(சித்திரை 7, 2045 / 20 ஏப்பிரல் 2014 இதழின் தொடர்ச்சி) இறந்த மொழிகள் மேற்கூறிய இருவகை மொழிப் பாகுபட்டினையம் உளத்திற்கொண்டு ஒரு சேர ஆய்வோமாயின் ஒருண்மை புலனாகின்றது. முதற் பாகுபாட்டில் உள்ள 1. இந்திய ஐரோப்பிய மொழிகள், 2. செமிட்டிக்கம் என்ற இனத்தைச் சேர்ந்த மொழிகள் இவையிரண்டும் இரண்டாம் பாகுபாட்டில் உள்ள உட் பிணைப்பு மொழிகளாயுள்ளன. இவற்றிலேயே சிறந்த மொழிகள் நூற்றுக்கு ஐம்பது விழுக்காடு காணப்படுகின்றன. வேர்ச்சொற்கள் இன்னதென அறியமுடியாதவாறு சொற்கள் மாறுபாடடைதல் இம்மொழிகளிற் பல உலகவழக்கறுவதற்கு ஒரு காரணமாயிருக்கலாம். ஒரு காலத்தில்…