ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (19) – வல்லிக்கண்ணன்

[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (18)  தொடர்ச்சி] ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (19) 5. குருபக்தியும் ஐயப்பன் அருளும் காலம் கடந்த கனி அருள் நிலமே ஞாலம் கடந்த நடைதரும் அறமே நீல விண்ணின் நிலைகளின் திறமே சாலப் பண்பார் தவமே குருவே இப்படிப் பாடல்கள் தமிழ் இனிமையை உணர்த்துவதாகவும் ஒலிக்கின்றன. மணியின் ஒசை வாழ்த்தும் ஒளியே அணியின் எழிலே ஆர்வ மொழியே பணியின் செயலே பார்வை வழியே வணங்கும் நுதலே வாழிய குருவே! என்று போற்றிப்பரவும் பாடல்களைக் கவிதை ஒட்டத்துக்காகவும் செஞ்சொல்…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (18) – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (17)  தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (18) 5.குருபக்தியும் ஐயப்பன் அருளும்   “பெருங்கவிக்கோவின் உள்ளம் எதிர் மறைகட்கும் இடமளிப்பது. பக்தியில் பதியும்; பகுத்தறிவை வரவேற்கும்; பழமையின் சீர்மை போற்றும்; புதுமையின் பயனை வாழ்த்தும்;தேசியம் பரவும்; செந்தமிழர் தனி உரிமையும் செப்பும்; உத்தமர் காந்தியையும் போற்றும்; சமதர்ம மாவீரன் இலெனினையும் பாராட்டும்.  ஒரு வகை யில் அது ஒரு தமிழ்க்கடல் எனலாம்.”  இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார் பேராசிரியர் க. அன்பழகனார். இக்கூற்றின் உண்மையைப் பெருங் கவிக்கோவின் கவிதைப் படையல்கள்…

காவும் ஆரியங்காவும் – இரா.பி.சேது(ப்பிள்ளை)

 கா என்னும் சொல் சோலையைக் குறிக்கும். அது காவு எனவும் வழங்கும். மேற்குத் தொடர் மலையில் செங்கோட்டைக்கு அருகே ஆரியங்காவு என்னும் ஊர் உள்ளது. ஆரியன் என்பது ஐயனாருக்குரிய பெயர்களில் ஒன்று. ஐயனாரை மலையாள நாட்டார் ஐயப்பன் என்பர். ஆரியங்காவில் ஐயப்பன் வழிபாடு இன்றும் சிறப்பாக நடைபெறுகின்றது. மேற்குத் தொடர் மலைச்சாரலில் அமைந்த நெடுஞ்சோலையில் ஐயப்பன் கோயில் கொண்டமையால் அவ்வூர் ஆரியங்காவு என்று பெயர் பெற்றதென்பது நன்கு விளங்குவதாகும்.   தொண்டை நாட்டில் திருமாலுக்குரிய திருப்பதிகளுள் ஒன்று திருத்தண்கா எனப்படும். அழகும் குளிர்மையுமுடைய அக்…