தமிழ்அறம்பாடி வந்தஅறிஞன் ! – மா.கந்தையா

யார்  இவர் ? ! ” தமிழைப்  பழித்தவனை  என்தாய் தடுத்தாலும் விடேன் எதிரிகள்  கோடி  இட்டு அழைத்தாலும்  தொடேன் “ வஞ்சினம்  கூறிய  வாதில்புலவன்  பாவேந்தர் வழிவந்த  மறவன்   தமிழ்அறம்பாடி  வந்தஅறிஞன் ! சங்கத்துமது   ரையில்தமிழைப்  பங்கப்படுத்திப்   பேசிய ஓங்குபுகழ்  அறிஞரெனினும்  ஒவ்வாதசொல்  லைத்தாங்காது தமிழைப்  பழித்தவர்க்கு  தக்கறிவூட்டி கருத்தினை உமிழ்ந்து  தள்ளியதற்கு  ஓர்சான்று   உண்டன்றோ ! விடுதலையான  நம்நாட்டில்  கெடுதலையேதரும் பொருள்நிலையை சடுதில்மாற்றி  இந்தியநாடு  சமநிலைகாண  நிதிஅமைச்சராகவும் சர்ச்சிலொடு வாதிட்டுவென்று ‘சர்பட்டம் ‘  பெற்ற ஆர்….

எழுத்தெல்லாம் தூய தமிழ் எழுத்தாகுமா? – இளையவன் செயா

கல்விபடைத்த காமராசரை வாழ்த்துவோம்! பழுத்த  பலாவும்முற்றப்  பழுத்த பனம்பழமும் பழம்தானே அழுத்தமாய்க்  கேட்கிறேன்  பழச்சுவை  ஒன்றாமோ ?  இல்லை கொழுத்தும்  கதிரவனும்  குளுமைதரும்  நிலவும் கோள்கள்தானே இழுத்து  மூடுவதும் இதமாயின்பம் பெறுவதும்  ஒன்றாமோ ? அழுத்தும் வறுமையும் கொழுத்த செல்வமும் பொருளால்தானே கழுத்தில் வெறும்கயிறும் கழுத்துவலிக்கும் அணிகளும் ஒன்றாமோ ? புழுத்துப்போன குமுகாயத்தில் புல்லர்கள்  வாழ்வைப் போற்றி வழுத்துவதும் அவரையே வாழ்த்துவதும் நன்றாமோ ? இல்லை பழுதின்றிப் பூத்த பனிமலரும் கோயில்  கருவறையில் தொழுது  வணங்கத் தொகுத்த மொழியும்  நல்ல முழுத்தத்தில்  முடித்த மணமும்…

கண்மைகாயு முன்கருகிட்ட கண்மணிகள் ! – – இளையவன் செயா (மா.கந்தையா)

பெரியார் ஆண்டு 135  தொ. ஆ. 2880  தி.ஆ.2046    ஆடவை ( ஆனி ) 30                15–07–2015 பத்தோடு  ஓராண்டு பறந்தோடி  விட்டதுகாற்றாய் இத்தரையில்  இன்னா  இனியதறியா   இளம்குருத்துகள் புத்தகமும்  கையுமாய் புத்தறிவுப்  பெறப்போனவர்களை பத்திஎரிந்த  தீநாக்கு பதம்பார்த்து  விட்டதே ! குடந்தைப்  பள்ளியிலே மடந்தையர்பெற்ற  மலர்கள் இடம்விட்டு நகராமலே இதயம் கருகினரே ! குடமளவு  கண்ணீரைக்  கொட்டினரே  மக்கள் தடம்மாறா  நினைவுகளைத் தரணிக்கு அளிப்போம் !  (16–07–2004 ) கருகிய …

