தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙொ) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙை) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙொ)   புரவலர் அண்ணல் சுப்பிரமணியனார் அவர்களைத் தலைவராகவும் பேராசிரியரைச் செயலராகவும் கொண்ட திருவள்ளுவர் கழகம் அமைக்கப்பெற்றது. அண்ணலாரால் வள்ளுவர் பதிப்பகம் நிறுவப்பட்டுப் பேராசிரியரின் ‘திருக்குறள் எளிய பொழிப்புரை’, ‘எல்லோரும் இந்நாட்டரசர்’ ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. பின்னர், நூல் வெளியீட்டுப்பணி தொடர்ந்து, ‘தொல்காப்பிய ஆராய்ச்சி’, ‘பழந்தமிழ்’, ‘இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல்’ முதலான நூல்களும் வெளியிடப்பட்டன.  திருக்குறள் கழகம் மூலம் பேராசிரியர் திருக்குறள் சொற்பொழிவுகள் நடத்தியதற்குப் பெரிதும் வரவேற்பு இருந்தது. இது குறித்துப்…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙை) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙே) – தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙை) இதழாயுதம் ஏந்திய போராளி – தொடர்ச்சி   “பேராசிரியர் இலக்குவனார் இலங்கைத் தமிழர் நலன் குறித்து அப்பொழுதே பேசினார். வரைபடம் ஒன்றில் இலங்கையில்  தமிழர்பகுதியைத் தனியாகக் காட்டிப்  புத்தகம் ஒன்றில் வெளியிட்டார். திருச்சி வானொலி உரை ஒன்றில், இலங்கையில் உள்ள தமிழர்கள் தன்னுரிமையுடன் வாழ்ந்தால்தான் அவர்கள் அங்கே உரிமையுடன் நிலைத்து வாழ முடியும் என்றார். அக்காலக்கட்டத்தில் இலங்கைக்குச் செல்ல அழைப்பு வந்தபொழுது இவர் வந்தால் இலங்கை இரண்டாகும் என்று காரணம்…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙே) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙெ) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙே) இதழாயுதம் ஏந்திய போராளி – தொடர்ச்சி   பெரியார் அவர்கள், தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டுப் பிரிவினையை வேண்டப் போவதாக அறிவித்துள்ளார்கள். ஆனால், தேர்தலில் காங்கிரசுக்கட்சி வெற்றி பெற உழைத்துவிட்டுப் பின்னர்ப் பிரிவினை கேட்கப் போகிறேன் என்பது அறிவுக்குப் பொருந்துவதாக இல்லை. மொழிவழி மாநிலங்கள் உரிமையுடன் வாழ வேண்டுமானால் காங்கிரசுக்கட்சி மறையவேண்டும். காங்கிரசுக்கட்சியால்தான் மாநிலங்கள் உரிமையற்றுக் கிடக்கின்றன. ஒரே இந்தியா என்ற கொள்கையை உறுதியாகப்பற்றி நிற்கும் காங்கிரசை அகற்றினாலன்றிப் பிரிவினைக் கொள்கை வெற்றி…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙெ) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙூ) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙெ) இதழாயுதம் ஏந்திய போராளி – தொடர்ச்சி   அப்போதைய ஆளுநர் திரு சிரீபிரகாசா அவர்கள், “ஆடவர்கள் வெறித்துப் பார்ப்பதை மறுக்கும் ஒரு பெண்ணைக் கூட நான் இதுவரை சந்தித்ததில்லை” எனப் புதிய மண்டபத்திறப்பு விழா ஒன்றில் பேசினார். இது குறித்த கண்டனைக் கணைகளை விடுக்கப் பேராசிரியர் இலக்குவனார் தவறவில்லை. பின்வரும் பேராசிரியர் இலக்குவனாரின் உரையே அவரின் தமிழ்க்காப்பு உணர்வை வெளிப்படுத்தும்.   “பந்தயம் பார்க்கவும் பதக்கங்கள் வழங்கவும் கட்டடத் திறப்பு விழாக்களில்…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙூ) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙு)  தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙூ) இதழாயுதம் ஏந்திய போராளி – தொடர்ச்சி   1952-ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிக்குப் பெருந்தலைவர் காமராசரும் சி.டி.நாயுடு என அழைக்கப்பெறும் அறிவியல் அறிஞர் கோ.துரைசாமி அவர்களும் போட்டியிட்டனர். பெருந்தலைவர் தமிழ்நாட்டை வழி நடத்த வேண்டும் எனக் கூறிய பேராசிரியர் இலக்குவனார், அறிவியல் அறிஞர் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவது நாட்டிற்கே நலம் பயக்கும் என அவருக்காக முனைப்பான பரப்புரை மேற்கொண்டார். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கல்லூரிச் செயலர் திரு…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙு] – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙீ]  தொடர்ச்சி)                        தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙு] இதழாயுதம் ஏந்திய போராளி – தொடர்ச்சி   நெல்லையில் பணியாற்றிய பேராசிரியர் சி.இலக்குவனார் அடுத்து விருதுநகர் செந்திற்குமாரநாடார் இந்துக்கல்லூரியில் (10.08.47 அன்று) தமிழ்த்துறைத்தலைவராகப் பணியில் சேர்ந்தார்; இக்கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் பட்டப் படிப்பின்மையால் இளங்கலையில் தமிழ் இலக்கியத்தை அறிமுகப்படுத்தினார். கல்லூரியிலும் தமிழ் அமைப்புகள் மூலமாக நகரிலும் தம் தமிழ்த் தொண்டினைத் தொடர்ந்தார் பேராசிரியர்.   “பேராசிரியர் (சி.இலக்குவனார்) சென்ற இடங்களில் எல்லாம் தமிழ்த் தொண்டே நிகழ்ந்தது. தமிழுக்கு மறுமலர்ச்சி…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙீ] – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙி]  தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙீ] இதழாயுதம் ஏந்திய போராளி  போராளிப் பணி ஒரு துறையுடன் முடிவடைவதில்லை. போராளிக்கு ஓய்வேது? ஒழிவேது? பேராசிரியரும் கல்விநிலையம் சார்ந்த பணியுடன் நின்று விடவில்லை. இதழ்ப்பணி மூலமாகத் தம் தொண்டினைத் தமிழ் உலகம் முழுவதும் விரிவு படுத்தினார். தமிழை வளர்ப்பதாகச் சொல்லிக் கொண்டே தமிழைச் சிதைக்கும் பல அமைப்புகள்போன்ற ஒரு குழு (வட்டத்தொட்டி) நடத்திய கூட்டத்தில் ‘சங்க இலக்கியத்தைத் தூக்கி வங்கக் கடலில் எறிவோம்’என்று முழங்கினர். இதை அறிந்த பேராசிரியர் இலக்குவனார், தமிழ்…