இயற்கையோடு அறிவியலுக்கு ஒப்ப இயைந்ததே திருக்குறள்! – பெரியார்

இயற்கையோடு அறிவியலுக்கு ஒப்ப இயைந்ததே திருக்குறள்!  திருக்குறளை மெச்சுகிறார்களே ஒழிய காரியத்தில் அதை மலந்துடைக்கும் துண்டுக் காகிதமாகவே மக்கள் கருதுகிறார்கள். அதோடு அதற்கு நேர்மாறாக விரோதமான கீதையைப் போற்றுகிறார்கள்.  அறிவால் உய்த்துணர்ந்து ஒப்புக் கொள்ளக் கூடியனவும் இயற்கையோடு விஞ்ஞானத்துக்கு ஒப்ப இயைந்திருக்கக் கூடியனவும் ஆன கருத்துக்களையே கொண்டு இயங்குகிறது வள்ளுவர் குறள். தந்தை பெரியார் ஈ வே. இராமசாமி

இயற்கைப்பின்னணி தமிழுக்கே உள்ள சிறப்பு – நெ.சுப்பையா

அக உணர்வுகளை இயற்கையோடு பின்னிப்பாடும் அருமை, தமிழ் இலக்கியங்களுக்கே உள்ள சிறப்பு   சங்க இலக்கியங்களை அகம் புறமென இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவற்றுள் அகமென்பது மனத்தின்கண்ணே நிகழும் உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் சித்தரித்துக் காட்டும் பாடல்களையேயாம். அவை அகப்பாட்டு எனப்படும். இப்பாட்டில் சிறந்த மக்களைப் பற்றியே பேசப்படும். புறமென்பது புறத்தே நடக்கும் காரியங்களை விளக்கிக் காட்டும் பாடல்களையேயாம்; அவை புறப்பாடெனப்படும். தலைவன், தலைவியாகிய இருவர்பால் நிகழும் உணர்ச்சிகளைச் சொல்லோவியமாகக் கவின் பெறக் காட்டினார்கள் நம் சங்கத்துச் சான்றோர்கள். அகத்தே நிகழும் உணர்ச்சிகளை, இயற்கையோடு…

மாமூலனார் பாடல்கள் – 17 : சி.இலக்குவனார்

 (சித்திரை 14, தி.ஆ.2045 / 06, ஏப்பிரல் 27, 2014 இதழின் தொடர்ச்சி) – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்     கஎ. செய்வது என்ன என்று ஆராய்வாய்” – தலைவி   பிரிந்த தலைவன் வரவில்லையே என வருந்தினாள் தலைவி. தலைவியின் வருத்தம்கண்ட தோழியும் மிகவும் வருந்தினாள். அத்தோழியை நோக்கித் தலைவி கூறுகின்றாள்.    அன்புள்ள தோழியே! அவர் (தலைவர்) பிரிவேன் என்றார் அன்று கூறிய  மொழி – ஓயாது கூறிய உறுதிமொழி – “நின்னை விட்டுப் பிரியேன்;…