இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 29 : ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 28: தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு : 29 1.4.  தலைவர் வாழ்த்து பண்டை நாளில் அரசன் பிறந்த நாளில் அவனைப் போற்றிப் புகழ்வது வழக்கம். இதனை, நாள் மங்கலம் என்று சொல்வர். அறந்தரு செங்கோல் அருள்வெய்யோன் பிறந்தநாட் சிறப்புரைத்தன்று (பு.வெ. 212) அறத்தை உண்டாக்கும் செங்கான்மையையும் அருளையும் விரும்பும் அரசன் பிறந்த நாளினது நன்மையைச் சொல்லியது.  இதனைச்,  ‘சிறந்த நாளினிற் செற்றம் நீக்கிப்   பிறந்த நாள்வயிற் பெருமங் கலமும்’ என்று தொல்காப்பியர்…