இந்திய வரலாற்றில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது – கே.கே.பிள்ளை

  தமிழ்ச் சமுதாயம் மிகவும் பழமையான ஒன்றாகும். பண்டைய எகிப்து, பாபிலோனியா, கிரீசு, உரோம் ஆகிய நாடுகள் நாகரீகத்தில் மிகவும் சிறந்து விளங்கிய பண்டைக்காலத்திலேயே தமக்கென ஒரு நாகரிகத்தையும் சிறந்த பண்பாட்டையும் வளர்த்து வாழ்ந்து வந்தவர்கள் தமிழர்கள். இந்திய நாட்டு வரலாற்றில் இதுவரையில் தமிழகத்துக்குச் சிறப்பிடம் அளிக்கப்படவில்லை. தமிழ்நாடு என்று ஒரு நாடு இருப்பதாகவே வரலாற்று ஆசிரியர்கள் கருதியதில்லை. சென்ற நூற்றாண்டில் ஆர்.(ஞ்)சி.பந்தர்க்கார் என்பார் இந்திய வரலாறு ஒன்று எழுதி வெளியிட்டார். அதில் அவர் தமிழ்நாட்டைப் பற்றியே குறிப்பிடவில்லை.   இக்குறைப்பாட்டை வின்செண்டு சுமித்…

இந்திய வரலாறு குமரிநாட்டிலிருந்தே தொடங்கப் பெறுதல் வேண்டும் – சி.இலக்குவனார்

இந்திய வரலாறு குமரிநாட்டிலிருந்தே தொடங்கப் பெறுதல் வேண்டும். தமிழகம் மிகவும் தொன்மை வாய்ந்த வரலாற்றினையுடையது. ஆனால் வரலாற்றாசிரியர்கள் தமிழகத் தொன்மையை நன்கு ஆராய்ந்து வரையறுத்து எழுதுவதில் கருத்துச் செலுத்திலர். இந்திய வரலாற்றாசிரியர்களில் பெரும்பான்மையினர் தமிழகத்தைப் பற்றிய நினைவே கொண்டிலர். வட இந்தியாவிலும் தென்னிந்தியாவே மிகவும் தொன்மை வாய்ந்தது. வரலாறு மிகத் தொன்மையான காலத்திலிருந்தே எழுதப்பெறுவது மரபென்றால் இந்திய வரலாறு குமரி நாட்டிலிருந்தே தொடங்கப் பெறுதல் வேண்டும். குமரி ஆறும் குமரி மலையும், பனி மலையினும் கங்கையாற்றினும் மிக மிகத் தொன்மை வாய்ந்தனவாகும். “மன்பதை முதலில்…