ஆய்வுக்கு ஓய்வு! இளங்குமரன் ஐயா நம்மை விட்டுப் பிரிந்தார்!

ஆய்வுக்கு ஓய்வு!  இளங்குமரன் ஐயா நம்மை விட்டுப் பிரிந்தார்!   உண்ணச் சிறிது போதும்! உறங்கப் படுக்கைத் தேடேன்! எண்ணப் பொழுது வேண்டும்! எழுத உரிமை வேண்டும்! என்பதை முழக்கமாகக் கொண்டு வாழ்ந்த ஆய்வறிஞர், தமிழ்க்கடல், முதுமுனைவர் இரா.இளங்குமரனார் இன்று(ஆடி 09, 2052 / 25.07.2021) இரவு 7.45 மணிக்குத் திருநகரில் அவரது இல்லத்தில் மறைந்தார். பள்ளி ஆசிரியர், நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், ஆய்வாளர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், சொற்பொழிவாளர், தமிழ் அமைப்புகளின் பொறுப்பாளர் எனப் பல்வேறு நிலைகளில் வாழ்க்கைப் பயணத்தை நடத்தியவர் பயணத்தைக்…

பேராசிரியர் நமக்கு வழங்கும் நெறியுரைகள்

பேராசிரியர் நமக்கு வழங்கும் நெறியுரைகள் நாம் பேராசிரியர்போல் போராளியாகத் திகழாவிட்டாலும் உரிமையுள்ள தமிழ் மாந்தராகவாவது வாழ வேண்டுமல்லவா? அதற்குப் பேராசிரியரின் பின்வரும் அறிவுரை களை அவர் நமக்கு இட்ட கட்டளைகளாகக் கொண்டு ஒழுக வேண்டும்: மொழியைக்காத்தவர்விழியைக்காத்தவர்! மொழியைச்சிதைத்தவர்விழியைச்சிதைத்தவர்! மொழிக்கும்விழிக்கும்வேற்றுமைஇல்லை! மொழியே விழி விழியே மொழி என்று கிளர்ச்சி கொள்ளுங்கள். தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று அறைகூவுங்கள். தமிழ்வாழ்க!தமிழ்வாழ்க! தமிழ்ஓங்குக!தமிழ்உயர்க! என்றுவாழ்த்துங்கள் தமிழில்எழுதுக!தமிழில்பேசுக! தமிழில்பெயரிடுக!தமிழில்பயில்க! என்றுமுழங்குங்கள். மொழிவாழ்வுக்குமுயற்சிசெய்யுங்கள்… உங்கள்முயற்சிவாழ்க! தமிழ்வாழ்ந்தால்தமிழர்வாழ்வர்! தமிழர்வாழ்ந்தால்தமிழ்நாடுவாழும்! தமிழ்வாழ்வேதமிழர்வாழ்வு! (தரவு : புலவர்மணி இரா.இளங்குமரன்: பக்கம் 37: செந்தமிழ்க்காவலர்சி.இலக்குவனார்)

100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன்

‘’அன்னசத்திரம் ஆயிரம் நாட்டல் ஆலயம் பதினாறாயிரம் நாட்டல் அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’’ என்ற மாக்கவி பாரதியின் வரிகளை மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறார் சிங்கப்பூரில் உள்ள தமிழாசிரியர் ஒருவர் என்றால் நம்பமுடிகிறதா உங்களால்… நம்புங்கள் அவர் ஏழை மாணவர்களுக்காக 100  புதுக்காணி நிலத்தில் இலவச பள்ளிக் கூடமும் கட்ட இருக்கிறார். அவர்  ஓர் ஏழையை மட்டுமல்ல கிட்டத்தட்ட 500 ஏழை மாணவர்கள் படிப்பதற்கு உதவி செய்து வருகிறார். இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், மிகவும் வறிய நிலையில் இருந்த பத்து ஏழை…