மக்கள் கவிஞர் இன்குலாபு காலமானார்

மக்கள் கவிஞர் இன்குலாபு காலமானார் மக்கள் கவிஞர் இன்குலாபு காலமானார்  தமிழக உழைக்கும் மக்களின் பெருங்கவிஞர் இன்குலாபு இன்று கார்த்திகை16,2047/1.12.2016) இயற்கையோடு கலந்தார்.  உடல்நலக்குறைவினால் சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர் நோயிலிருந்து மீளாமல் காலமானார். பல்வேறு தரப்பினரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  இன்குலாபு தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், இதழாளர், பத்தி எழுத்தாளர், பொதுவுடைமைச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையாளர் ஆவார். குமுகாயச் சிக்கல்கள், ஒடுக்குமுறைகள் போராட்டங்கள் ஆகியவற்றை மையப்படுத்தியே இவருடைய படைப்புகள் அமைந்திருந்தன.  …

மேனாள் துணைவேந்தர் அறிஞர் கதிர்.மகாதேவன் இயற்கை எய்தினார்.

மேனாள் துணைவேந்தர் அறிஞர் கதிர்.மகாதேவன் இயற்கை எய்தினார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கதிர்.மகாதேவன் (80) மதுரை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (சித்திரை 09, 2047 / ஏப்.22) காலை இயற்கை எய்தினார்.   இவர் எழுதியுள்ள முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களுள் ‘ஒப்பிலக்கிய நோக்கில் சங்கக் காலம்’ என்ற நூல் குறிப்பிடத்தகுந்தது. இந்நூலுக்குத் தமிழக அரசின் விருது கிடைத்தது. ஆங்கிலத்திலும் தமிழ் இலக்கியம் தொடர்பான நூல்களை எழுதித் தமிழ்த்தொண்டாற்றினார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் சுற்றத்தினருக்கும் இலக்குவனார்…

தமிழனின் தனிக்குணம்! – இடைமருதூர் கி.மஞ்சுளா

தமிழனின் தனிக்குணம்!    சென்னை, தியாகராய நகரிலிருந்து பாரிமுனை செல்லும் அரசுப் பேருந்தில் உட்கார்ந்திருந்த வெளிநாட்டு இளைஞன் ஒருவன், தன் அருகில் அமர்ந்திருந்த  முதியவரைப் பார்த்து, அவன் மொழியில் “உங்கள் தமிழ்நாடு மிகவும் நல்ல நாடு” என்றான். “ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?” என்று அவனது மொழியிலேயே அந்த முதியவர் வியப்பாக அவனைப் பார்த்துக் கேட்டார். “எங்களுக்கு உங்கள் மொழி தெரியாது. ஆனாலும், சென்னையில் உள்ள கடைகளில் எல்லாம் எங்கள் மொழியை முதன்மைப்படுத்தி, ஆங்கிலத்தில் பெயர்ப் பலகைகளை வைத்து, தமிழ்நாடு எங்களுக்கு எப்படி உதவுகிறது பார்த்தீர்களா?…

தமிழ்ப்பெயர் சூட்டாஅமைச்சர் கோகுல இநதிராவிற்குத் தமிழ்க்காப்புக்கழகம் கண்டனம்

தமிழ்ப்பெயர் சூட்டாஅமைச்சர் கோகுல இநதிராவிற்குத் தமிழ்க்காப்புக்கழகம் கண்டனம். கைத்தறி – துணிநூல் துறை அமைச்சர் மாண்புமிகு கோகுல இந்திரா நேற்று மூவண்ணப் புதிய சேலை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். அப்பொழுது அந்தச் சேலைக்கு ‘செய த்ரியம்பிகா’ எனப் பெயர் சூட்டியுள்ளார். இதன் மூலம் தமிழக அரசிற்குக் களங்கம் ஏற்படுத்தி உள்ளார். தமிழ் மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே துணி நெசவில் சிறப்புற்று இருந்தனர். பாலாடை போன்ற மெல்லிய ஆடை நெய்வதிலும் பூ வேலைப்பாடு மிக்க ஆடை நெய்வதிலும் வல்லமை பெற்றிருந்தனர். உரோம் முதலான வெளிநாடுகளில் இதற்கு…