கண்டீரா ஓர் இறும்பூதை ! : இளையவன் – செயா

மதுரைப் பாவலர் மா.கந்தையா அவர்கள் தமது மாரடைப்பில் நலந்தேறியபின் தமது மக்களுக்க்கு எழுதிய கவிதை மடல் தமிழ் உணர்வும் ஊற்றமும் பெரியாரிய உறைப்பும் மிக்க அப் பாவலர் தமிழ்த்தாய் அருளால் நலமோங்க வாழ வாழ்த்துகிறோம். – முனைவர் மறைமலை இலக்குவனார்     கண்டீரா  ஓர்  இறும்பூதை ! திருப்பாற்   கடலில்   திருஅமுதம்  எடுக்க ஒருபுறம் தேவர்கள் மறுபுறம் அசுரர்கள் மேருமலையை மத்தாக குறும்பாம்பாம் வாசுகியை பெரும்கயிறாகக் கொண்டு  பெருங்கடலைக் கடைந்தனராம் ! கண்டான்வாலி அனைவரையும் கண்ணால் அகலச்செய்து கையால்  கடைந்தான் ;  கடைந்தவரிடம் அமுதம்தந்தானாம்…

“இனிமைத் தமிழில்” மை!

இனிமைத் தமிழில் இருக்கின்ற ” மை ” விகுதிக்       கனிவான மூவெழுத்துச் சொற்கள் எவையெனஎன் கருத்தாய்வில் முனைந்து பொருத்தத் தேடினேன்      திருத்தச் சொற்களைக் குருத்தாய்க் கூறுகிறேன். அண்மை யோடருமை அடிமை இம்மை இனிமை இருமை இளமை இறைமை இன்மை இலாமை யோடுஆளுமை ஆடுமை ஆண்மை ஆணுமை ஆடாமை ஆளாமை ஆணிமை ஆகாமை ஈகாமை உரிமை      உடைமை உண்மை உம்மை உவமை உறாமை ஊராமை ஊர்மை ஊதாமை      ஊதுமை ஊடாமை ஊடுமை எண்மை எளிமை எருமை எம்மை எழுமை     …

மண் பறித்த மானம்! -இளையவன் செயா

விடுதலையே எம்பிறப்புரிமைஅவ் வேட்கைக்குக்        கெடுதல் செய்வோரையும் கெடவைத்த வீரமிகு  நேத்தாசியைப்பெற்று  வளர்த்த       வங்கமண்  இன்று தொங்கிவிட்டதே ! மொழிஅது தாய்காத்த விழிஅந்த        விழியை அழிப்பதற்கு விழையாதீர் விழைந்ததால் தான்பெற்ற”சர்” விருதையும்        பிழையான விருதுஎனப் புறமொதுக்கி பிழைப்புக்காக ஏந்திய பித்தலாட்டத்தைக்       கழையாக  நினைத்தொடித்த  கவிஞர் பிழையில்லா  இரவீ ந்திரநாத் தாகூர்       பிறந்திட்ட மண்அதுவே வங்கமண் ! விடுதலை  வேட்கையால்  வீறுகொண்டு       கெடுதலையே  செய்யும்   கேடர்களை வெற்றிகொள்ள  வீரமுழக்கமிட்ட வீரர்கள்       வற்றிப்  போகாதமண்   வங்கமண் !…

கொரண்டிப் பூ!

  இளையவன் – செயா  மதுரை பெரியார் ஆண்டு 135 தொ.ஆ.2878  தி.ஆ. 2045 சுறவம் ( தை ) 16            29–01–2014 ஆழி   நீர்ப்பரப்பில்   ஆடுகின்ற  நிழலாய் ஊழிப்   பெருவாழ்   விலுழன்று  உதட்டாலே வாழி   வாழியெனும்  வாழ்த்துக்கு  வயமாகித் தாழியள   வாய்த்தாங்கும்  துன்பச்   சுமைதனை மறப்பதற்   கோர்நாள்   மல்லைநகர்  சென்றிந்தேன் பிறப்பதன்  பெரும்பயனை  பிற்றைநாள்   மக்களுக்கு உரைப்பது  போன்றுருவச்  சிலைகள்  என்னுளத்துச் சிறுகு   மறக்கப்   பெருந்துணை  ஆயிற்றே! மல்லை   நகரின்  மாண்புறு  துறைஅன்று சொல்ல  ரியபொருட்  களைச்சேர்த்  தனுப்பி இல்லை  எமக்கீடென  எழிலுட …