இலக்கியம் கூறும் தமிழர் இல்லறம் (சங்கக் காலம்) – சி.இலக்குவனார்

(இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  14–  தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  15 7. இல்லறம்   ‘இல்லறம்’ என்பது வீட்டிலிருந்து வாழும் அறநெறி என்னும் பொருளதாகும்.  இல்லற வாழ்வே மக்களை மாக்களினின்றும் வேறு பிரித்து உயர்த்துவதாகும்.  மக்களும் மாக்கள்போல் பசித்தபோது கிடைத்தனவற்றை உண்டு, உறக்கம் வந்தபோது உறங்கி, அவ்வப்போது பொருந்தியோருடன் விரும்பியஞான்று மணந்து, வேண்டாதஞான்று தணந்து நாளைக் கழித்த காலம் உண்டு.  மரங்களிலும் மலைப்புழைகளிலும் விலங்குகளோடு விலங்குகளாய் வாழ்ந்த காலம் அது.  நாளாக நாளாக அறிவு…

வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 8

(வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார். 7. தொடர்ச்சி) வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 8 3.இல்லறத் துணைவர் இனிதே சேர்தல்  உலகியல் வாழ்வை உவப்புறத் துய்க்க இல்லறமே இனிதெனக் கண்டோம்; இல்லறத்தை இனிதே நடத்த இனிய துணைவி இன்றியமையாதவள் என்று தேர்ந்தோம். இனிய துணைவியை எவ்வாறு அடைவது?  இன்று பெற்றோரும் உற்றோரும் துணைவனுக்குத் துணைவியையும் துணைவிக்குத் துணைவனையும் ஓடி ஆடி நாடிச் சேர்க்கின்றனர். சேர்க்கும் போது எல்லாப் பொருத்தங்களையும் இனிதே காண முயல்கின்றனர். ஆனால், உள்ளப் பொருத்தம் உளதா என…

வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 7.

(வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 6. தொடர்ச்சி) வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை ங. களவியல்  (வரிசை எண்கள் / எழுத்துகள் ‘ங’கரத்திலிருந்து குறிக்கப் பெறுகின்றன.)                  சிறைகாக்கும் காப்பு எவன்செய்யும்; மகளிர்                   நிறைகாக்கும் காப்பே தலை    (57)              மகளிர் சிறை காக்கும்=மகளிரைச் சிறையில் வைத்துக் காப்பாற்றும். காப்பு=காவல். எவன் செய்யும்=என்ன செய்யும்? நிறைகாக்கும்=மகளிர் தமது உள்ளத்தை அறத்தின் கண் நிறுத்தும் தன்மையால், காக்கும்=காப்பாற்றும். காப்பே= காவலே, தலை=தலையானது.                 உலகெங்கணும் ஆண் பெண் உறவு…

வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 6.

(வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 5. தொடர்ச்சி) வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை ங. களவியல்  (வரிசை எண்கள் / எழுத்துகள் ‘ங’கரத்திலிருந்து குறிக்கப் பெறுகின்றன.)                 பெண்ணின் பெருந்தக்க யாவுள?  கற்பென்னும்                  திண்மை உண்டாகப் பெறின்    (54)  பெண்ணின்=மனைவியைவிட,பெருந்தக்க=பெருமை மிக்கவை, யாவுள=எவை உண்டு, கற்பு என்னும்=கற்பு என்று சொல்லப்படும், திண்மை=கலங்கா நிலைமை, உண்டாகப் பெறின்=இருக்கப்பெறுமானால்.    நல்வாழ்க்கைக்குத் துணையாய் இருக்கக் கூடியவள் மனைவியேயாவாள். அவள் தான் கொண்ட கணவனிடம் நீங்காத அன்புடையவளாய் இருத்தல் வேண்டும்….

இல்லறத்தில் இனிது வாழ்க ! – பரிதிமாற்கலைஞர்

இல்லறத்தில் இனிது வாழ்க ஆடலு மழகும் பாடலுஞ் சான்றீர் இன்னிசைக் குயில்கள்! பன்னருங் கலைவலீர் நும்வகைப் பட்டோர் நுமைத்தெய்வ மென்பர் நுந்தமக் கோர்சொல் சிந்தை செய்ம்மினோ வாய்ப்பாரு நலனெலாம் வாய்க்கப் பெற்றீர் என்கொ லவற்றைப் புல்லிடை யுகுக்கின்றீர் தூய இல்லறக் கோயி லில்லை கொல்? இன்னற மணியெனு மியற்கை நலத்தீர் வீழ்ந்த மகளிர்காள் விரைவினி லெழுமின் ஆழ்ந்திடா தின்னே யறிவுகைப் பற்றுமின் இழிந்தார் புகழுரை யேற்றுக் கொள்ளலிர் இன்புடன் மேவி யில்லறத் தினிது வாழிய எங்கை மீரே – பரிதிமாற்கலைஞர்: தனிப்பாசுரத் தொகை

தாமரை மன்னிப்பு கேட்க வேண்டும்!

குடும்பச்சிக்கலைத் தமிழ்த்தேசியச் சிக்கலாகத் திரிக்கலாமா?     இல்லறம் என்பது அன்பும் அறனும் இணைந்த நல்லறமாகும். நம்பிக்கை, புரிதல், விட்டுக் கொடுத்தல் ஆகியவை இருந்தால்தான் அமைதியான வாழ்க்கை காணமுடியும். ‘வீட்டுக்கு வீடு வாசற்படி’ என்பது எல்லாக் குடும்பங்களிலும் சண்டையும் பிணக்கும் உள்ளமையை உணர்த்துவதே! எனவே, குடும்பத்தலைவன், தலைவியிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் மன வேறுபாடாக மாறும் முன்னரே இணங்கிப்போய் இணைந்து வாழ்வதுதான் அவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும் ஏற்றதாய் அமையும்.  கருத்து வேறுபாடுகளையும் கருத்து மோதல்களையும் இயல்பாக எடுத்துக் கொள்ளாமல் பகையாக நோக்குவதால்தான்…