தந்தை பெரியாரின் இந்தி எதிர்ப்பு பற்றிய சிந்தனைகள் தொடர்ச்சி: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

(தந்தை பெரியார் சிந்தனைகள் 34 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 35 தன்வாழ்வைத் தொண்டாக்கித் தமிழ்நாட்டைவளமாக்கத் தகுஞ்செயல்கள்நன்றாற்றி நம்பெரியார் ஈ.வெ.ராமுதுமைதனைக் கண்ட போதில்தென்னாட்டில் தமிழகத்தில் இந்திஎனும்புன்மொழியைத் தேசப் பேரால்சென்னைமுதல் அமைச்சரவர் கட்டாயம்ஆக்கிவிடத் திட்டம் செய்தார்! (1) தாய்மீதில் விருப்பற்ற ஓரிளைஞன்தன்னுழைப்பைத் தாய்நாட்டிற்கேஈயென்றால் மதிப்பானா? எதிரிமொழிமதித்துயிரவைத் திருப்பான் பேடி!தூயதமிழ் நாட்டில்செந் தமிழ்மொழியைமன்றத்திந்தி தோன்றின் நாடேதாயென்ற நிலைபோகும்! தமிழ்சாகும்!இந்தியெனும் கனிமே லாகும்! (2) ஈதறிந்த ஈரோட்டுத் தத்தாதாம்ஓயாமல் எழுத்தி னாலும்மோதியுணர் வலையெழுப்பி மக்களைத்தம்வயப்படுத்தும் மொழியி னாலும்தீதுவரும் இந்தியினால்! முன்னேற்றம்தடையாகும்! தீந்த மிழ்க்கும்ஆதரவு கிடைக்காமல் அழிவுவரும்!இந்திஉயர் வாகும்…

தந்தை பெரியாரின் இந்தி எதிர்ப்பு பற்றிய சிந்தனைகள் தொடர்ச்சி: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

(தந்தை பெரியார் சிந்தனைகள் 33 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 34 (எ) இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி நம்நாட்டு மகளிர் மனத்தையும் கொள்ளை கொண்டது. அவர்களும் மொழிப்போரில் ஈடுபட்டனர். 1938 நவம்பர் 13-இல் சென்னையில் மகளிர் மாநாடு நடைபெற்றது. திருவாட்டி நீலாம்பிகை அம்மையார் (மறைமலையடிகளின் திருமகளார்) மாநாட்டுத்தலைவர். இம்மாநாட்டில் தந்தைபெரியார் ஆற்றிய சொற்பொழிவு தமிழர்களின் நெஞ்சில் பாய்ந்தது; உரிமை உணர்ச்சியை எழுப்பிவிட்டது. இம்மாநாட்டில்தான் ஈ. வெ. இராமசாமி பெயருக்கு முன் பெரியார் என்னும் அடைமொழி கொடுத்து அழைக்க வேண்டும் என முடிவு செய்தனர். (ஏ) பெரியார் மீது வழக்கு: இம்மாநாடு முடிந்தபின் பல பெண்கள் மறியல்…