தோழர் தியாகு எழுதுகிறார் 164 : ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 4.

(தோழர் தியாகு எழுதுகிறார் 163 : ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர்3 தொடர்ச்சி) ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 4/4 மரணத் தண்டனைக் கைதியாக இருந்த போதும் சரி, அத்தண்டனை ஆயுள் சிறைத் தண்டனையாகக் குறைக்கப்பட்ட பிறகும் சரி, புலவரைத் தொடர்ந்து தனிக் கொட்டடியிலேயே அடைத்து வைத்தனர். 12 ஆண்டுக்கு மேல் பல்வேறு சிறைகளில் போராட்டமும் அடக்குமுறையுமாகக் கழிந்தபின் பத்திரிகையாளர் கன்சியாம் பருதேசு எடுத்துக் கொண்ட முயற்சியால் புலவர் பிணையில் விடுதலை ஆனார். சற்று முன்பின்னாக அவ்வழக்கில் மற்றவர்களும் விடுதலையானார்கள். சிறையில் புலவரை நான் கடைசியாகப் பார்த்தது 1974 கடைசியில்தான். 1977இல் தொடங்கி…

தோழர் தியாகு எழுதுகிறார் 163 : ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 3.

(தோழர் தியாகு எழுதுகிறார் 162 : ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 2 தொடர்ச்சி) ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 3. 1971இல் ஐயம்பெருமாள் கொலை வழக்கில் புலவர் மீது பொய்க் குற்றம் சுமத்தப்பட்ட போது, அனந்தநாயகியும் அவ்வழக்கில் சேர்க்கப்பட்டார். புலவரின் இரு மகன்களை மட்டுமல்லாமல், தம்பி மாசிலாமணி, பங்காளிகள் இராசமாணிக்கம், ஆறுமுகம் ஆகியோரையும் கூட வழக்கில் சேர்த்தனர். அரசும் காவல் துறையும் தெரிந்தே தொடுத்த பொய் வழக்கு இது. புலவருக்கும் வள்ளுவனுக்கும் தூக்குத் தண்டனை, மற்றவர்களுக்கெல்லாம் ஆயுள் சிறைத்தண்டனை. உயர் நீதிமன்றம் வள்ளுவனுக்கு மட்டும் தூக்குத்…

தோழர் தியாகு எழுதுகிறார் 162 : ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 2

 (தோழர் தியாகு எழுதுகிறார் 161 : ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 1. தொடர்ச்சி) ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 2 ஆனால் அப்போது என் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. ஊர்ப்புறத்தில் தங்கி மக்களோடு வாழ்ந்து மக்களோடு உழைக்க வேண்டும் என்ற தலைமையின் கட்டளையை ஏற்று அப்போதுதான் சில நாளாய்க் கூலிக்குக்  கரும்பு வெட்டப் போய்க் கொண்டிருந்தேன். வெட்டத் தெரியாமல் வெட்டிக் கரும்புத் தோகைகள் உடலெங்கும் கோடு கிழித்திருந்தன. கடின உழைப்புக்குப் புதியவன் என்பதால் உடம்பு கொதித்து வயிற்றுப் போக்கு வேறு வாட்டிக்…

தோழர் தியாகு எழுதுகிறார் 161 : ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 1.

(தோழர் தியாகு எழுதுகிறார் 160 : சித்த மருத்துவப் பேரியக்கம் வேண்டுகோள்-தொடர்ச்சி) இனிய அன்பர்களே! இயக்குநர் வெற்றிமாறனின் கலைப் படைப்பாக வெளிவந்துள்ள விடுதலை திரைப்படம் தமிழ்ப் பரப்பில் பல உரையாடல்களைக் கிளறி விட்டுள்ளது. படத்தின் கதையும் கதைமாந்தர்களும் கற்பனையே என்று தொடக்கத்திலேயே அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், சில கதைமாந்தர்களுக்குச் சூட்டப்பட்டுள்ள பெயர்கள் மெய்யாகவே வாழ்ந்து மறைந்த சிலரை நினைவூட்டுகின்றன. சில நிகழ்வுகளும் அப்படியே! குறிப்பாகவும் சிறப்பாகவும் பெருமாள் வாத்தியார் என்ற பெயர் தோழர் கலியபெருமாளை மனத்திற்கொண்டே சூட்டப்பட்டது என்ற எண்ணம் பரவலாக ஏற்பட்டுள்ளது. வெற்றிமாறனும் இதை…