அரசியலில் திரைப்புள்ளிகள் – இரசினி, குட்பு

அரசியலில் திரைப்புள்ளிகள் – இரசினி, குட்பு   அரசியலில் பங்கேற்க யாவருக்கும் உரிமையுண்டு. பிற துறையைச் சேர்ந்தவர்கள் பங்கேற்பதுபோல் திரைத்துறையினருக்கும் அந்த உரிமையுண்டு. என்றாலும் நாட்டு மக்களுக்கு எத்தொண்டும் ஆற்றாமல், அவர்களின் சிக்கல்களைத் தீர்ப்பதற்காகக் குரல் கொடுக்காமல், அவர்களின் போராட்டக்களங்களில் தோள் கொடுக்காமல், நன்கறிநிலை(popularity) உள்ளதால் மட்டுமே அரசியல் தலைமையையும் நாட்டுத்தலைமையையும் எதிர்பார்த்து அரசியலில் காலடி எடுத்து வைப்பது என்பது வீண் கனவே!. அப்படி எந்த ஒரு துரும்பையும் மக்களுக்காக எடுத்துப் போடாதவர்களை அரிசியலில் இறங்கவும் முதல்வர் பதவியை அணி செய்யவும் சிலர் அழைக்கின்றார்கள்…

இரசினி குழுவினரின் சிறந்த நடிப்பு!

  இரசினிகாந்து தன் ஒப்பனைத் தோற்றத்தை நம்பாமல் தன் நடிப்பு முறையை நம்பும் தன்னம்பிக்கை உள்ளவர். ஆனால், இப்பொழுது அவருக்குத் தன்னம்பிக்கை குறைந்துவிட்டது போலும்! திரைக்கு வெளியேயும் தன் குழுவினருடன் சேர்ந்து நடித்து வருகிறார். இரசினி நடிக்கும் (இ)லிங்கா என்னும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கத்தில் கருநாடகா மாநிலத்தில் நடைபெற்றது. கத்தூரி கருநாடக சனபர வேதிகே என்னும் அமைப்பின் சார்பில் இராம்நகரில் அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்தி அவரது உருவப் பொம்மையை எதிர்த்தனர். ஏனெனில் அவர் காவிரியாற்றுச்சிக்கலில் தமிழர் பக்கம் உள்ளாராம். கேழ்வரகில் நெய்வடிகின்றது என்றால்…