(அதிகாரம் 016. பொறை உடைமை தொடர்ச்சி)    01. அறத்துப் பால் 02.இல்லற இயல் அதிகாரம்  017. அழுக்காறாமை   பிறரது வளநலங்களைப் பார்த்துப்   பொறாமை கொள்ளாத அறப்பண்பு..   ஒழுக்(கு)ஆ(று)ஆக் கொள்க, ஒருவன்,தன் நெஞ்சத்(து),      அழுக்கா(று) இலாத இயல்பு.          மனத்தாலும், பொறாமை இல்லாத,        இயல்பை ஒழுக்கநெறியாக் கொள்க.   விழுப்பேற்றின் அஃ(து)ஒப்ப(து) இல்லை,யார் மாட்டும்,      அழுக்காற்றின் அன்மை பெறின்.          யாரிடத்தும், பொறாமை கொள்ளாமையே,        ஈ[டு]இல்லாத சிறப்புப் பே[று]ஆகும்.  …