(தோழர் தியாகு எழுதுகிறார் 217 : குடியாட்சியமும் கல்வியும் – தொடர்ச்சி) அறிவும் அறமும் மக்கள் பக்கம் நிற்பதற்கே! இனிய அன்பர்களே! “மிகினும் குறையினும் நோய் செய்யும்” என்ற வள்ளுவர் வாக்கு மருந்து அதிகாரத்தில் சொல்லப்பட்டிருப்பினும் பொதுவாக எல்லா நிலைமைகளுக்கும் பொருந்தும் படியானதே.!அந்தத் திருக்குறள் முழுவதையும் பார்த்தோமானால் மேலும் சுவையான முடிவுகள் பெறப்படும்.“மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்வளி முதலா எண்ணிய மூன்று.” திருக்குறள் 941.மு. வரதராசனார் உரை: மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும்…