வாழ்ந்து தழை – அரியரவேலன் புள்ளல்லவே? – நீ புழுவல்லவே? – பின் புல்லரைக் கண்டேன் அஞ்சுகிறாய்? கல்லல்லவே? – நீ கசடல்லவே? – பின் கயவரைக் கண்டேன் இஞ்சுகிறாய்? மண்ணல்லவே? – நீ மரமல்லவே? – பின் மடயரை ஏன்நீ கெஞ்சுகிறாய்? விழலல்லவே? – நீ வெற்றல்லவே? – பின் வீணரைக் கண்டேன் துஞ்சுகிறாய்? கண்ணைத் திற! – கீழ் விண்ணை அறி! – இரு கைகளை ஏனினும் கட்டுகிறாய்? கூட்டை உடை! – சங்கை ஊதி எழு! – சேவல் கூவிய…