கலைச்சொல் தெளிவோம்! 76. கணம்-Cirrostratus

 76. கணம்-Cirrostratus   கணம் அடுத்த அடுக்கில் 8000 பேரடி(மீட்டர்) உயரத்தில் கூட்டம் கூட்டமாக உள்ள குவியடுக்கு முகிலின் பெயர் கணம். மழைக் கணம் சேக்கும் மா மலைக் கிழவன் (புறநானூறு : 131.1) அமிழ்துதிகழ் கருவிய கணமழை தலைஇக் (பதிற்றுப்பத்து : 17.11) இவ்வாறு இடி, மின்னல் இணைந்த மழை முகிலைக் கணம் எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன. இதனையே சிர்ரோசுதிரட்டசு/Cirrostratus எனக் குறிப்பிடுகின்றனர். கணம்-Cirrostratus – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம்! 75. செல்-Cirrocumulus

 75. செல்-Cirrocumulus   செல்   செல்(117) என்பதற்கு உள்ள சில பொருள்களில் ஒன்று முகில் என்பதாகும். “வான்முழக்குச் செல்” (பரிபாடல் 13.44) என்னும் பொழுது இடி முழக்கத்துடன் இணைந்த மழைமுகிலைக் குறிப்பிடுகின்றது. இத்தகைய தன்மை உடைய 7000 பேரடி (மீட்டர்) உயரத்தில் உள்ள சுருள்குவிவு முகில் சிர்ரோகியூமுலசு/Cirrocumulus எனப்படுகின்றது. செல்-Cirrocumulus – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம்! 74. மை-Altostratus

 74. மை-Altostratus  மை 6000 பேரடி(மீட்டர்) உயரத்தில் உள்ள இடைஅடுக்கு முகிலே மை என்பது. மை(110) எனில், கருநிறம், வண்டி மை, பசுமை, குற்றம் என்பன போன்று பல பொருள்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் முகில் என்பது. மைபடு சென்னி (கலித். 43), “மைபடு மால்வரை”(நற்றிணை : 373:3. ) “மைபடு சிலம்பின்” (குறுந். 371 & பரிபாடல் : 16:2) “மைபடு குடுமிய குலவரை” (பரிபாடல் : 15:9-10) என்னுமிடங்களில், ‘மை’ மலைகளில் தவழும் முகிலைக் குறிக்கின்றது. மழைக் கருக்கொண்டபின் கருமையாய் அமையும்…

கலைச்சொல் தெளிவோம்! 73. கார்-Altrocumulus

 73. கார்-Altrocumulus   கார் கடல் முகந்து வந்தன்று, கார்! (முல்லைப்பாட்டு : வெண்பா 2) காரும் ஆர்கலி தலையின்று. தேரும் (அகநானூறு : 54.3) கார் புறந்தந்த நீருடை வியன் புலத்துப் (குறுந்தொகை : 162.1) தளி தரு தண் கார் தலைஇ (நற்றிணை : 316.9) கார்கலித்து அலைப்ப (ஐங்குறுநூறு : 496.2) என்பன போல் சங்க இலக்கியத்தில் 139 இடங்களில் வந்திருந்தாலும் கார் முகிலையும் கார் பருவத்தையும் இச் சொல் குறிக்கின்றது. 5000 பேரடி(மீட்டர்) உயரத்தில் மழை பெய்யும் நிலையில்…

கலைச்சொல் தெளிவோம்! 72. விண்டு-Stratocumulus

72. விண்டு-Stratocumulus விண்டு   விண்டு சங்க இலக்கியத்தில் 8 இடங்களில் பயன்படுத்தப் பெற்றுள்ளது. எனினும் மலையைத்தான் குறிக்கிறது. ஆனால், விண்டுச் சேர்ந்த வெண்மழை போல (பதிற்றுப்பத்து 55.15) விண்டு முன்னிய புயல்(பதிற்றுப்பத்து (84.22) என்பன போல், பெரும்பாலும் மழை முகிலோடு தொடர்பு படுத்தியே விண்டு குறிக்கப்பெறுகின்றது. பிங்கல நிகண்டு விண்டு என்பதன் ஒரு பொருளாக முகிலையும் குறிக்கின்றது.   விண்டு ஆகிய மலையில் குவியும் முகில் பின்னர் விண்டு என்றே அழைக்கப் பெற்றிருக்க வேண்டும். எனவே, சங்க இலக்கியங்களில் பயன்பெற்ற சொல் என்ற…

கலைச்சொல் தெளிவோம்! 71. முதிரம்-Cumulonimbus

 71. முதிரம்-Cumulonimbus முதிரம்   புறநானூற்றில் வரும் இரு பாடல்களிலுமே உயர்கொடை வள்ளல் குமண மன்னன் ஆட்சிப்பரப்பிற்குட்பட்ட முதிரமலையையே முதிரம் என்பது குறிக்கின்றது. பின்னரே இச்சொல் முகிலைக் குறிப்பதாய் அமைந்துள்ளது.   மூவாயிரம் பேரடி(மீட்டர்) உயரத்தில் உள்ள அடுத்த முகில்கூட்டத்தின் பெயர் கியூமுலோநிம்பசு-Cumulonimbus என்பதாகும். இதனையே முதிரம் எனக் குறிக்கலாம். முதிரம்-Cumulonimbus – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம்! 69. விசும்பு-stratus

