சங்கப் புலவர்கள் பொன்னுரை – 33: பகுத்துண்டும் நோயின்றியும் நெடுங்காலம் வாழ்க! – இலக்குவனார் திருவள்ளுவன்
(மிகுதியான எதுவும் அற வழிக்குத் தடையாகும்!: சங்கப் புலவர்கள் பொன்னுரை – 32 – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 33 பகுத்துண்டும் நோயின்றியும் நெடுங்காலம் வாழ்க! *** தீதுசேண் இகந்து நன்றுமிகப் புரிந்து கடலும் கானமும் பலபயம் உதவப் பிறர்பிறர் நலியாது வேற்றுப்பொருள் வெஃகாது மைஇல் அறிவினர் செவ்விதின் நடந்துதம் அமர்துணைப் பிரியாது பாத்(து)உண்டு மாக்கள் மூத்த யாக்கையொடு பிணிஇன்று கழிய பாடியவர் : ஆசிரியர் பாலைக் கௌதமனார் பதிற்றுப்பத்து : 22 அடிகள் 5 – 10 (பாடலின் மொத்த…
