இசைபற்றிய பழந்தமிழ் நூல்கள் அகத்தியம்: இஃது இயல் இசை நாடகமென்னும் முத்தமிழிலக்கணத்தையும் தெரிவிப்பதாகிய ஒரு பெரிய இலக்கண நூல்; தென்மதுரைக்கணிருந்த தலைச் சங்கப் புலவர்களுள் முதல்வராகிய அகத்திய முனிவராலருளிச் செய்யப்பட்டது. இது நச்சினார்க்கினியார் காலத்திலேயே இறந்து போயிற்றென்று தெரிகிறது ஆயினும் இதிலுள்ள சில சூத்திரங்கள் மட்டும் பழையவுரைகளில் ஆங்காங்கு காணப்படுகின்றன. இசை நுணுக்கம்: இது சாரகுமாரன் அல்லது சயந்தகுமாரனென்பவன் இசையறிந்ததற்பொருட்டு, அகத்திய முனிவர் மாணாக்கர் பன்னிருவருள் ஒருவராகிய சிகண்டியென்னும் அருந்தவமுனிவரால் வெண்பாவி லியற்றப்பட்ட இசைத் தமிழ்நூல்; இஃது இடைச்சங்கமிருந்த காலத்துச் செய்யப்பட்டதென்று அடியார்க்கு நல்லாருரையாலும்,…