பண்டைத்தமிழர்களின் வாழ்வியல் அடையாளம் ஏறுதழுவல் – ஈழத்து நிலவன்

  பண்டைத்தமிழர்களின் வாழ்வியலோடு பெரிதும் தொடர்புடைய அடையாளமாக இன்று நம் மத்தியில் எஞ்சி இருப்பது, ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு.   பல நூற்றாண்டுகளைத் தாண்டி நிற்கும் எமது இனத்தின் அடையாளமான ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு என்பது தமிழர்களில் தொன்மைக் குடிகளான ஆயர்களின் (இடையர், கோனார்) மரபுவழி குல விளையாட்டுகளில் ஒன்றாகும்.   ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதுதான் விளையாட்டு.   சல்லிக்கட்டு தற்போதய தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையாக நடைபெறுகிறது. மதுரை…

வீரம் நிறைந்த தமிழினமே! சோரம் போகலாமா? – ஈழத்து நிலவன்

வீரம் நிறைந்த தமிழினமே! சோரம் போகலாமா?  உரக்கச் சொல்வோம் எங்கள் உரிமையை!  உறுதியாய்க் கேட்போம் எங்கள் விடுதலையை ! தென்தமிழீழத்தில் கிழக்கு மாகாணத்தில் மட்டு நகரில் தை 8 / சனவரி 21ஆம் நாள்  சனிக்கிழமை ‘எழுக தமிழ்‘ நிகழ்வு நடைபெறவுள்ளது.   இது காலத்தின் ஒரு முதன்மையான வரலாற்றுக் கடமையாகும். சிங்களப் பேரினவாதிகள் அரச ஆதரவோடு கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்க்கும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் அனைத்துத் தமிழ் மக்களும் எமது ஆதரவை நல்குவோமாக! அம்பாறை, திருகோணமலை,…

போற்றியே தொழுகின்றோம்! -ஈழத்து நிலவன்

  விழிகளை மூடிக் குழிகளில் உறங்கும் வீரக் குழந்தைகளே! – நாங்கள் விடுதலை வென்றிடக் குழிகளை விட்டு வெளியினில் வாருங்கள்! – நீங்கள் வெளியினில் வாருங்கள்! (விழிகளை மூடிக்…) உயிரினைக் கொடுத்து உறவினைக் காத்த உங்களை மறப்போமா? உறங்கியே வாழும் உங்களை மறந்த மனிதராய் இருப்போமா? (விழிகளை மூடிக்…) மானம் அழிவின்றி வாழவே உயிரைத் தானம் செய்தீரே! – இந்த வானமே போற்றும் வையகம் வாழ்த்தும் என்று நீ வாழ்வீரே! (விழிகளை மூடிக்…) நள்ளிரா வேளையில் கல்லறை தேடியே நாம் உமை வணங்குகின்றோம்! –…

கல்லறைகள் கண்ணீர் விடுவதற்கல்ல ! – ஈழத்து நிலவன்

இனம் வாழ இவர் செய்தார் தியாகம்! இவர் எண்ணம் வாழ நாம் செய்வோம் யாகம்! இன்னும் எத்தனைக் காலம்தான் கண்ணீர் விடப் போகின்றீர்கள் இழந்தவற்றை எண்ணி? இன்னும் எவ்வளவு நேரம்தான் கண்ணீர் சிந்தப் போகின்றீர்கள் உங்கள் தனியரின் கல்லறையின் முன்னால் கல்லறைகள் கண்ணீர் விடுவதற்கல்ல கருத்தரிப்பதற்கே! ஓர் இருளின் உகத்தை எரிப்பதற்காகத் தான் அவன் சூரியனாகிப் போனான் போராளி நடந்த சுவடுகளைத் தொட்டுப் பாருங்கள் சுள்ளென்று சுடும் அவன் விடுதலையின் தாகங்கள் ! அவன் உயிரின் ஆன்மா எதை நினைத்து உறங்கிப் போயிருக்கும் தனது…

கல்விமான்களை விட விடுதலை வீரர்களே தேவை 2/2 – ஈழத்து நிலவன்

(கல்விமான்களை விட விடுதலை வீரர்களே தேவை 1/2  தொடர்ச்சி) கல்விமான்களை விட விடுதலை வீரர்களே தேவை 2/2    தனது நாட்டில் சிறுபான்மைத் தேசிய இனங்களை அடக்கி வரும் இந்திய அரசு, ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்கு உதவும் எனச் சிலர் இன்னும் கூறி வருகிறார்கள். இந்தியாவில் தேசிய இனங்களின் உரிமைகளை மறுக்கும் இந்திய அரசு, இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தரும் என்று கூறுபவர்களை என்னவென்று அழைப்பது! மாயமானைக் காட்டி, ஈழத்தமிழர் நீதிக்கான போராட்டத்தைத் திசை திருப்புவோரிடம் எச்சரிக்கையாக இருங்கள்! உலக நாடுகளைச்…

கல்விமான்களை விட விடுதலை வீரர்களே தேவை 1/2 – ஈழத்து நிலவன்

கல்விமான்களை விட விடுதலை வீரர்களே தேவை 1/2   எமது மக்களைப் பாதுகாப்பதற்காக வரலாற்றுத் தன்னியல்பில் எமது கைகளில் ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்கள்! – அடிமைத் தேசத்தில் கல்விமான்களை விட விடுதலை வீரர்களே தேவையானவர்கள்! – ஈழத்து நிலவன்   தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து அவர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தி அவர்களை ஒடுக்கும் வழமையான இலங்கை ஆட்சியே இதுவும் எனத் தன்னை அம்பலப்படுத்திக் கொண்டுள்ளது மைத்திரிபால சிறிசேன – இரணில் ஆட்சி. இன அழிப்பின் நுண்மையான பின்னணிகள்   திடீர் இறப்புகள்,…