கா.சு., இலக்குவனார், அ.ச.ஞா., சுரதா போற்றி விழா,நாகப்பட்டினம்

கா.சு., இலக்குவனார், அ.ச.ஞா., சுரதா போற்றி விழா தமிழ் வளர்ச்சித் துறை நாகப்பட்டினம் தமிழறிஞர்கள், எழுத்தாளர்களைச் சிறப்பிக்கும் இலக்கியக் கருத்தரங்கம் கார்த்திகை 08, 2053 24.11.2022 வியாழன் முற்பகல் 10.00 பேராசிரியர் கா.சுப்பிரமணியன் பேராசிரியர் சி.இலக்குவனார் பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தனார் கவிஞர் சுரதா ஆகியோரைச் சிறப்பிக்கும் இலக்கியக் கூட்டம் இடம்: மீன்வளப் பொறியியல் கல்லூரி காஞ்சூர் சோதனைச் சாவடி நாகூர், நாகப்பட்டினம்

சொல்லாக்க நெடு வழியில். . . . இராம. குருநாதன்

சொல்லாக்க நெடு வழியில். . . . கவிஞர் சுரதாவின் தமிழ்ச்சொல்லாக்க நூலின் முன்னுரை புதுப்புது தேடல்களை ஆர்வத்தோடு எல்லாத் துறைகளிலும் ஈடுபாட்டோடு அணுகும்போது பழைய சுவடுகளையும் நினைத்துப் பார்ப்பது ஒருவகையில் ஆர்வத்தைக் கிளறச் செய்யும். இந்த மலரும் நினைவுகள் எல்லாவற்றுக்கும் பொருந்தும். பழைய திரைப்படப் பாடல்களில் மனம் பதித்து அதிலேயே பற்றுக்கொண்டிருப்பவர்களை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். இப்படிப்பட்ட உணர்வை, உவமைக் கவிஞர் சுரதா, பழைய நூல்களிலிருந்து திரட்டி வைத்திருந்த அரிய சொல்லாக்கங்களைச் சுவைபடத் தொகுத்ததன் மூலம் தந்திருக்கிறார். தமிழின் சொற்பொருள் வரலாற்றைக், குறிப்பாக,…

இலக்கிய அமுதம் – கவிஞர் சுரதாவின் எழுத்துகள்: திரு அமுதோன்

ஆவணி 29, 2050 ஞாயிறு 15.09.2019 மாலை 5.00 குவிகம் இல்லம் ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர் நகர், சென்னை 600 017 கவிஞர் சுரதாவின் எழுத்துகள்: சிறப்புரை: திரு அமுதோன்

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙே] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடர்ச்சி – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙெ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை-தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙே] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடர்ச்சி  படிப்பு, பரப்புரை ஆகியவற்றுடன் படைப்புப் பணியிலும் பேராசிரியர் இலக்குவனார் ஈடுபட்டார். பண்டைநலம், புதுப்புலமை, பழம்பெருமை அனைத்தையும் நல்கிய படைப்புப் போராளியாகவும் பேராசிரியர் தம்மை வெளிப்படுத்தி உள்ளார். கல்விக்கூட அளவில் கவிதைகளும் இதழ்கள் வழிக் கட்டுரைகளும் படைத்த பேராசிரியர் வித்துவான் தொடக்கநிலை மாணவராக இருந்த பொழுதே சிறந்த நூலாசிரியராகவும் மொழிபெயர்ப்பு வல்லுநராகவும் திகழ்ந்துள்ளார்; ‘எழிலரசி அல்லது காதலின் வெற்றி’ என்னும்…

தமிழ் மறுமலர்ச்சியின் குறியீடு பேராசிரியர் இலக்குவனார்

தமிழ் மறுமலர்ச்சியின் குறியீடு பேராசிரியர் இலக்குவனார்     கல்வித்துறையில் இருந்து போராட்டப் பாதையில் நடைபோட்டுத் தமிழ் மறுமலர்ச்சிக்குப் பாடுபட்டவர் தமிழ்ப்புரட்சியாளர் பேராசிரியர் இலக்குவனார். இவ்வாரத்தில் பேராசிரியர் இலக்குவனாரின் நினைவுநாளான செப்.3 வருவதால் (கார்த்திகை 01, தி.பி.1940/17.11.1909 – ஆவணி 18, தி.பி.2004 / 03.09.1973) அவரை நினைவுகூரும் வகையில் சில படைப்புகள் இவ்விதழில் வெளிவந்துள்ளன. இதழ்கள், மலர்கள், நூல்கள் முதலானவற்றில் தமிழ்ப்போராளி பேராசிரியர் இலக்குவனார்பற்றி வந்துள்ள கவிதைகள், கட்டுரைகள், கட்டுரைகளின் பகுதிகள்   தரப்பட்டுள்ளன.  வீரத் தமிழர்வெற்றிப் படையை ஊக்கிய செம்மல் எனக் கவியோகி…