மொழி பெயர்ப்போம்! – அருணகிரி

மொழி பெயர்ப்போம்!  உலகப் புகழ் பெற்ற எண்ணற்ற நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுத் தமிழில் வெளிவந்து உள்ளன. அதன் வழியாகப் புதிய கருத்துகள் தமிழகத்தில் பரவி இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் மாசுகோ முன்னேற்றப்பதிப்பகம் தொடர்ந்து பதிப்பித்து வந்த நூற்றுக்கணக்கான மொழிபெயர்ப்பு நூல்கள்தாம் இந்தியாவிலும் தமிழகத்திலும் பொது உடைமை இயக்கத்தின் கருத்துப் பரவலுக்குப் பெருமளவில் உதவின. அத்துடன், அவற்றைப் படித்த வாசகர்களின் மனங்களில் இரசிய நாட்டின் நில அமைப்பு, மக்களின் வாழ்க்கை முறைகள்,  தொழிலாளர்கள் போராட்டங்களைப் பற்றிய விவரங்களைப் பசுமரத்து ஆணி போலப் பதியச் செய்து விட்டன. அப்படி உருவான பல…

திருவள்ளுவரும் கன்ஃபூசியசும் – விருதாளர் தைவான் யூசி உரை

ஒன்பான் விருதுகளை அறிவித்த தமிழக அரசு திருவள்ளுவர் நாளன்று விருதுகள் வழங்கப்பெறும் என்றும் அறிவித்தது. பின்னர் இவ்விருதுகள் குடியரசு நாளன்று வழங்கப்பெறும் என்று அறிவித்தது. எனினும் திருவள்ளுவர் விருது மட்டும் திருவள்ளுவர் நாளன்றே வழங்கப் பெறும் என அறிவித்தது. இதன்படி தை 2 ஆம் நாளான சனவரி 16 அன்று திருவள்ளுவர் விருது, திருக்குறளைச் சீன மொழியில் மொழிபெயர்த்த தைவான் நாட்டுக் கவிஞர் யூசிக்கு வழங்கப்பெற்றது.  தமிழக நிதி-பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உரூபாய் நூறாயிரத்திற்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரைச் சான்று ஆகியவற்றை…