ஆதித்தனார் விருது பெற்ற தங்கர் பச்சான் கதைகள் – அறிமுகம்

பகிர்தல்   எப்படி எனக்கு எல்லாத் திரைப்படங்களையும் பார்க்கப் பிடிக்காதோ அப்படித்தான் எல்லா எழுத்துகளையும் படிக்க முடிவதில்லை. போர் மூண்டு விட்டது. இனி வாளினை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை எனும்போதுதான் அரசனும் வாள் எடுப்பானாம். அதுபோலத்தான் பேனாவை கையில் எடுத்து வெற்றுத்தாளின் மேல் கையைப் பதிக்க வேண்டிய கட்டாயமும் அவசியமும் ஏற் பட்டால் ஒழிய என்னால் எழுதவே முடிவதில்லை.  பல காலங்களில் பல்வேறுபட்ட மனநிலைகளில் எழுதப்பட்ட இந்தக் கதைகளை மொத்தமாக ஒருசேர ஒரே மனநிலையில் படித்துப் பார்க்கின்றபோது இதுவரை எனக்குத் தோன்றாத எத்தனையோ…

தமிழனுக்குச் சொல்லிக்கொடுத்தவர் சி.பா.ஆதித்தனார் – வெ. இராமசுப்பிரமணியன்

  90 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தமிழனுக்குச் சிறுதொழில், தன்முன்னேற்றம்பற்றிச் சொல்லிக்கொடுத்தவர் சி.பா.ஆதித்தனார் என்று உயர்நீதிமன்ற நீதிபதி நீதிபதி வெ. இராமசுப்பிரமணியன் புகழாரம் சூட்டினார்.   சி.பா.ஆதித்தனாரின் 111-ஆவது பிறந்தநாள் இலக்கியப் பரிசளிப்பு விழா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெ. இராமசுப்பிரமணியன் ஆற்றிய தலைமையுரை வருமாறு:- தமிழனின் அடையாளம்     73 ஆண்டுகளாகத் தமிழர்களின் அடையாளமாகவும், பத்திரிகைத் துறையில் அருந்திறல் புரிந்தும் ‘தினத்தந்தி’ வந்து கொண்டிருக்கிறது. ஒரு நிறுவனம் வெற்றி பெற வேண்டுமானால் பொதுவாக அதற்கு நல்ல நேரம் இருக்க…