69. விசும்பு-stratus  எழிலிக்கு அடுத்த அடுக்கில் 1000 பேரடி(மீட்டர்) தொலைவில் உள்ள பாவடி முகில் குறித்து அடுத்துப் பார்ப்போம்.  விசும்பு என்னும் சொல்லைச் சங்கப் புலவர்கள் 164 இடங்களில் கையாண்டுள்ளனர்; விசும்பு வானத்தையும் குறிக்கின்றது, வானத்தில் உள்ள முகில்கூட்டத்தையும் குறிக்கின்றது. முகில் என்னும் பொருளில் ‘விசும்பு’ வரும் சில இடங்கள் வருமாறு : ஒருகை நீல் நிற விசும்பின் மலி துளி பொழிய ஒருகைவான் அரமகளிர்க்கு வதுவை சூட்ட (திருமுருகு ஆற்றுப்படை : 115-116) நீல் நிற விசும்பின் வல்லேறு சிலைப்பினும் (பெரும்பாணாற்றுப்படை :…

கலைச்சொல் தெளிவோம்! 68. எழிலி-nimbostratus

 68. எழிலி-nimbostratus   முகிலியல் (science of clouds)   முகில் கூட்டங்களை முகில் (அல்லது மேகம்) என்றே நாம் வேறுபாடு அறியாமல் கூறுகிறோம். கிளெடு (cloud) எனில் முகில் என மனையறிவியலிலும், முகில், மேகம் எனப் பொறிநுட்பவியல் புவியறிவியல் ஆகிய துறைகளிலும் கொண்டல், மேகம் என வேளாணியலிலும் தெரிவிக்கப்பட்டுள்ளன. வான் மழை பெய்யும் முகில் கூட்டம் பல வகையாய் உள்ளது என 19ஆம் நூற்றாண்டில் அறிவியலாளர்கள் கண்டறிந்தனர். ஆவர்டு (Luke Howard 1772-1864) என்னும் பிரித்தானிய அறிஞர் வெவ்வேறு வகை முகில் கூட்டம்…

கலைச்சொல் தெளிவோம்! 66. விசைப்பி-switch : இலக்குவனார் திருவள்ளுவன்

  66. விசைப்பி-switch விசை(35), விசைத்த(1), விசைத்து(6), விசைப்ப(1), விசைப்பு (ள) என விசை பற்றிச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. விசைத்திறன் பெற இணைப்பாக இருந்து இயக்குவதை விசைப்பி எனலாம். சுவிட்ச்(சு)/switch-(ஆட்.) பொருத்தி, இணைப்பி, திறப்பான், நிலைமாற்றி (வேதி.) இணைப்பி. (பொறி.) இணைப்பி, பாதைமாற்றி (மனை.), இணைப்புமாற்றி, நிலைமாற்றி, (தக.) நிலைமாற்றி என இப்பொழுது வெவ்வேறு வகையாகக் கூறுவதை விட விசைக்கு உதவுவதை விசைப்பி என்பது பொருத்தமாக அமையும். விசைப்பி-switch – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம்! 65.முடுக்கி-accelerator இலக்குவனார் திருவள்ளுவன்

65.முடுக்கி-accelerator    ஆக்சிலெரேட்டர் (accelerator) என்பதற்கு உயிரியல், வேதியல், மீனியல்,மனையியில், தகவலியல் ஆகியவற்றில் முடுக்கி என்றும் பொறி யியலில் முடுக்கி என்பதுடன் ஊக்கி என்றும் கையாளுகின்றனர். இலங்குதுளை செறிய ஆணி முடுக்கி (மலைபடுகடாம் : 27) என்பதன் அடிப்படையில் முடுக்கி என்ற சொல்லையே சீராகக் கையாளலாம். முடுக்கி-accelerator – இலக்குவனார் திருவள்ளுவன்

கருவிகள் 1600 : 961-1000 : இலக்குவனார் திருவள்ளுவன்

961.  நிலைத்தடை நேர்மின் திறன்மானி constant-resistance dc potentiometer   962. நிலைநீர்மப் பாகுமைமானி stokes viscometer செங்குத்துக் கண்ணாடிக்குழாயில் நீர்மம் நிலையாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டது. கேபிரியேல் இசுடோக்கு ( Sir George Gabriel Stoke :13.08.1819 – 01.02.1903) என்னும் அயர்லாந்து நாட்டைச் சார்ந்த கணக்கியல் இயற்பியலாளர் பெயரில் வழங்கப்படுகிறது. நிலைநீர்மப் பாகுமைமானி எனலாம். 963. நிலைநீரியல்அளவி hydrostatic gauge   964. நிலைப்பிலா ஈர்ப்புமானி astatized gravimeter   965. நிலைமின் சுழல் நோக்கி electrostatic gyroscope   966….

கருவிகள் 1600 : 881-920 : இலக்குவனார் திருவள்ளுவன்

881. தூய்மி நிறமாலை ஒளிமானி dobson spectrophotometer   வளிமண்டிலத் தூய்மியை அளவிடுவதற்குரிய தொடக்கக்காலக் கருவியாகும்; கோர்டன் தாபுசன் என்னும் அறிவியலாளரால் 1924 இல் கண்டுபிடிக்கப்பட்டது. தாபுசன் நிறமாலைஒளிமானி/ தாபுசன் நிறமாலைமானி/தாபுசன்மானி/ என்றும் அழைப்பர். 882. தூள் பாய்மமானி powder flowmeter   883. தெரிவுக் கதிரி selective radiator   884. தெவிட்டு உள்ளகக் காந்தமானி saturable-core magnetometer   885. தேக்க அலைவுநோக்கி storage oscilloscope   886. தேய்கிளர்   அளவி limen gauge   887. தேனிரும்பு மின்னோடிமானி…