வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 4.

(வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார்:3. தொடர்ச்சி) வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை ங. களவியல்  (வரிசை எண்கள் / எழுத்துகள் ‘ங’கரத்திலிருந்து குறிக்கப் பெறுகின்றன.)                 ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா இல்வாழ்க்கை                 நோற்பாரின் நோன்மை யுடைத்து (48)    ஆற்றின் ஒழுக்கி=நல்நெறியில் பிறரை ஒழுகச் செய்து அறன் இழுக்கா=அறநெறியினின்று மாறுபடாத, இல் வாழ்க்கை=இல்லற வாழ்க்கை, நோற்பாரின்=தவம் செய்வாரின் வாழ்க்கையைவிட, நோன்மை யுடையத்து=தாங்கும் தன்மை மிகுதியும் உடையது.    இல்லற நெறியை மேற்கொண்டு மனையாளொடு வாழ்கின்றவர் பெரியவரா? இல்லறத்தை வெறுத்துத்…

வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 3.

(வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார்:2. தொடர்ச்சி)  வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை ங. களவியல்  (வரிசை எண்கள் / எழுத்துகள் ‘ங’கரத்திலிருந்து குறிக்கப் பெறுகின்றன.)                 அன்பும் அறனும் உடைத்தாயின்  இல்வாழ்க்கை                பண்பும் பயனும் அது (திருக்குறள்  45)                 இல் வாழ்க்கை=இல்லற வாழ்க்கை, அன்பும்=அன்பையும், அறன்=அறனையும்,  உடைத்தாயின்= பெற்றிருக்குமாயின், பண்பும்=இல் வாழ்க்கைக்குரிய பண்பும், பயனும்=பயனுடைமையும், அது=அங்ஙனம்  பெற்றிருத்தலாகும். அன்பு   பரிமேலழகர், “தன் துணைவிமேல் செய்யத் தகும் அன்பினை…

வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 2.

(வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார்:1. தொடர்ச்சி) வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 2.    வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை ங. களவியல்  (வரிசை எண்கள் / எழுத்துகள் ‘ங’கரத்திலிருந்து குறிக்கப் பெறுகின்றன.) இல்வாழ்க்கை      இல்லாளோடு கூடி வாழ்தலே இல்வாழ்க்கை எனப்படும். ‘இல்லாள்’ என்பது வீட்டிற்குரியாள் எனும் பொருளைத்தரும். ‘இல்லான்’ என்பதோ ஒன்றும் இல்லான், வறியன் எனும் பொருள்களைத் தரும். ஆதலின், இல்லத் தலைமைக்குரியவர்கள் பெண்களே எனத் தமிழ்முன்னோர் கருதியுள்ளனர் என்றும் பெண்ணினத்தின் முதன்மையைப்…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 005. இல்வாழ்க்கை

(அதிகாரம் 004. அறன் வலியுறுத்தல் தொடர்ச்சி 001 அறத்துப் பால் 02  இல்லற இயல்       அதிகாரம்  005. இல்வாழ்க்கை      குடும்ப வாழ்க்கையின் கடமைகளும்,        அரும்பெரும் பொறுப்புக்களும், சிறப்புக்களும்.   இல்வாழ்வான் என்பான், இயல்(பு)உடைய மூவர்க்கும்,      நல்ஆற்றின் நின்ற துணை.          பெற்றார், மனைவி, மக்களுக்கு,        இல்வாழ்வான் நவவழித் துணைவன்.   துறந்தார்க்கும், துவ்வா தவர்க்கும், இறந்தார்க்கும்,      இல்வாழ்வான் என்பான் துணை.          துறவியார், வறியார், ஆதரவிலார்க்கு,        இல்வாழ்வான்…