தேர்தல் ஆணையம் கோரும் உறுதிமொழி சட்டத்திற்குப் புறம்பானது! – கி.வேங்கடராமன்

மாணவர் வழியாகத் தேர்தல் ஆணையம் கோரும் உறுதிமொழி சட்டத்திற்குப் புறம்பானது! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வேங்கடராமன் கண்டனம்!   “தேர்தலில் வாக்களித்து, சனநாயகத்தில் பங்கு கொள்வீர்” என்ற உறுதிமொழிப் பத்திரம் (Sankalp Patra) தேர்தல் ஆணைய அதிகாரிகளால், அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு, பெற்றோர்களிடம் கையெழுத்து பெற்று வருமாறு மாணவர்கள் வலியுறுத்தப்படுகிறார்கள்.  இந்த உறுதிமொழிப் பத்திரத்தில் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்றும், இதுவரை பதிவு செய்யப்படாதவர்களைப் பதிவு செய்து விடுவோம் என்றும், 2019 ஏப்பிரல் 18 அன்று தமிழ்நாட்டில் நடக்கும்…

மானுடப்பேரவல நினைவேந்தல் – அ.ஈழம் சேகுவேரா

காலப்பெருந்துயர் பகிர்வும், மானுடப்பேரவல நினைவேந்தல் அறிக்கையிடலும்,     ஈழத்தின் இதயப்பண் போராளிக்கலைஞன்  மாநாயகர்(மேசர்) சிட்டு அவர்களின் குரலில், ‘நிலமும் வானும் கடலும் நேற்று அதிர்ந்தது, அந்த நிலவும் வானில் இரவு நேரம் அழுதது. நத்திக்கடல் மௌனமாகக்கரைந்தது. வங்கக்கடல் கோபமாக இரைந்தது…’ என்று ஒலிக்கும் முல்லைத்தீவு வெற்றிச்சமர் நாயகர்களின் நினைவேந்தல் பாடல் காற்றைக்கிழித்து இசைக்க ஆரம்பித்ததும், முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு  முதன்மைச் சாலையில் பயணித்தவர்கள் அனைவரும் தமது போக்குவரத்து ஊர்திகளை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு, ‘விடுதலை’ எனும்  மாபெரும் மரத்திற்காகத் தமது உடல்களை இலட்சிய…

தமிழை மறவாதிருக்க உறுதி ஏற்பிர்! விவரம் அனுப்புவீர்! – தமிழ்க்காப்புக்கழகம்

நாம் தமிழரெனில் உறுதி ஏற்போம்! பெயர் விவரம் வெளியிடப்பெறும். உலகத் தமிழன்பர்களே! தமிழின் வாழ்வே தமிழர் வாழ்வு. எனவே, தமிழ் இறவாதிருக்க நாம் தமிழை மறவாதிருக்க வேண்டும். நம் எண்ணமும் சொல்லும் செயலும் தமிழாகத் திகழ வேண்டும். தமிழர் உலகெங்கும் முதன்மையிடம் பெற வேண்டும் எனில் தமிழ் எங்கெங்கும் தலைமையிடம் பெற வேண்டும். அதற்கு உழைப்பதே நம் ஒவ்வொருவரின் கடமை. இதற்கு உடன்படுபவர்கள், பின்வரும் உறுதிமொழிகளை ஏற்க வேண்டுகிறோம்.   தமிழில் பிற மொழிச் சொற்களைக் கலந்து பேசவோ பிற மொழி எழுத்துகளைக் கலந்து…