கவிஞர் அ.வெண்ணிலாவிற்குப் புதுமைப்பித்தன் விருது

கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ புதினத்திற்குப் ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதினைத்’ தமிழ்ப் பேராயம் வழங்கியது சென்னை காட்டங்குளத்தூரிலுள்ள திரு.இரா.நி. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ்ப்பேராயத்தின் எட்டாம் ஆண்டுவிழாவில், கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ எனும் வரலாற்றுப் புதினத்திற்குப் ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதினை’யும், பரிசுத் தொகை உரூ.50 ஆயிரமும் வழங்கினர். இவ்விழாவிற்கு, திரு.இரா.நி.(எசுஆர்எம்) பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தமிழ்ப் பேராயத்தின் புரவலரும், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தா.இரா.பாரிவேந்தர் தலைமையேற்றார். தமிழ்ப் பேராயத்தின் தலைவர் முனைவர் கரு.நாகராசன் வரவேற்புரையாற்றினார். கவிப்பேரரசு வைரமுத்து, கவிஞர் அ.வெண்ணிலாவுக்குப் ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருருதினை’யும்,…

புதுமைப்பித்தன் அறக்கட்டளைச் சொற்பொழிவு, சென்னை

கார்த்திகை 14, 2049 வெள்ளி  30.11.2018 பிற்பகல் 3.00 பவளவிழா கலையரங்கம், சென்னைப் பல்கலைக்கழகம் புதுமைப்பித்தன் அறக்கட்டளைச் சொற்பொழிவு பொழிஞர்:  கவிஞர் அ.வெண்ணிலா தமிழ் இலக்கியத்துறை சென்னைப்பல்கலைக்கழகம்

அரிக்கேன் வெட்சு அமைப்பின் மூன்றாவது ஆண்டு விழா

அரிக்கேன் வெட்சு அமைப்பின் மூன்றாவது ஆண்டு விழா “தொண்டு மனப்பான்மை இருந்தால் புற்றுநோயையும் எதிர்த்துப்போராடி வாழமுடியும்!’’     சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் (1988) ஒன்று சேர்ந்து உருவாக்கி இருக்கும் தொண்டு நிறுவனம் அரிக்கேன் வெட்சு என்ற நிறுவனம். இதன் மூன்றாவது ஆண்டு விழா ஐப்பசி 10, 2049 சனிக்கிழமை, 27-10-2018 அன்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி.பாலச்சந்திரன், பல்கலைக்கழகப் பதிவாளர்  தென்சிங்கு ஞானராசு ஆகியோருடன் கவிஞர் அ.வெண்ணிலா, கில்ட் ஆப்…

கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய நூலுக்குப் பரிசு –  பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வழங்கினார் 

கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய நூலுக்குப் பரிசு –  பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வழங்கினார்    தமிழ்நூல் வெளியீடு – விற்பனை மேம்பாட்டுக் குழுமம் சார்பில் கடந்த  ஆகட்டு 17 முதல் 27 வரை புத்தகத் திருவிழா சென்னை இ.கி.அ.(ஒய்எம்சிஏ) திடலில் நடைபெற்றது.    புத்தகத் திருவிழாவின் நிறைவு நாளான நேற்று( ஆவணி 11, 2049 -27.08.2018 அன்று) , 2017-ஆம் ஆண்டில் வெளியான சிறந்த தமிழ் நூல்களை எழுதிய படைப்பாளர்களுக்குப் பரிசும் பாராட்டும் வழங்கப்பட்டன.   இவற்றுள் கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘எங்கிருந்து தொடங்குவது’…

கவிஞர் அ.வெண்ணிலா தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றார்!

  கவிஞர் அ.வெண்ணிலா  தமிழக அரசின் நல்லாசிரியர் விருது  பெற்றார்!     வந்தவாசி. செப்.05. வந்தவாசி அரசுப் பெண்கள் மேனிலைப்பள்ளியின் கணிதப் பட்டதாரி ஆசிரியரும் கவிஞருமான அ.வெண்ணிலாவுக்கு, தமிழக அரசின்  நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.         தமிழக அரசு ஆண்டுதோறும் சிறப்பாகக் கல்விப்பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு  அறிஞர்  இராதாகிருட்டிணன் விருதினை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. இந்தாண்டு செய்யாறு கல்வி மாவட்டத்தில் சிறப்பாகக் கல்விப்பணி ஆற்றிய ஆசிரியருக்கான நல்லாசிரியர் விருது, வந்தவாசி அரசுப் பெண்கள் மேனிலைப்பள்ளியில் கணிதப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றிவரும் அ.வெண்ணிலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.     …