அகமே நீ வாழ்த்துக! – மேதை வேதநாயகம்

அகமே நீ வாழ்த்துக! கதிரவன் கிரணக் கையால்             கடவுளைத் தொழுவான் புட்கள் சுதியொடும் ஆடிப் பாடித்             துதிசெயும் தருக்க ளெல்லாம் பொதியலர் தூவிப் போற்றும்             பூதம்தம் தொழில்செய் தேத்தும் அதிர்கடல் ஒலியால் வாழ்த்தும்             அகமேநீ வாழ்த்தா தென்னே மேதை வேதநாயகம் பிள்ளை: நீதித்திரட்டு

முதலும் நடுவும் முடிவும் அருட்பெருஞ்சோதியே! – இராமலிங்க வள்ளலார்

முதலும் நடுவும் முடிவும் அருட்பெருஞ்சோதியே! சாதியும் மதமுஞ் சமயமுந் தவிர்ந்தேன்             சாத்திரக் குப்பையுந் தணந்தேன் நீதியும் நிலையுஞ் சத்தியப் பொருளும்             நித்திய வாழ்க்கையுஞ் சுகமும் ஆதியும் நடுவும் அந்தமும் எல்லாம்             அருட்பெருஞ் சோதியென் றறிந்தேன் ஓதிய அனைத்தும் நீயறிந் ததுதான்             உரைப்பதென் னடிக்கடி யுனக்கே குலத்திலே சமயக் குழியிலே நரகக்             குழியிலே குமைந்துவீண் பொழுது நிலத்திலே போக்கி மயங்கியே மாந்து             நிற்கின்றார் நிற்கநா னுவந்து வலத்திலே நினது வசத்திலே நின்றேன்             மகிழ்ந்துநீ யென்னுள மெனும்…

யாவும் நீ! – தாயுமானவர்

யாவும் நீ! கொழுந்து திகழ்வெண் பிறைச்சடிலக்             கோவே மன்றில் கூத்தாடற் கெழுந்த சுடரே இமையவரை             என்தாய் கண்ணுக் கினியானே தொழுந்தெய் வமும்நீ; குருவும்நீ;             துணைநீ; தந்தை தாயும்நீ; அழுந்தும் பவம்நீ; நன்மையும்நீ;             ஆவி, யாக்கை நீதானே !   தாயுமானவர்: சொல்லற்கரிய: 5

நம் கடமை! – பாரதியார்

  கடமை யாவன தன்னைக் கட்டுதல் பிறர்துயர் தீர்த்தல் பிறர்நலம் வேண்டுதல் . . . .     . . .       . . .       . . . உலகெலாங் காக்கும் மொருவனைப் போற்றுதல் இந்நான் கே இப் பூமியி லெவர்க்கும் கடமை யெனப்படும் . . .   . . . நமக்குத் தொழில்கவிதை நாட்டிற் குழைத்தல் இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல் சிந்தையே இம்மூன்றும் செய்! – பாரதியார்