வஆற்றல் மிக்கவர் திருவள்ளுவர் எனப் பொருளால் சிறந்தது. நுட்பங்கள்.      திருக்குறள் உலகுதழீஇய…

திருவள்ளுவமாலையின் சொல்நுட்ப மேலாண்மைத்திறன்கள் – பகுதி 2

(கார்த்திகை 28, 2045 / 14 திசம்பர் 2014 தொடர்ச்சி) 6.0. சொல்நுட்பத்தகவு  நுட்பம்அமைந்தசொல்லின்தகவு / தகைமை எப்படி இருத்தல் வேண்டும் என்று ஆய்தலும் இங்குத் தேவையாகின்றது. அடைப்புக்களுக்குள் அடைக்கப்பட்டுள்ள எண்கள் திருக்குறட் பாக்களின் எண்கள்.      ஆக்கம் தருவதாய் இருத்தல் [0642]. கேட்போரை ஈர்த்து, அவரது உள்ளத்திற்குள் சென்று பதியும் திறன்உடைத்தாதல் [0643], அறனும், பொருளும் அளிக்கும் திறன் பெற்றிருத்தல் [0644], நுட்பச்சொல்லைச் சொல்லும்பொழுது, அச்சொல்லை வெல்லும் வேறு ஒரு சொல் இல்லாதபடிச், சொல்லும் சொல்லே வெல்லும்படி அமைதல் [0645], கேட்போர் விரும்பும்படித்…

அருட்பா திருக்குறட்பா

     பேராசிரியர் வெ.அரங்கராசன் முன்னாள் தமிழ்த்துறை தலைவர் கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி கோவிற்பட்டி- 628 502. கைப்பேசி: 98409 47998.   குறும்பா, பெரும்பா, அரும்பா… அறம்பொருள் இன்பம், தரும்பா… விரும்பா தவரும், விரும்பும் நறும்பா, அருட்பா குறட்பா… எறும்பா உழைத்திட அரிவினைத் தரும்பா, பெரும்புகழ் பெரும்பா… இரும்பா இருப்போர் தமையும், கரும்பாக் கரைக்கும், குறட்பா… விருப்பா? வெறுப்பா? இரண்டையும் அறுப்பா, எனச்சொலும் திருப்பா… திறப்பா, படித்துப் பறப்பா… நெறிப்பா, குறிப்பா இருப்பா… அயிர்ப்பா, உரிப்பா, உயர்த்தும் உயிர்ப்பா, உரைப்பா, உணரப்பா… கோலப்பா,…