ஒலி பெயர்ப்பு வரையறைக் குழு அமைக்க அரசிற்கு வேண்டுகோள்!

சீரான ஒலிபெயர்ப்பை நடைமுறைப்படுத்த  தமிழக அரசிற்குத் தமிழறிஞர்களின் வேண்டுகோள்   மூல மொழிச் சொற்களை உள்ளவாறு உணர்வதற்கு உதவுவது ஒலிபெயர்ப்பு. அந்த வகையில் தமிழ்ச்சொற்களைப் பிற மொழியினர் அறிய உதவுவது ஒலி பெயர்ப்பு. பொதுவாக உரோமன்/ஆங்கில எழுத்துகளில் தமிழுக்கான ஒலிபெயர்ப்பு மிகுதியாகப் பயன்படுத்தப்படுகின்றன. [பிற மொழியாளர்கள் புரிதலுக்காகத்தான் ஒலி பெயர்ப்பே தவிர, தமிழில் ஒலி பெயர்ப்பு முறையில் பிற மொழிச்சொற்களைக் கலக்கக்கூடாது.] ஐரோப்பியர் வருகைக்கு முன்னர், எத்தகைய ஒலி பெயர்ப்பு முறைகளைப் பிற மொழியினர் கையாண்டிருந்தனர் என நமக்குத் தெரியவில்லை. ஐரோப்பியர் வருகைக்குப்பின்னரே தமிழ்…

ஒலிபெயர்ப்பு தொடர்பான முன்மொழிவுகள் பற்றிய கலந்துரையாடல்

    தமிழ்ப்பின்னங்கள், சிறப்புக்குறியீடுகள் ஆகியவற்றின் ஒலிபெயர்ப்பு, தொடர்பான முன்மொழிவுகள்   பற்றிய கலந்துரையாடல் கூட்டம் தமிழக அரசின் சார்பில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் எப்.50 கூடம், முதன்மைக் கட்டடம், சென்னைப் பல்கலைக்கழகம், சேப்பாக்கம், சென்னை 600 005 இல் சித்திரை 16, 2046 / ஏப்பிரல் 29,2016 காலை 10.30 முதல் நடைபெற உள்ளது. இதில் பங்குபெற்று கருத்து தெரிவிக்க விரும்புவோர், தங்கள் கருத்துகளையும் பங்கேற்கும் விழைவையும் மின்னஞ்சலில் தெரிவிக்க வேண்டும்.   அல்லது ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் மணிகண்டன் (044 2844 9537), முனைவர் பாலாசி…

குறியேற்றத்தின் மூலம் தமிழுக்குக் கேடுசெய்வோருக்கு நாக.இளங்கோவன் கண்டனம்!

கணித்தமிழ் ஆர்வலரின் செவ்வி!  தமிழார்வம் மிக்க கணிப்பொறியாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் நாக.இளங்கோவன். கால்நூற்றாண்டிற்கும் மேலாகத் தமிழ்நாட்டிலும் அயல்நாடுகளிலும் கணிணி வல்லுநராகப் பணியாற்றுபவர். 1995 முதல் தமிழ் இணையத்தில் கருத்து செலுத்தி வருபவர்.   2009-ல் எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில் தமிழ் எழுத்துச் சிதைவு முயற்சிகள் நடைபெற்ற பொழுது பொங்கி எழுந்தவர்களுள் இவரும் ஒருவர். நடக்க இருந்த தமிழ்ச் சிதைப்பைக் கட்டுரை மூலமாக மட்டுமல்லாமல் தமிழ் எழுத்துக் காப்பியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவராகச் செயல்பட்டு அதன் எதிர்ப்புப் பணிகளில் தன்னை இணைத்துக் கொண்டவர்.  ஒருங்குகுறியில் 2010 இல் நிகழ…

தமிழ் ஒருங்குகுறியில் மீண்டும் ஏற்படுத்தப்படும் குழப்பம்! -முனைவர் மா.பூங்குன்றன்

உலகெங்கும் பேசப்படும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகளுக்கும் தனித்தனி எழுத்தமைப்புகள் உண்டு. ஒரு மொழியில் அமைந்துள்ள சில சிறப்பு எழுத்துகள் பிறவற்றில் இருக்கா. மொழி, ஒலி வடிவை அடிப்படையாகக் கொண்டது. அம் மொழியில் உள்ள ஓர் அலகைத் தனியாகப் பிரித்து அந்த அலகிற்கு ஓர் எழுத்து என்று வகைப்படுத்தி, அதற்கு வரிவடிவம் கொடுத்தனர். ஒலி வடிவத்திற்கு வரிவடிவம் கொடுத்தது மொழியியல் உலகில் மிகப்பெரிய திருப்புமுனையாகும். தமிழ் மொழியின் எழுத்து வடிவத்திற்கு மிக நீண்டகால வரலாறு உண்டு. தமிழ் எழுத்துகள் கீறப்பட்ட பானையோடுகள் தொல்லியல் அகழ்வாய்வுகளில் கிடைக்கின்றன….

தமிழி – உரோமன் எழுத்துப்பெயர்ப்பு – 1 : முனைவர் இராம.கி

  ஒருங்குறியிற் தமிழ் – தேவைகளும், தீர்வுகளும் (Tamil in Unicode – requirements and solutions) என்ற கருத்தரங்கு மார்ச்சு 5 இல் தமிழிணையக் கல்விக்கழகத்தில் நடந்தது. அப்போது சென்னையில் நான் இல்லாததால் என்னாற் கலந்து கொள்ள இயலவில்லை. அதுபற்றித் தமிழிணையக் கல்விக்கழக நெறியாளரிடம் முன்னரே தெரிவித்திருந்தேன். அந்தக் கருத்தரங்கில் தமிழ்ப் பின்னங்கள், குறியீடுகள் – பெயரிடலும் கீற்றுகளும் [Tamil Fractions and Symbols – Naming and Glyphs] தமிழ் அனைத்தெழுத்துக் குறியேற்றம் [Tamil All Character Encoding (TACE-16)] ஓரிந்தியா…